மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பதிப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து திறக்கும் Word Options திரையில் வலது புற டேபில் கீழே உள்ள New Tab என்ற பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து திறக்கும் Rename உரையாடல் பெட்டியில் புதிதாக உருவாக்கபோகும் தேவையான டேபிற்கான பெயரை கொடுக்கவும்.
இனி வலதுபுற Customize the Ribbon பகுதியில் புதிதாக உருவாக்கிய டேபை தேர்வு செய்து கொண்டு, இடது புற Choose commands from பகுதியிலிருந்து தேவையான கட்டளைகளை தேர்வு செய்து Add பொத்தானை பயன்படுத்தி இணைத்துக் கொண்டு OK பொத்தானை சொடுக்கவும்.
இந்த முறையில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளை இந்த புதிய டேபில் உருவாக்கிக் கொண்டு நமது பணியை விரைவாக செய்ய முடியும்.
இதே போன்று எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பயன்பாடுகளிலும் உருவாக்கி வைத்து பயன் பெறலாம்.
மேலும், இப்படி உருவாக்கிய வசதியை அந்த குறிப்பிட்ட கணினி அல்லாத பிற கணினிகளில் பயன்படுத்தும் வகையாக, இந்த மாற்றங்களை, ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்து, Word Options திரைக்கு சென்று, வலது புற பேனில் கீழ் புறமுள்ள, Import/Export க்ளிக் செய்து Export all Customizations தேர்வு செய்து, Export செய்யவும், இந்த export செய்த கோப்பை தேவையான மற்ற கணினியில், Import Customization file தேர்வு செய்து Import செய்து கொள்ளவும் முடியும் என்பது இதன் தனி சிறப்பு.
.