.
வழக்கமாக நாம் வேர்டு, பவர்பாயின்ட் போன்றவற்றில் தமிழில் தட்டச்சு செய்ய குறள், எ-கலப்பை, அழகி, NHM போன்ற கருவிகளை பயன்படுத்தி வருகிறோம். சமீபத்தில் கூகிள் நிறுவனம் Google IME (Input Method Editor) எனும் கருவியை இலவசமாக வழங்கி வருகிறது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). இந்த கருவியை உபயோகித்து தமிழ் மட்டுமின்றி Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Punjabi, Tamil, Telugu and Urdu ஆகிய மொழிகளில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில் இணைய இணைப்பு இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம்.
இந்த கருவி மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பி/ விஸ்டா/ விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், ஸ்டார் ஆபீஸ், கூகிள் டாக்ஸ் & ஸ்பிரட்ஷீட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.
மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் AOL இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே அரட்டை அடிக்கவும் முடியும். மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.
இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து வரும் பக்கத்தில் தமிழ் மொழியை தேர்வு செய்து டவுன்லோட் பொத்தானை சொடுக்கி googletamilinputsetup.exe என்ற கோப்பை தரவிறக்கம் செய்து கொண்டு அந்த கோப்பை ரன் செய்யுங்கள்.
பிறகு வரும் விசார்ட் ஐ தொடர்ந்து Google IME கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பிறகு கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Settings Tab இல் Google Tamil input என்பதை தேர்வு செய்து Key Settings பொத்தானை சொடுக்குங்கள்.
இனி திறக்கும் Change Key Sequence எனும் வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் short cut கீயை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு உங்களுக்கு தேவையான செயலியை திறந்து கொண்டு short cut கீயை அழுத்தினால் கூகிள் தமிழ் உள்ளீடு செயல் பட துவங்கிவிடும்.
இதில் கேரக்டர் பிக்கர் வசதியும் தரப்பட்டுள்ளது.
இதனை உபயோகித்து நாம் தட்டச்சு செய்கையில் கீழே தரப்பட்டுள்ளது போல சொல் தேர்வு வசதியும் உள்ளது.
.
25 comments:
நன்றிங்க ஜலீலா!
ரொம்ப உபயோகமான பதிவு.
அனைவருக்கும் பயன்படும் பதிவு!!நன்றி சகோ...
நன்றி சகோதரி!
மிக்க நன்றி சூர்யா
நன்றி கதிர்!
பயனுள்ள தகவல் நண்பரே..மேலும் தங்கள் புதிய அடைப்பலகை வடிவமைப்பு அழகாகவுள்ளது..
நல்ல வேள நீங்க கடல் மிட்டாய் விக்க போல... எங்களுக்கு நல்ல பதிவெல்லாம் வேற யாரு போடுவா?
மிக்க நன்றி நண்பரே!
without internet connection how to install this? i.e. offline installer?ur blog is nice..thanks for valauble info sharing...Raghu
thanks for sharing surya
நன்றி ஜமால்!
நன்றி அண்ணாமலையான்!
நன்றி குணசீலன்!
நன்றிங்க தேனம்மை!
வாங்க ரகு! இதற்கு Offline Installer இல்லை. இன்ஸ்டால் செய்யும்பொழுது மட்டும் இணைய இணைப்பு வேண்டும்.
useful and very good post
நன்றி கீதாஞ்சலி!
இனிய தகவலுக்கு நன்றி.
மிகவும் உபயோகமான பதிவு நன்றி, ஆனால் நான் பாமினி எழுத்துருவை கொண்டு டைப் செய்வதால் இம்முறை சற்று கடினமாக இருக்கிறது
Am new to your blog.You are giving very useful tips.
Very recently I saw a post on children's software(like paint brush).I thought I will download it later.But now I could not spot it out.Could you please give me
the link ?Thanks in advance.
http://suryakannan.blogspot.com/2009/11/blog-post_14.html
கூகிள் IME இணைய இணைப்பு இல்லாதவர்களும் பயன்படுத்துமாறு இருந்தால் நன்றாக இருக்கும்.
நண்பரே என்னய்யா வசதி இல்லாதவர்களுக்கு இதோ rapidshare இல்
அருமையான பதிவு. நன்றி நண்பரே
Post a Comment