அனைத்து இயங்குதளங்களும் வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது போல தோன்றுகிறது. பெரும்பாலான மௌஸ்களும் அப்படியே.
விண்டோஸ் இயங்குதளத்தில் மௌசை இடது கை பழக்கத்திற்கு மாற்றுவதற்கு வழி உண்டு. ஆனால் பொத்தான்களின் பயன்பாடுகள் மட்டும் திசை மாறுமே தவிர்த்து மௌஸ் பாயிண்டர்கள் அப்படியேதான் இருக்கும். அதனால் இடது கை பழக்கமுடைய ஒரு சிலரின் பணி ஆற்றல் குறைந்து காணப்படுவதுண்டு. இதற்கு ஒரு எளிய தீர்வை பார்க்கலாம்.
இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியிலிருந்து இடது கை பழக்கத்திற்க்கான மௌஸ் பாயிண்டர்களை தரவிறக்கம் செய்து UNZIP செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
Control panel சென்று Mouse ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அல்லது விண்டோஸ் ஏழு அல்லது விஸ்டாவில் search box -ல் mouse என டைப் செய்து, வரும் பட்டியலில் முதலாவதாக உள்ள Mouse ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Mouse Properties வசனப் பெட்டியில் Buttons டேபில் உள்ள Switch primary and secondary buttons என்ற check box ஐ enable செய்து கொள்ளுங்கள். இது அனைவரும் அறிந்ததே. அடுத்து Pointers டேபிற்கு சென்று எந்த கர்சரை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Browse சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த கர்சர்களில் தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
கீழே தரப்பட்டுள்ள வகையில் மாற்றிக் கொள்ளுதல் சரியாக இருக்கும்.
தேவையான கர்சர்களை தேர்வு செய்த பின்னர் இவற்றை ஒரு Scheme ஆகவும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு: வலது கை பழக்கமுடையவர்களும் ஓட்டு போடலாம்.
.
.
8 comments:
ஆஹா...
என்னுடைய நீண்ட நாளைய தேடுதல் இது...
மிக மிக நன்றி அண்ணா...
Nice & useful post!!
// அகல்விளக்கு said...
ஆஹா...
//
நன்றி அகல்விளக்கு!
// Mrs.Menagasathia said...
Nice & useful post!!//
நன்றி மேனகா!
=)). ஓட்டு போட்டாச்சி.
// வானம்பாடிகள் said...
=)). ஓட்டு போட்டாச்சி.//
நன்றி தலைவா!
அருமை யான பயனுள்ள பதிவு, என் பையனுக்கு இடது கை பழக்கம் தான்
வழக்கம் போல நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Post a Comment