விண்டோஸ் இயங்குதளத்தில் டெஸ்க்டாப் வால் பேப்பராக புகைப்படங்களை வைத்து போரடித்துப் போனவர்களுக்கு, புகைப்படங்களை விட வால் பேப்பர் ஆக உங்களிடமுள்ள அபிமான வீடியோவை மாற்ற விண்டோஸ் விஸ்டா அல்டிமேட் இயங்குதளத்திற்கு Dreamscene என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதே வசதியை VLC மீடியா பிளேயரைக் கொண்டு எப்படி உருவாக்குவது என்பதை ஏற்கனவே ஒரு இடுகையில் பார்த்தோம். விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த வசதி தரப்படவில்லை. எனினும் இந்த வசதியை விண்டோஸ் 7 -ல் எப்படி உருவாக்குவது என்பதை இறுதியில் பார்க்கலாம்.
முதலில் Dreamscene வசதியை விண்டோஸ் விஸ்டாவில் (அல்டிமேட்) எப்படி நிறுவுவது என்று பார்க்கலாம்.
Start மெனுவில் All Programs சென்று Windows update ஐ க்ளிக் செய்யுங்கள். அங்கு View available Extras என்பதை க்ளிக் செய்து, லிஸ்டில் Windows DreamScene இல்லையெனில் Check for updates லிங்கை க்ளிக் செய்யுங்கள். இனி பட்டியலில் வரும் Windows DreamScene க்கு நேராக உள்ள செக் பாக்சை க்ளிக் செய்து Install க்ளிக் செய்யுங்கள். இனி இந்த கருவி தரவிறக்கப் பட்டு உங்கள் கணினியில் பதியப்படும். ஒரு முறை கணினி ரீஸ்டார்ட் ஆகி வந்த பிறகு இந்த வசதி உங்கள் கணினியில் activate செய்யப்படும். இதனூடே ஒரு தரமான வீடியோ கிளிப்பும் உங்களுக்கு வால் பேப்பராக மாற்ற கிடைக்கும்.
மேலும் ஹை குவாலிடி வீடியோக்களைப் பெற, மேலே சொன்ன வழிகளை பின்பற்றி check for updates பட்டியலில் Windows DreamScene Content Pack ஐ தேர்வு செய்து install க்ளிக் செய்தால் போதுமானது.
சரி. இந்த வசதியை விண்டோஸ் 7 இயங்குதளத்தில் உருவாக்க என்ன வழி இருக்கிறது என்று பார்த்தால், இதற்காக பிரத்யேகமாக Windows 7 DreamScene Activator எனும் இலவச கருவி அமைந்துள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை தரவிறக்கிய பின்னர் இதன் மீது வலது க்ளிக் செய்து context மெனுவில் Run as administrator ஐ க்ளிக் செய்து பதிந்து கொள்ளுங்கள். இங்கு Enable DreamScene என்ற பொத்தானை அழுத்தி activate செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்கள் அபிமான வீடியோக்களை உங்கள் டெஸ்க்டாப் சுவர்தாளாக மாற்றி மகிழுங்கள். வீடியோவை pause செய்ய டெஸ்க் டாப்பில் வலது க்ளிக் செய்து Pause DreamScene க்ளிக் செய்யலாம்.
.
1 comment:
அருமையான பதிவு. மேலும் தாங்கள் விண்டோஸ் 7_ ல் ரெடி பூஸ்ட் பற்றி விரிவாக எழுதுங்கள். நான் தற்போது 2 GB RAM- ம் 4 GB Dedicated PenDrive-ம் உபயோகிக்கிறேன். மேலும் இத்துடன் 2 GB RAM சேர்க்கலாமா? அல்லது 4 GB Dedicated PenDrive சேர்க்கலாமா? என்பதை தெரிவியுங்கள்.
Post a Comment