விண்டோஸ் பயனாளிகள், உபுண்டுவிற்கு மாறிய பிறகு ஐபாட் எப்படி உபயோகிப்பது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களுக்கான தீர்வு இது.
iTunes போல உபுண்டுவில் பிரபலமான மியூசிக் பிளேயர் Amarok. இந்த இலவச மென் பொருளை உபுண்டுவில் எப்படி நிறுவுவது என்பதை பார்க்கலாம். இணைய தொடர்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உபுண்டுவில் Applications சென்று அதில் Accessories -ல் Terminal Window விற்கு செல்லவும்.
இனி திறக்கும் Terminal Window வில் கீழ்கண்ட கட்டளை கொடுத்து, அமரோக் நிறுவி முடியும் வரை சில நிமிடங்கள் காத்திருக்கவும்.
sudo apt-get install amarok
பிறகு MP3 format வசதியை உள்ளினைக்க கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கவும்.
sudo apt-get install libxine1-ffmpegsudo apt-get install kubuntu-restricted-extras
நிறுவி முடிந்ததும், Terminal Window வை மூடி விடலாம். இனி உங்கள் ஐபாடை கணினியில் இணையுங்கள். கீழே உள்ளது போல ஒரு window திறக்கும்.
இதில் வழக்கமாக Rythmbox Music Player என்ற மென்பொருள் தேர்வாகியிருக்கும். இதற்கு பதிலாக Open Amarok என்பதை தேர்வு செய்து, தேவைப்பட்டால் 'Always perform this action' என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.
இப்பொழுது நீங்கள் Amarok music player ஐ Default player ஆக தேர்வு செய்திருக்கிறீர்கள். இனி நீங்கள் மிக எளிதாக, பாடல்களை உங்கள் ஐபாடிற்கு ஏற்றலாம்.
உபுண்டு இயங்குதளத்தை எந்த வைரசும் தாக்காது என்பதால் ஐபாடில் வைரஸ் வருமோ என்ற கவலை வேண்டாம்.
.
1 comment:
Nice post Mr. Surya....thanks for sharing.....Happy diwali Wishes....
Post a Comment