நீங்கள் வலைப்பதிவரா? நீங்கள் ஒரு வலைப்பக்கத்திற்கு சொந்தக்காரரா? அல்லது நீங்கள் வலைப்பக்கத்தை வடிவமைப்பவரா?
ஒரு சில வலைப்பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கலாம். அது நமது வலைப்பூவாக இருக்கிற பட்சத்தில், நமது நண்பர்களோ அல்லது வாசகர்களோ நம்மிடம் 'ஏன் உங்கள் வலைப்பக்கம் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது?' என கேட்கும் பொழுது, அது எதனால் என நாம் எப்படி அறிந்து கொள்வது?
நமது தளத்தில் உள்ள ஏதாவது விஜிட்டினாலோ அல்லது ஏதாவது ஒரு லிங்க், படம் அல்லது ஓட்டுப் பட்டை என ஏதோ ஒன்று லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. இதை கூகிள் க்ரோம் உலாவியில் எப்படி கண்டறிவது என்று பார்க்கலாம்.
அந்த குறிப்பிட்ட வலைப்பக்கத்தை கூகிள் க்ரோம் உலாவியில் திறந்து கொள்ளுங்கள். பிறகு அந்த பக்கத்தில் வலது க்ளிக் செய்து, Context menu வில் Inspect element ஐ க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Developer Tools விண்டோவில் Resources பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது You need to enable resource tracking to use this panel என்பதில் Only enable for this session என்பதை தேர்வு செய்து Enable resource tracking பொத்தானை அழுத்துங்கள்.
அந்த வலைப்பக்கம் மறுபடியும் லோட் ஆகும். இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஐட்டமும் லோட் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
.
3 comments:
இப்போது புரிகிறது ஆசானே! என் வலைப்பக்கத்தில் 'பழைய கதைகள் ' என்ற தலைப்பில் ஒரு widget நகரும் படங்களாக முந்தய பதிவுகளை காட்டிகொண்டிருக்கும். அதுவே திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதை இதன் மூலம் அறிந்து கொண்டேன். அவைகளை மீண்டும் முன்போல வெறும் தலைப்புகளாக மாற்றி விடுகிறேன் சூர்யா. தங்களின் உதவிக்கும்,அன்புக்கும் நன்றி.
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் நண்பரே! developer tool ல load ஆகிறத பார்க்க முடியுது. ஆனா ஒன்னும் புரியல. எப்படி லேட்டா லோட் ஆகிறத சரி பண்றது?
Post a Comment