நெருப்புநரி உலவியில், பல தளங்களில் கடவு சொற்களை கொடுத்து சேமித்து வைத்திருப்போம். உதாரணமாக தமிலிஷ், தமிழ்10, தட்ஸ்தமிழ் போன்ற தளங்களில், ஒவ்வொருமுறையும் லாகின் செய்வதை தவிர்க்கும் முகமாக, Remember Password எனும் வசதியை உபயோகித்து சேமித்து வைப்பது வழக்கம்.
இப்படி நாம் சேமிக்கும் கடவு சொற்களை ஒரு வேளை நாம் மறந்து விட்டால், நெருப்பு நரி உலவியில்,
Tools சென்று Options கிளிக் செய்து அதில் Security டேபை கிளிக் செய்யுங்கள். இதில் Saved Passwords... என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். (இது நம்மில் பலர் அறிந்த ஒன்று)
இப்படி சேமித்த கடவு சொற்களை எக்ஸ்செல் போன்ற மென் பொருட்களுக்கு எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?
இந்த பணியை செய்ய Password Exporter எனும் நெருப்புநரி உலவியின் நீட்சியை நாம் கணினியில் நிறுவ வேண்டும். கீழே உள்ள சுட்டியிலிருந்து இந்த நீட்சியை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்.
இனி Tools மெனு சென்று, Add-ons ஐ கிளிக் செய்து அதில் Password Exporter பகுதிக்கு சென்று Optios ஐ கிளிக் செய்தால், Import/Export Passwords டயலாக் பாக்ஸ் வரும்.
இதில் சென்று சேமித்த கடவு சொற்களை இம்போர்ட் அல்லது எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். (XML அல்லது CSV கோப்பு வடிவத்தில் சேமிக்கலாம்.)
CSV (Comma Separated Values) ஆக சேமிப்பது நல்லது.
.
6 comments:
வழக்கம் போலவே மீண்டும் ஒரு நல்ல பகிர்வு, நன்றி கண்ணன்.
நன்றி தலைவா. முன்னல்லாம் லாகின் பேஜ் வந்தா முந்திரிக்கொட்ட மாதிரி வந்து நான் போடவான்னு நிக்கும். இப்போ நரி சவமேன்னு கிடக்கே, ஏன் தல?
நன்றி சிங்ககுட்டி!
நன்றி தலைவா! நெருப்புநரியில் Tools->Options->Security tab இல் 'Remember passwords for sites' என்பது தேர்வு செய்யப் படாமல் இருக்கும்.
துறுத்தல்ல ஒண்ணும் காணோம்..?? இங்க என்ன பின்னூட்டம் போடுறதுன்னு எனக்கு தெரியறதில்ல.. ஹிஹி.. பயனுள்ள பதிவுன்னு சொல்ல முடிவும் அம்புட்டுதேன்..
நன்றி! கலகலப்ரியா! அலுவலகத்தில் இருக்கும் பொழுது துறுத்தலில், பதிவு இடுவது சிறிது சிரமம், வீட்டில் சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் மட்டுமே இணையத்தில் அமர முடியும். 'கணினியையே கட்டிட்டு அழுங்க' என்பது எனது மனைவிஇடமிருந்து அவ்வப்போது வரும் வாழ்த்து. விரைவில் வருகிறேன்.
Post a Comment