நெருப்புநரி உலவியில் நாம் உலவிக் கொண்டிருக்கும் பொழுது ஒருசில வலைபக்கங்களை திறக்கும் பொழுது அதில் உள்ள Youtube வீடியோக்கள் அல்லது வேறு எம்பெட் செய்யப்பட்ட வீடியோக்கள் அல்லது ஆடியோக்கள், நாமாக ப்ளே செய்யாமல் அதுவாகவே ப்ளே ஆகத் துவங்கிவிடும்.
சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் பொழுது, ஸ்பீக்கர் உங்களுக்கு தெரியாமலேயே அதிக வால்யூமில் இருக்கும் பொழுது நிகழலாம்.
ஒருவேளை உங்கள் இணைய இணைப்பு குறைந்த ஜி பி கொண்டதாக இருக்கலாம். இவ்வாறு இருக்கும் பொழுது, இப்படி தானாகவே இயங்கும் வீடியோக்களால் உங்கள் இணைய கணக்கில் தேவையில்லாமல் கணிசமான டவுன்லோடிங் லிமிட்டை நீங்கள் இழக்க நேரிடும்.
இதற்கான தீர்வாக நெருப்பு நரிக்கான Stop Autoplay என்ற நீட்சி தரப்பட்டுள்ளது. இந்த நீட்சியை நிறுவிய பிறகு, வீடியோ உள்ள வலைப்பக்கத்தில் வீடியோ லோட் ஆகாது. அதற்கு பதிலாக அவ்விடத்தில் ஒரு சிகப்பு பெருக்கல் குறி காணப்படும், ஒரு வேளை அந்த வீடியோ உங்களுக்கு பார்க்கவேண்டுமெனில் இதை கிளிக் செய்தால் அதன் பிறகு வீடியோ லோட் ஆகி ஓட ஆரம்பிக்கும்.
.
1 comment:
Nice info
Post a Comment