நாம் அவ்வப்பொழுது நமக்கு தேவையான வலைப் பக்கங்களை புக்மார்க் செய்து வைக்கிறோம். சில சமயங்களில், நாம் அந்த உலவியை கணினியிலிருந்து நீக்கும் பொழுது அல்லது கணினியை பார்மேட் செய்த பிறகு, ஏற்கனவே சேமித்து வைத்த புக்மார்க்குகள் இல்லாமல் அவஸ்தை படுவோம். அதற்கு மாற்றாக, அந்த புக் மார்க்குகளை பேக்கப் எடுத்து வைத்தால் தேவையான சமயத்தில் மறுபடியும் உபயோகித்துக் கொள்ளலாம்.
இனி,
நெருப்புநரி உலவியில் புக் மார்க்குகளை பேக்கப் எடுக்க, உலவியில் உள்ள Bookmarks மெனுவில் கிளிக் செய்து Organise Bookmarks என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Library என்ற டயலாக் பாக்ஸில், Import and Backup மெனுவை கிளிக் செய்து, Backup எனும் வசதியை தேர்வு செய்தால், உங்கள் புக் மார்க்குகளை JSON என்ற கோப்பு வகையில் பேக்கப் எடுத்து தேவையான ஃபோல்டரில் சேமித்து, தேவைப்படும் பொழுது, ரீ ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
இதே மெனுவில் உள்ள Export HTML எனும் வசதியில் புக் மார்க்குகளை சேமித்து வைத்தால் பிறகு, இதை வேறு எந்த உலவியிலும் திறக்கும் வகையில் HTML கோப்பாக சேமிக்கப்படும்.
Internet Explorer இல் Favorites ஐ பேக்கப் எடுக்க,
Internet Explorer ஐ திறந்து கொண்டு, File மெனுவில் Import and Export என்பதை கிளிக் செய்து,
திறக்கும் விசார்டில் Export Favorites வசதியை தேர்வு செய்து, HTML கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
.
5 comments:
நன்றி நண்பா
நன்றி ஆ.ஞானசேகரன்
இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com
வருகைக்கு நன்றி JKR
உண்மையிலேயே யாருக்கும் அவ்வளவு தெரியாத தகவல். இருந்தாலும், Xmarks கூடுதல் தொகுப்பு மூலம் ஆன்லைன் backup செய்வது நன்று என்று நினைக்கிறன். அன்புடன்,கிருஷ்ணா. http://rvkrishnakumar.blogspot.com/
Post a Comment