Excel 2007 -இல் நாம் பணிபுரியும் பொழுது ஒரு குறிப்பிட்ட செல்லில் உள்ள டெக்ஸ்ட், அந்த செல்லின் அகலத்தை விட பெரிதாக இருந்தால், வழக்கமாக நாம் F2 கீயை அழுத்தி தேவையான இடத்தில் Alt+Enter செய்து அடுத்த வரிக்கு எடுத்துச் செல்வோம். அதன் பிறகு Row height ஐயும் மாற்ற வேண்டியிருக்கும்.
இதற்கு Excel 2007 -இல் எளிதான Text Wrap வசதி தரப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
இப்படி உள்ள டெக்ஸ்டை அந்த செல்லிலேயே Wrap செய்ய, அந்த செல்லில் கர்சரை நிறுத்தி, ரிப்பன் மெனுவில் Wrap Text பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவுதான்! இப்பொழுது அந்த செல்லின் அகலத்திற்கு ஏற்றவாறு Text Wrap செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
.
2 comments:
இது அதிகமாக எனக்கு பழக்கத்தில் உள்ளது இது எனக்கு முன்பே அறிந்தது தான். தெரியாதவர்களுக்கு, கண்டிப்பாக பயன் அளிக்கும்.
நன்றிங்க ஜலீலா!
Post a Comment