எம்.எஸ் ஆஃபீஸ் 2007 அல்லது 2010 தொகுப்பு உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாடும் தானாகவே நிறுவப்பட்டிருக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த பயன்பாட்டை உபயோகித்திருக்கிறோம்?
OneNote என்பது ஏதோ ஒரு குறிப்பேடு போன்ற ஒரு மென்பொருள் என்றே பலரும் கருதி வருகிறோம். ஆனால் அதன் அதி முக்கிய பயன்பாட்டை அறிந்து கொண்டால் இது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிடும்.
வழக்கமாக நம்மில் பலர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, இணைய முகவரி, விலாசம், பள்ளிப் பாடங்கள் பற்றிய குறிப்புகள், பொருட்களின் விலைக் குறிப்புகள், செலவு கணக்கு மற்றும் வேறு ஏதேனும் சிறு குறிப்புகள் ஆகியவற்றை ஏதேனும் ஒரு நோட்டு புத்தகத்தின் பக்கத்திலோ, அல்லது டைரி, நாட்காட்டி இவற்றில் எழுதி வைப்பது வாடிக்கை. இவையனைத்தையும் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாட்டில் எளிதாக பயன்படுத்தலாமே!
இதனுடைய சக்திவாய்ந்த தேடுதல் வசதி இதன் சிறப்பம்சம். இது மற்ற வேர்டு processor போலல்லாமல், இதன் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்து டைப் செய்யும் வசதி உண்டு. மேலும், இதில் டெக்ஸ்ட், படங்கள், டிஜிட்டல் கையெழுத்து, ஆடியோ வீடியோ ரெகார்டிங், OCR கன்வெர்ஷன் (இது குறித்தான எனது விரிவான இடுகையை Microsoft OneNote - உபயோகமான பயன்பாடு பார்க்கவும்) நண்பர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் இந்த OneNote பயன்பாடு பதிவர்களுக்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பதையும் இதில் ஆடியோ வீடியோ ரெகார்டிங் வசதி குறித்தும் எழுதியிருந்த இடுகையை (1 நோட்) அறிந்தும் அறியாமலும் பார்க்கவும்.
சரி இதில் இது தவிர வேறு என்ன பயன்பாடு உள்ளது என்று பார்க்கலாம். கணக்குகளை இதில் போட முடியும் என்பது சிறந்த விஷயம். One Note -இல் தேவையான் பகுதியில் க்ளிக் செய்து, உதாரணமாக 365*78= என டைப் செய்து என்டர் கொடுத்தால்,
உடனடியாக கணக்கு அதுவே போட்டுக் கொள்ளும்.கொஞ்சம் கடினமாக (7^8) * sqrt(1250) + 1798 = என்று கொடுத்துப் பார்த்தால் உடனடி பதில்
என்று வருகிறது. அது மட்டுமின்றி, Insert tab இல் உள்ள Symbol பொத்தானை அழுத்தி தேவையான கணித மாறிலிகளை இணைத்தும் கணக்கு போட முடிகிறது.
இப்படி பல கணக்குகளை போடும் வசதியை நாம் Onenote -இல் பெறலாம். இதில் நாம் பயன்படுத்தக் கூடிய கணித குறியீடுகள்:
இன்னும் கடினமான கல்லூரி கணக்குகளை எளிதாக, இந்த OneNote மற்றும் பிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 /10 தொகுப்புகளில் பயன்படுத்துவது குறித்தான எனது மற்றுஒரு இடுகையை பார்க்கவும் (மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி )
இது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இந்த OneNote குறித்தான மேலதிக விவரங்களை மற்றொரு இடுகையில் பார்க்கலாம்.
11 comments:
அபாரம் தலைவா. 2010 இன்னும் நல்லாருக்கு.
Dear Surya Kannan,
Sorry to post something not related to this post. My Gmail and blog has been disabled by Google. I heard even you had the same problem. Could you please help me to recover my google account and tell what action should I take.
இது ஏன் இருக்குனு இன்னைக்கு தான் தெரியும் நன்றி
//chinnaammini said...
Dear Surya Kannan,
Sorry to post something not related to this post. My Gmail and blog has been disabled by Google. I heard even you had the same problem. Could you please help me to recover my google account and tell what action should I take.
//
எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்!..
suryakannan@gmail.com
//வானம்பாடிகள் said...
அபாரம் தலைவா. 2010 இன்னும் நல்லாருக்கு.//
நன்றி தலைவா!
pdf ல இருக்கற கட்டுரைகள வாசிச்சு முடிச்ச பின்னாடி முக்கியமான பகுதிகளை அடிக்கோடிட்டோ இல்லை ஹைலைட் பண்ணி வைக்கவோ ஒரு சாப்ட்வேர் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.. அடோப் அக்ரோபேட் ப்ரோபசனல் ல இதெல்லாம் இருந்தாலும், விலை ரொம்ப அதிகமாயிருந்தது.. இலவச மென்பொருள் எதுவும் எனக்குத் தெரியல..
உங்க பதிவைப் பாத்ததும் நீங்க சொல்லியிருக்கற என்ட் நோட் ல சும்மா என்னயிருக்குன்னு போயி பார்த்துட்டு இருந்தேன்.. pdf பைல்ச பிரிண்ட் எடுக்கற மாதிரி இதுக்கு அனுப்பி இதுலயே படிச்சு சேமிக்க முடியும் போல.. பேனா, ஹைலைட்டிங் டூல்சும் இதுலே இருக்கு. நன்றிங்க உங்க பகிர்வுக்கு..
மன்னிக்கணும்.. ஒரு எரர்.. I meant one note in the previous comment.. not end note..
PDF Xchange Viewer is a freeware
available, which will help for
highlighter etc. Lot of tools for PDF are available in free version.
try it
ஸ்ரீ.. உங்க ப்ளாக்ல பின்னூட்டம் போட்டுட்டேன்.. இருந்தாலும் இங்கயும் ஒன்னு.. நீங்க சொன்ன சாப்ட்வேர் தரவிறக்கிட்டேன்.. ரொம்ப உதவியா இருக்கப் போகுது எனக்கு.. அதுக்காக நன்றி..
அன்பின் சூர்யா.. One note ல யதேச்சையா ஆரம்பிச்சது, என் நெடுநாளைய தேடலுக்கு ஒரு விடை கிடைச்சிருக்கு.. அதுக்காக பெரிய நன்றி உங்களுக்கு.. தொடருங்க..
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்
தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
Post a Comment