.
ஒரு வகுப்பறையை எடுத்துக் கொள்வோம். இங்கு ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வினாடிவினா போட்டி ஒன்றை நடத்த வேண்டும். இங்கு பெரிய நெட் வொர்கிங் வசதியோ, அல்லது பல கணினிகளோ இல்லை. ஒரே ஒரு கணினி கூடுதலாக ஒரு ப்ரொஜெக்டர் (தேவைப்பட்டால்) மட்டுமே உள்ளது என வைத்துக் கொள்வோம். வினாடி வினா கேள்விகள் மற்றும் அதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் Powerpoint 2007-இல் உருவாக்கி விட்டார். இதனை மாணவர்கள் முன்னிலையில் ப்ரொஜெக்டர் மூலமாக அல்லது தனது கணினி திரையில் காண்பிக்கிறார்.
இதில் உள்ள கேள்விக்கான பதிலை வாய் மொழியாக கேட்கப்படும் பொழுது, முதலில் பதில் அளிக்கும் மாணவரோ அல்லது குறிப்பிட்ட வரிசையில் உள்ள மாணவர்கள் மட்டுமே பதில் அளிக்கக் கூடிய அல்லது பங்கு பெறக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதற்கு பதிலாக அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பங்கு பெற, பதில் அளிக்க மைக்ரோசாப்ட் நிறுவன உருவாக்கத்தில் ஒரு இலவச மென்பொருள் Mouse Mischief கருவி பலருக்கு பயனளிக்கும் வகையில் வெளிவந்துள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இந்த கருவி மைக்ரோசாப்ட் Power Point 2007 -ல் மட்டுமே தற்பொழுது இயங்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனை உபயோகிக்க தேவையான எண்ணிக்கையில் USB அல்லது wireless மௌஸ் (PS2 அல்ல) மற்றும் அவற்றை கணினியில் பொறுத்த தேவையான எண்ணிக்கையில் USB port அல்லது Hub மற்றும் இடவசதி தேவைப்படும்.
இதனை தேவைப்படும் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, PowerPoint 2007 ரிப்பன் மெனுவில் Mouse Mischief தோன்றியிருக்கும். இதில் சென்று தேவையான வசதிகளை பெறலாம். பயனாளிகள் கலந்து கொண்டு கேள்விக்கான பதிலை க்ளிக் செய்யும் வசதியுடன் பவர் பாயின்ட் ஸ்லைடுகள் உருவாக்கப்பட வேண்டும். இனி பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட வெவ்வேறு விதமான மௌஸ் பாயிண்டர்களை பயன்படுத்தி பதிலளிக்க இயலும்.
மேலும் Special teacher controls எனும் வசதியில் ஒவ்வொரு மாணவருக்கும் தேவையான வசதிகளை உருவாக்கவும் முடக்கவும் இயலும்.
இந்த பயனுள்ள கருவியை பயன் படுத்தி மேலே குறிப்பிட்டது மட்டுமின்றி மென்மேலும் பல உபயோகங்களை பெறுவது பயனாளிகள் திறமையில் உள்ளது.
.
9 comments:
நல்ல தகவல்
thanks for sharing SURYA
Really very useful post sir.
நன்றி இளமுருகன்!
நன்றிங்க தேனம்மை
நன்றி Mrs.Faizakader
பயனுள்ள தகவல்
நன்றிங்க ஜலீலா!
nice ...
Post a Comment