தமிழ் வலைப்பக்கங்களில், யுனிகோட் அல்லாமல் TSCII/TUNE/TAB/TAM/DailyThanthi/Dinamani போன்ற என்கோடிங்கில் உள்ள வலைப்பக்கங்களை எழுத்துருவை தரவிறக்கி பதியாமல், வாசிக்க நெருப்புநரியில் இந்த அதியன் நீட்சி மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது.
உதாரணமாக, எழுத்துருவை பதியாமல் தினத்தந்தி வலைப்பக்கம்.
சில வலைப்பக்கங்கள் Scrambled யுனிகோட் தமிழில் (உதாரணமாக ᮯᮯ) இருக்கும் பக்கங்களையும் இதன் மூலம் எளிதாக, தெளிவாக மாற்ற இயலும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.
கீழே உள்ள சுட்டியை சொடுக்கி அதியன் நீட்சியை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்.
TSCII பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 2
TUNE பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 3
Scrambled Unicode Tamil (like ᮯᮯ) பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 4
TAB பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 5
TAM பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 6
Daily Thanthi பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 7
Dinamani பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 8
எழுத்துரு மாற்றத்தை நிறுத்த Alt + 1

வலைப்பக்கத்தில் எழுத்துருக்களை மாற்ற ஹாட் கீ அல்லாது Tools menu மற்றும் context menu (வலது கிளிக்) ஆகியவற்றையும் பயன் படுத்தலாம்.
மேலும் "Options" சென்று Hot keys மற்றும் வலது கிளிக் context menu வை நமது விருப்பத்திற்கு மாற்றலாம்.
அதுமட்டுமல்லாது, நாம் அடிக்கடி திறக்கும் வலைப்பக்கங்களின் url களை கொடுத்து, ஆட்டோமெடிக்காக அதுவாகவே யூனிகோடில் மாறும்படி செய்யலாம்.
l
.