சமீப காலமாக பெரும்பாலானோர் மேசை கணினியை விட லேப்டாப்/நெட்புக் ஆகியவற்றையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் என்னதான் இவைகள் அழகாகவும், ஸ்லிம்மாகவும், விலை மலிவாகவும், எங்கு வேண்டுமென்றாலும் இலகுவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்தாலும், மேசை கணினி கீ போர்டில் நாம் சரளமாக டைப் செய்வது போல இவற்றில் முடிவதில்லை.
அதிலும் முக்கியமாக நாம் ஏதாவது டைப் செய்கையில் டச் பேடில் கை படாமல் இருப்பது இயலாத காரியம்.
சில நேரங்களில் நாம் டைப் செய்யும் பொழுது, நம்மையறியாமலேயே நமது கைகள் டச் பேடில் படும் பொழுது, மௌஸ் கர்சர் நாம் டைப் செய்து கொண்டிருக்கும் திரையை விட்டு, வேறு எங்காவது ஒடி விடுவது வாடிக்கை. இதிலும் கொடுமை என்னவென்றால், இந்த கர்சர் எங்காவது ஓடி, அந்த சமயத்தில் தேவையில்லாத ஏதோ ஒரு அப்ளிகேஷனை திறந்து கொள்வதுதான்.
ஒரு சில லேப்டாப்/நெட்புக்குகளில் கீ பேடிலேயே டச் பேடை disable செய்து கொள்ளும் வசதி உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் டைப் செய்யும்பொழுது ஞாபகமாக இந்த கீகளை அழுத்தி டச் பேடை disable செய்வது இயலாத காரியம்.
சரி இதற்கு என்னதான் தீர்வு?
இதோ Google Code வழங்கும் TouchFreeze இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் கருவி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த கருவியின் சிறப்பான பணி என்னவெனில், அமைதியாக டாஸ்க்பாரில் அமர்ந்து கொண்டு, எப்பொழுதெல்லாம் நீங்கள் டெக்ஸ்ட் டைப் செய்கிறீர்களோ அந்த சமயங்களிலெல்லாம் டச் பேடை Freeze செய்து விடும். இதனால் மௌஸ் கர்சர் ஆங்காங்கே அலையாமல் இருப்பதால், தேவையற்ற டென்ஷன் ஏதுமின்றி உங்கள் பணியை தொடரலாம்.
.
14 comments:
எனக்கு மிகவும் பயனுள்ள மென்பொருளை அறிமுகம் செய்துள்ளீர்கள்.. நன்றி
இதுக்கு நான் லேப்டாப் வாங்கணுமே:)
நன்றி Farhath
இதெல்லாம் தெரிஞ்சு வச்சுகிட்டு, அப்புறமா வாங்குங்க.. தலைவா!
தங்யூ தலைவா......... ரொம்பகஸ்டப்பட்டேன்
கமெண்ட் போடும் பொழுது ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்கேன்
நன்றி என்ற வார்த்தை பற்றாது இதுக்கு
வாங்க றமேஸ்!..
//நட்புடன் ஜமால் said...
கமெண்ட் போடும் பொழுது ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்கேன்
நன்றி என்ற வார்த்தை பற்றாது இதுக்கு//
ஆனா உங்களுக்கு நன்றிதான் நான் சொல்லப் போகிறேன்.. ஜமால்!
சிறந்த பதிவு
அய்யா ராசா, செல்லமே, வயித்துல பால் வார்த்தது போல இருக்கு கண்ணா.
டைப் பண்ணும் போது நான் படும் பாடு! சமயத்தில் கர்சர் எங்காவது நகர்ந்து போய் , கண்ட இடங்களில் எழுதி வைக்கும் அதை பார்த்து தலையை சுவற்றில் முட்டிகொள்ளவே தோன்றும்.மீண்டும் சரி செய்து டைப் பண்ண வைக்கும். நல்ல செய்தி
நல்ல பகிர்வு . நன்றி சூர்யா.
என் திரையில் வந்த கோடுகள் இன்று மறைந்த விட்டன. பல முறை ரீ ஸ்டார்ட் செய்ய வைத்து, சிஸ்டம் ரி ஸ்டோர் பண்ண வைத்தது. இன்று மாலையில் எல்லாம் சரியாகி விட்டது.
--
Thanks Surya...
Thanks Surya...
நன்றி சூர்யா....மிகவும் நன்றி.
இத இத இதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். அறிய தந்தமைக்கு நன்றி.
Post a Comment