விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன.
முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம். Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள்.
இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும்.
சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM) 8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.
இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும்.
மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.
.
5 comments:
thank u for this information.. now i know where to look for..
windows 7 64 பிட் வாங்கி டவுன்லோட் செஞ்சிட்டு xp 32 பிட்ல இதை எழுதமுடியாதுன்னு சாவடிச்சான் தலைவா:)).நன்றி.
very useful post which i search regarding the matter,
thank you.
மிகத் தேவையான சந்தேகத்திற்கு விடை கிடைத்தது. அது சரி, 32 பிட் கணினியிலே 64 பிட் ஓ.எஸ். இன்ஸ்டால் பண்ணி மாற்ற முடியாதா?? சிரிக்காதீங்க! இந்தத் தொழில் நுட்பம் தெரியலை அதான் கேட்கிறேன். அதோட சில எக்ஸ்பி ப்ரொ. 32 பிட்டையும் ஒரிஜினல் பதிச்சால் ஏத்துக்க மாட்டேனு சொல்லுது என்னோட பிசி. என்ன காரணம்னு மெகானிக்குக்கும் புரியலை. இரண்டு, மூன்று முறை முயன்று பார்த்துட்டார். :((((
another important doubt:
கணினியை பூட் செய்யும் போது டாஸ்க் பார் ஐகான்கள் ஒவ்வொன்றாக வரும்போது சில சமயம் செர்வர் பிசி என்றொரு விண்டோ வருகிறது. அதிலே ஸ்விச் டூ என்றொரு ஆப்ஷனும் கான்சல் ஆப்ஷனும் கொடுத்திருக்கு. செய்தி என்னவென்றால் அடுத்த புரொகிராம் திறக்க முடியாது. செர்வெர் பிசியாக இருக்கு. உடனே வேண்டுமானால் ஸ்விட்ச் டூவை க்ளிக் பண்ணிக்கோனு சொல்றது. அதை காப்பி, பேஸ்ட் பண்ணி எடுக்க முடியலை. இம்மாதிரி வரும்போது சில சமயம் அந்த விண்டோ தானே மறையுது. சில சமயம் ஸ்விட்ச் டூவை க்ளிக்கினால் மறையுது. இதுவும் ஏன் என்று சொன்னால் நல்லது. மெகானிக்கைக் கேட்டால் இணையம் சரியில்லை என்கிறார். உண்மையில் இணைய இணைப்பு நான் மானுவலாகவே கொடுக்கிறேன். ஆகவே இணைய இணைப்புக் கொடுக்கும் முன்னேயே டாஸ்க் பார் ஐகான் எல்லாமும் வரும் முன்னரே இப்படிச் செய்தி வருகிறது.
புரியறாப்போல் சொல்லி இருக்கேனா??? :(
Post a Comment