சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்பில் உள்ள ஆடியோவை MP3 ஆக மாற்றி, உங்கள் ஐபாடில் உபயோகிக்கவோ அல்லது, அந்த வீடியோவில் ஆடியோவை மட்டிலும் தனியாக பிரித்து MP3 ஆக மாற்ற விரும்பினால், அதை இலவச மென் பொருளான VLC Media Player ஐ உபயோகித்து எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
இந்த கட்டுரைக்காக உபயோகப்படுத்தப் பட்டது VLC Media Player 1.0 for Windows.
VLC Player ஐ திறந்து கொண்டு, அதில் Media மெனுவில் Convert / Save வசதியை கிளிக் செய்யவும்.
இனி திறக்கும் Open Media திரையில் Add பொத்தானை சொடுக்கி தேவையான வீடியோ கோப்பை தேர்வு செய்து பிறகு Convert / Save பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து Convert திரையில், நீங்கள் தேர்வு செய்த வீடியோ கோப்பு சரியானதுதானா என்பதை உறுதி செய்தபின் Destination File என்பதற்கு நேராக உள்ள Browse பொத்தானை சொடுக்கி உருவாக்கப்படும் MP3 கோப்பு எங்கு சேமிக்கப் பட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் பொழுது,
MP3 கோப்பின் பெயரோடு, .MP3 என டைப் செய்து Save பொத்தானை கிளிக் செய்யவும்.
இனி இந்த Convert விண்டோவில் Source மற்றும் Destination சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்தபின் Edit Selected Profile Button ஐ கிளிக் செய்யவும்.
Encapsulation tab இல் WAV என்பதை தேர்வு செய்யவும்.இனி Audio Codec டேபில் MP3 Codec, மற்றும் Bitrate, amount of channels, Sample Rate, ஆகியவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து Save பொத்தானை கிளிக் செய்யவும்.
பிறகு திரும்பும் பழைய திரையில் Start பொத்தானை கிளிக் செய்யுங்கள். இனி உங்கள் மூலத் திரையில் கவுன்ட் டவுன் டைமர் ஓடிக்கொண்டு, கன்வெர்ட் ஆகிவிடும்.
அவ்வளவுதான், இனி நீங்கள் கொடுத்திருந்த Destination path இல் உங்களுக்கான MP3 கோப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.
இது போல MOV, MPEG, மற்றும் AVI video கோப்புகளை mp3. ஆக மாற்றிக் கொள்ளலாம். FLV கோப்புகளில் ஆடியோவின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
.
13 comments:
ரொம்ப நல்ல பதிவு சூர்யா...
படங்களுடன் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி
//தமிழ்நெஞ்சம் said... படங்களுடன் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி//ரிபீட்ட்ட்ட்
நன்றி செந்தழல் ரவி!
நன்றி! ஞானசேகரன்
// தமிழ்நெஞ்சம் said... படங்களுடன் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி// நன்றி தலைவா!
நல்ல பதிவுக்கு நன்றி சூர்யா ௧ண்ணன்.
நன்றி சிங்கக்குட்டி
புத்தகமாக போடலாம் உங்கள் பதிவுகளைத் தொகுத்து. அருமை.
வாங்க பின்னோக்கி! நன்றி!
நான் தேடிய பதிவு நண்பரே..பெரும்பாலும் லிசன்டியுப் வழியாகத்தான் வீடியோ கோப்புகளை ஆடியோவாக மாற்றிவந்தேன்..இது எளிய வழியாகவுள்ளது..
நான் தேடிய பதிவு நண்பரே..பெரும்பாலும் லிசன்டியுப் வழியாகத்தான் வீடியோ கோப்புகளை ஆடியோவாக மாற்றிவந்தேன்..இது எளிய வழியாகவுள்ளது..
இதனை விஸ்டாவில் செயல்படுத்தமுடியுமா..? நண்பரே..
Post a Comment