Excel 2003 பயன்பாட்டில் சரளமாக பணிபுரிந்து விட்டு, கடந்த சில காலங்களாக Excel 2007 உபயோகிப்பவர்கள், சில சமயங்களில், அவசரமாக ஒரு சில கட்டளைகளை ரிப்பன் மெனுவில் வலைபோட்டு தேடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை காரணமாக எக்சலில் நல்ல முன் அனுபவம் இருந்தும், இந்த ரிப்பன் மெனுவினால் பெரும் கால தாமதத்திற்கு உள்ளாகிறார்கள்.
இதற்கான தீர்வாக ஏற்கனவே நான் எழுதியிருந்த இரண்டு இடுகைகளை அடுத்துள்ள சுட்டிகளில் காணலாம்.
Microsoft Office 2007 -ல் Office 2003 -இன் மெனு வடிவை அமைக்க
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய
இது மூன்றாவது வழிமுறை. Excel 2003 பயன்பாட்டில் உள்ள ஒவ்வொரு கட்டளைகளும், Excel 2007 பயன்பாட்டில் எந்த ரிப்பன் மெனுவில் உள்ளது என்பதை விளக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ”Command Workbook" என்ற எக்சல் வொர்க்ஷீட்டில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மைக்ரோசாப்ட் வேர்டு 2007:-
நாம் Microsoft Word 2007 உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது டெக்ஸ்டை தேர்வு செய்ய ஹைலைட் செய்தால் தானாகவே Mini Formatting Toolbar தோன்றிவிடும்.
இந்த வசதி சில சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், பல சமயங்களில் எரிச்சலூட்டுவதாக அமைந்து விடுகிறது. இந்த Mini Formatting Toolbar நிரந்தரமாக நீக்க முடியாதபடி உருவாக்கப் பட்டிருந்தாலும், நாம் டெக்ஸ்டை ஹைலைட் செய்யும் பொழுது இது தானாகவே தோன்றுவதை தடுக்க ஒரு எளிய வழி.
Word 2007 ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Office Button ஐ கிளிக் செய்து Word Options க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் வசனப் பெட்டியில் Popular பொத்தானை சொடுக்குங்கள். வலது புற பேனில் “Show Mini Toolbar on selection” என்பதை Uncheck செய்து விடுங்கள்.
இனி இந்த மெனு தானாகவே தோன்றாது. இந்த மெனு தேவையெனில், மாற்றத்திற்கு தேவையான டெக்ஸ்டை தேர்வு செய்து வலது க்ளிக் செய்தால் போதுமானது.
.
5 comments:
உண்மையிலேயே தலைப்புக்கு ஏற்றாற்போல மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே..!!
தூள் தலைவா
useful sir...
நல்ல பயனுள்ள தகவல்
அருமையாக இருக்கு
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி!
Post a Comment