.
இணையத்தில் நாம் வலைப்பக்கங்களில் பார்க்கும் ஒவ்வொரு JPG, PNG போன்ற வடிவிலான அனைத்து படங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட அளவிலானவை. (உதாரணமாக 640 x 480, 800 x 600, 1024 x 768) இது போன்ற படங்களை நாம் உலாவியில் திறக்கும் பொழுது அந்த படங்கள் அதனுடைய உண்மையான அளவில் காண்பிக்கப் படாமல், சிறிதாக்கப்பட்டு திரையில் காண்பிக்கப் படுகிறது.
இது போன்ற படங்களை நெருப்பு நரி உலாவியில் அவற்றின் உண்மையான அளவில் தோன்றவைக்க ஒரு சிறிய ட்ரிக்கை பார்க்கலாம். (நெருப்புநரி உலாவிக்கு மட்டும்)
கீழே உள்ள படத்தின் லிங்கில் மெளசின் ஸ்க்ரோல் பட்டனை அழுத்துங்கள்.
படத்தின் அளவை பார்த்துக்கொள்ளுங்கள்.
இனி புதிதாக ஒரு டேபை திறந்து கொண்டு (Ctrl + T) அங்கு Address Bar இல் about:config என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இதனை தொடர்ந்து வரும் எச்சரிக்கை செய்தியில் I'll be careful, I promise! என்ற பொத்தானை சொடுக்குங்கள்.
இப்பொழுது வரும் Filter bar இல் browser.enable என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
கீழே வரும் “browser.enable_automatic_image_resizing” என்பதை இரட்டை க்ளிக் செய்து value ஐ false ஆக மாற்றிக்கொண்டு, அந்த டேபை மூடி விடுங்கள். இப்பொழுது மேலே முன்பு க்ளிக் செய்த படத்தின் லிங்கை ஸ்க்ரோல் பட்டனில் மறுபடி க்ளிக் செய்து வித்தியாசத்தை உணருங்கள். இப்பொழுது அதே படம் அதனுடைய உண்மையான அளவில் (1024 x 768) தோன்றுவதை கவனிக்கலாம்.
.
8 comments:
ஐ. சூப்பர் சூர்யா:)
நன்றி தலைவா!
தகவலுக்கு நன்றி சூர்யா கண்ணன்.
சூர்யா தி க்ரே8. I like it.
// சைவகொத்துப்பரோட்டா said...
தகவலுக்கு நன்றி சூர்யா கண்ணன்.//
வாங்க தல!
// Tech Shankar said...
சூர்யா தி க்ரே8. I like it.//
நன்றி தலைவா!
Thanks Surya
engkalaiyellam computer gillingkalaa maththa muyarchi seyriingka ....silathu puriyum silathu seyya sombal anyway thanks for sharing surya
தங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ள பதிவே.
அழகான பதிவை தந்த உங்களுக்கு நன்றிகள்.
Post a Comment