நம்மில் பலர் மைக்ரோசாப்ட் Office 2003 -ல் வேலை செய்து பழக்கப்பட்டவர்கள். திடீரென Office 2007 உபயோகிக்க துவங்கும் நிலை வரும்பொழுது, அதில் டூல்பாருக்கு பதிலாக உள்ள ரிப்பன் மெனுவை பார்த்து, சற்று திணறி, சில கட்டளைகளை தேடி சலித்துப்போய், மறுபடியும் 2003 இற்கே மாறி விட்டிருக்கிறோம்.
இதற்கு முக்கியமான காரணம் நாம் உபயோகிக்கப் போகும் கட்டளை எந்த ரிப்பன் மெனுவிற்கு உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது என்ற குழப்பமே ஆகும்.
நாம் ஒரு கணினி தொழில்நுட்ப வல்லுனராக இல்லாமலிருந்தாலும், புதிதாக வருகின்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டும் உபயோகப்படுத்தவும் வேண்டுமாய்தான் இருக்கிறோம்.
இதோ உங்களுக்காக, Office 2007 -ல் நீங்கள் தேடும் கட்டளைகளை எந்த ரிப்பனில் உள்ளது எனத் தேடித்தர, Microsoft Office Labs -இன் புதிய Add-in.
தரவிறக்க சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதை பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. பதிந்து கொண்டவுடன். Excel அல்லது Word என ஏதாவது ஒரு அப்பிளிகேஷனை திறந்தால் அதில் வழக்கமாக உள்ள ரிப்பனுக்கு அருகாமையில் Search என்ற புதிய tab வந்திருப்பதை பார்க்கலாம்.
இந்த சர்ச் பாக்ஸில் நமக்கு தேவையான கட்டளைகளை டைப் செய்தால் போதுமானது.
சரியாக கட்டளைகளையே டைப் செய்ய வேண்டுமென்றில்லை, உதாரணமாக Font size பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ, சர்ச் பாரில் smaller என டைப் செய்தால் போதும். அதுமட்டுமல்லாமல், நாம் டைப் செய்ததில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தாலும், அதுவே மாற்று வார்த்தையை தரும் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
சரியாக கட்டளைகளையே டைப் செய்ய வேண்டுமென்றில்லை, உதாரணமாக Font size பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ, சர்ச் பாரில் smaller என டைப் செய்தால் போதும். அதுமட்டுமல்லாமல், நாம் டைப் செய்ததில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தாலும், அதுவே மாற்று வார்த்தையை தரும் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
அது மட்டுமல்லாமல் Office 2007 -ல் உருவாக்கிய Docx, xlsx போன்ற கோப்புகளை 2003 -ல் திறக்க முடியவில்லை என்ற கவலை இருந்தால், கீழே உள்ள சுட்டியிலிருந்து File Format Converter ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
.
17 comments:
பேசாம இந்த ப்ளாக்ல உங்க பேரு சமய சஞ்சீவின்னு வச்சுடுங்க தல. அதென்னமோ சரியா தேவையான போஸ்ட் வரும். நன்றி
நன்றி தலைவா! தலைவா! நீங்களும் 2007 ஐ பார்த்து ரொம்ப டென்ஷன் ஆகிட்டிங்களோ ?
இந்த பதிவு எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றி சூரியா கண்ணன் சார்,Office 2003 லிருந்து 2007 மாறியதில் ரொம்ப தெணறி இப்ப தான் ஒரு வழி கொஞ்சம் கொஞ்சமா, ஒரு லெவலுக்கு வந்துள்ளேன்.ஒரு பிரிண்ட் பிரிவீவ் பார்க்க கூட தழாவிக்கொண்டு இருந்தேன்.இப்ப word art அது கண்டு பிடிக்க முடியல
நன்றிங்க திருமதி. ஜலீலா. சென்ற முறை நீங்கள் கேட்டிருந்த கணினி பிரச்னைக்கு எனது அதே பின்னூட்டத்தில் பதில் இட்டுந்தேன். பார்த்தீர்களா?
பயனுள்ள தகவல் திரு.சூர்யா பகிர்ந்தமைக்கு நன்றி!!!
நன்றி திரு. நித்தியானந்தம்
அட!!மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே...இப்போ தான் தட்டுத்தடுமாறி 2007 ன் நுட்பங்களை அறிந்து வரும் வேளையில் எளிய வழியைக் காட்டியுள்ளீர்கள்..மகிழ்ச்சி..
நன்றி முனைவர்.இரா.குணசீலன்!
நல்ல பயனுள்ள பதிவு.ஏற்கனவே கம்ப்யூட்டரில் எல்லாமே ப்ரெஞ்சுல இருந்தப்பா ரொமப் திக்கி திணறிட்டேன்.இப்போ ஒரளவு பரவாயில்லை.இந்த பதிவு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் எனக்கு...
நன்றி சகோதரி மேனகா!
மிக்க நன்றிபா
வணக்கம் சூர்யா!கொஞ்ச நாளைக்கு முன்னர்தான்,word exel க்கான extra tab க்கான மென்பொருளை தரவிரக்கி வைத்தேன்.அதனோடு இதுவும் பயனுள்ள மென்பொருளே.நன்றி.
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி எசாலத்தான்
கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், ரிப்பன் சூப்பர்.
உங்கள் பதிவை பார்த்து கொண்டேன் மிக்க நன்றி2007 nil wordart எபப்டி போக வேண்டும்.
வாங்க திருமதி. ஜலீலா! WordArt can be added to your document using a button on the Insert command tab.
Post a Comment