உபுண்டு என்ற சொல் பழங்கால ஆப்பிரிக்க மொழியில் "Humanity to others" என்ற பொருள் கொண்டதாகும். அதன் பொருளுக்கேற்ற பணியை அது நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
உபுண்டு என்றாலோ அல்லது லினக்ஸ் என்றாலோ நம்மில் பலருக்கு ஒரு வித தயக்கம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் உபுண்டுவை உபயோகிக்க எந்த விதமான பயமோ, தயக்கமோ தேவையில்லை.
இது மற்ற இயங்குதளங்களை விட பல மடங்கு பாதுகாப்பானது மற்றும் உபயோகமானது, ஏனெனில் மற்ற இயங்குதளங்களை உருவாக்குகின்ற கணினி வல்லுனர்கள் போலல்லாமல் (ஒரு இயங்குதளத்தை உருவாக்க மீறிப் போனால் இரண்டாயிரம் பேர் இருப்பார்களா?) , பொதுமக்கள் பாதுகாப்பாகவும், இலவசமாகவும் உபயோகப்படுத்தும் வகையில், பல லட்சம் கணினி வல்லுனர்களால் தங்களின் அதிக பட்ச கணினி அனுபவத்தோடும், அளவுகடந்த ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் (சம்பளத்திற்க்காகவோ, வியாபார நோக்கிலோ அல்லாமல்) உருவாக்கப்பட்ட இயங்குதளம் எப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்க முடியும்?
இப்படிப்பட்ட ஒரு கட்டற்ற இலவச மென்பொருட்களைப் பற்றிய நமது தயக்கங்களையும், பயத்தையும் போக்கும் முகமாக, சேலத்தில் நண்பர் திரு. செல்வமுரளி அவர்களின் தீராத ஆர்வத்தோடு, NRCFOSS ( National Research Centre For Open Source Softwares) -ல் தமிழ் உபுண்டு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இராமதாசன் அவர்களோடு இணைந்து, ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கம் உங்களுக்காகவே, வருகின்ற 11-10-2009 அன்று சேலத்தில் நடைபெற உள்ளது.
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
19 comments:
மிக நல்ல தகவல் சூர்யா.
நன்றி தலைவா!
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
நன்றி TamilhackX
நல்ல முயற்சி!நான் துபாயில் இல்ல இருக்கேன்.. ஃபிளைட் டிக்கேட் அனுப்பமுடியுமா பாஸ்?:-)
நன்றி கலையரசன்!//நான் துபாயில் இல்ல இருக்கேன்.. ஃபிளைட் டிக்கேட் அனுப்பமுடியுமா பாஸ்?//எதற்கும் நம்ம செல்வமுரளி இடம் கேட்டுப்பாருங்களேன்.
இணையதளங்களை பார்வையிடுவது மற்றும் கிராபிக்ஸ் - இவை இரண்டும் தான் விண்டோஸ் பக்கம் மக்களை திருப்புகிறது.
வருகைக்கு நன்றி பின்னோக்கி!நீங்கள் சொல்வது சில வருடங்களுக்கு முந்தைய நிலை. தற்பொழுது உபுண்டு எதற்கும் சளைத்ததல்ல..
அடடா! வடை போச்சே..
மிக்க நன்றி சூர்யா கண்ணன் அவர்களே!ஊக்குவித்த அனைவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.www.tamilvanigam.com
வாங்க செல்வமுரளி! நம்ம கலையரசன் ஏதோ கேட்டிருக்கிறார்...?
வாங்க கிரி!நம்ம செல்வமுரளி கிட்ட சொல்லி சிங்கபூருக்கு வடையை குரியர் பண்ண சொல்லிடலாமா?
நன்றி நண்பா
நன்றி ஆ.ஞானசேகரன்
பயனுள்ள தகவல்மிக்க நன்றி
தகவலுக்கு நன்றி திரு.சூர்யா.... கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் இருப்பினும்...இதற்கென பிரான்ஸிலிருந்து வர இயலாத சூழ்நிலை.....இதனை ஏற்பாடு செய்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல....உபுண்டு: Debian மையக்கருவை கொண்டு உருவாக்கப்பட்டது.... 2004 ஆம் ஆண்டுதான் உபுண்டுவை பற்றி நான் அறிந்தேன். அதற்க்கு முன்னர் "Mandrake" தொகுப்பை என்னுடைய மடிக்கணினியில் உபயோகப்படுத்தி இருக்கிறேன். இன்று லினக்ஸ்தொகுப்பிலேயே உபயோகிப்பதற்க்கு பிக எளிமையாக இருப்பது உபுண்டுவே..இதனை யாராலும் மறுக்க இயலாது. எனவே தான் நானும் என்னால் இயன்ற அளவிற்க்கு உபுண்டு பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறேன். தொடர்ந்து எழுதவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி நிற்கிறது....அலுவலகங்கள், சாதாரண வீட்டு உபயோகத்திற்க்கு உபுண்டு ஏற்றது. பதிவு செய்தால் Cd வீடு தேடி இலவசமாக வருகிறது. "Linux for Human Beings!" என்பது சரியாக உபுண்டுவிற்க்கு பொருந்தும்.இந்த தகவலை பகிர்ந்துகொண்ட சூர்யாகண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!!
நன்றி பெரோஸ்
நன்றி திரு. நித்தியானந்தம்! நல்ல தகவலும் தந்திருக்கிங்க..
டிக்கெட் புக் பண்ணிடலாம்.கலையரசன்புக் பண்ணனி டிக்கெட் பிரிண்ட் எடுக்கிறது ஒரு 50k செலவாகும். அத மட்டும் நிறைஞ்ச மனசோட அனுப்பி வையுங்க. புக் பண்ணிடலாம்.யாரப்ப அங்கே,சூடா ஒரு மசால் வடை சிங்கப்பூருக்கு பார்சல்நன்றிஎன்றும்அன்புடன்செல்வ.முரளி
Post a Comment