கணினி உபயோகிப்பவர்களில் பலர், தாங்கள் உருவாக்கும் கோப்புகள், காப்பி செய்து வைக்கும் கோப்புகள், தரவிறக்கம் செய்து வைக்கும் கோப்புகள் போன்றவற்றை, வன்தட்டில் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல், சில சமயங்களில் வெவ்வேறு ஃபோல்டர்களில் அல்லது ட்ரைவ்களில் சேமித்து வைக்கிறோம். இப்படி செய்வதினால் ஒரே கோப்பு கணினியின் வன்தட்டில் பல இடங்களில் டூப்ளிகேட் ஆகிவிடுகிறது. சில சமயங்களில் வன்தட்டில் இடபற்றாக்குறையும் இதனால் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.
இப்படி டூப்ளிகேட் ஆகியிருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்க Fast Duplicate File Finder எனும் மென் பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனுடைய திரையில் வலதுபுறமுள்ள Scan Subfolders என்பதை தேர்வு செய்து Start Scan பொத்தானை சொடுக்கினால் டூப்ளிகேட் கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதன் வேகமும் பாராட்டும்படியுள்ளது.
இதில் பட்டியலிடப்படும் டூப்ளிகேட் கோப்புகளில் நமக்கு தேவையில்லாதவற்றை தேர்வு செய்து நீக்கிக் கொள்ளலாம்.
இது நமது பென் ட்ரைவ் போன்றவற்றிலும் சிறப்பாக செயல்பட்டுக் கூடியது. இதனுள் உள்ளிணைக்கப் பட்ட Preview வசதி இதனுடைய சிறப்பம்சம் ஆகும்.
.
10 comments:
உதவியா இருக்கு. நன்றி
நன்றி பின்னோக்கி!
நிறைய கோப்புகள் இப்படி இருக்கு என்கிட்டேஇது நல்லா உதவியாக இருக்குமுன்னு நம்புறேன் - தரவிறக்க துவங்கியாச்சுமிக்க நன்றி.
நன்றி ஜமால்!
தலைவா வணக்கம் .. அருமை.. நன்றி.. துறுதல் படித்தேன் மிக மிக அருமை....அன்புடன் ரமேஷ் (கேடு??)
தலைவா வணக்கம் .. அருமை.. நன்றி.. துறுதல் படித்தேன் மிக மிக அருமை....அன்புடன் ரமேஷ் (கேடு??)
//தலைவா வணக்கம் .. அருமை.. நன்றி.. துறுதல் படித்தேன் மிக மிக அருமை....அன்புடன் ரமேஷ் (கேடு??)//அடடா! கேட் ரமேஷா? நன்றி தலைவா! வணக்கம்! எப்படி இருக்கீங்க?
ரொம்ப நன்றீ நான் உடனே தரவிக்கம் செய்து பர்த்தேன் ரொம்பவும் பயன் உள்ள்தாக உள்ள்து நன்றீ
digital valcano use panni parungalin thalaiva?
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
Post a Comment