முதல் பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்து எனது பதிவை படித்துவிட்டு வரவும்.
நெருப்புநரி உலாவியில் about:config என்ற பயன்பாட்டை எப்படி உபயோகப்படுத்துவது என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். அறியாதவர்கள் மேலே கொடுத்துள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நெருப்புநரி உலாவியில் அதனுடைய அனைத்து Configuration கள் அனைத்தும் இந்த About:config கட்டளையில் அடங்கிவிடும். இதிலுள்ள ஒரு சில வடிவமைப்புகளை மாற்றுவதன் மூலமாக நெருப்புநரி உலாவியில் இன்னமும் வேகமாக உலாவ என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நெருப்புநரி உலாவியை திறந்து கொண்டு அட்ரஸ் பாரில் கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பின் மதிப்பையும் Filter box இல் டைப் செய்து என்டர் கொடுத்து, ஒவ்வொன்றாக மாற்றிய பின் உலாவியை மூடி பின்னர் திறந்து முன்பை விட வேகமாக உலாவலாம்.
மாற்ற வேண்டிய வடிவம் தற்போதைய மதிப்பு மாற்றவேண்டிய மதிப்பு
network.http.pipelining False True
network.http.proxy.pipelining False True
network.http.pipelining.maxrequests 4 4- லிருந்து 8 ற்குள்
network.http.max-connections 30 96
network.http.max-connections-per-server 15 32
அவ்வளவுதான்!..
கொசுறு :-
உங்கள் நெருப்புநரி உலாவியின் அட்ரஸ் பாரில் ஏற்கனவே நீங்கள் சென்று வந்த வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்ய துவங்குகையில், அதுவாகவே மீதமுள்ள முகவரியை Autofill செய்ய கீழே தரப்பட்டுள்ள வடிவமைப்பின் மதிப்பை மாற்றுங்கள்.
மாற்ற வேண்டிய வடிவம்: browser.urlbar.autofill
தற்போதைய மதிப்பு : False
மாற்றவேண்டிய மதிப்பு : True
.
8 comments:
அட, இவ்வளவு சுலபமா, நன்றி சூர்யா கண்ணன்.
வாங்க சைவகொத்துப்பரோட்டா!
thank you surya.:)
வாங்க தலைவா!
நன்றி சூரியா கண்ணன்
Thank You Boss.
ரொம்ப நன்றி சூர்யா கண்ணன் அவர்களே..
தாங்கள் கொசுறு பகுதியில் கொடுத்துள்ளது போல் நான் அமைத்துவிட்டேன். ஆனாலும், Auto Fill - வேலை செய்யவில்லையே..
இப்போது வேலை செய்கிறது
Post a Comment