பதிவர்களில் பெரும்பாலோனோர் தங்களது இடுகைகளை உருவாக்க கூகிள் ப்ளாக்கரில் உள்ள ப்ளாக் எடிட்டரையே பெரும்பாலும் உபயோகித்து வருகின்றனர். இதில் சில சமயங்களில் படங்களை இணைப்பதிலும், காணொளிகளை இணைப்பதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன.
நமது வசதிக்கேற்றவாறு இடுகைகளை உருவாக்க கூகுள் க்ரோம் மற்றும் நெருப்புநரி உலாவிக்கான ScribeFire எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
நமது வசதிக்கேற்றவாறு இடுகைகளை உருவாக்க கூகுள் க்ரோம் மற்றும் நெருப்புநரி உலாவிக்கான ScribeFire எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
Add to Chrome பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, இது நிறுவப்பட்டதற்கான அறிவிப்பும் ஐகானும் உலாவியில் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.
இதனை முதல் முறையாக பயன்படுத்தும் பொழுது, உங்கள் பிளாக்கின் விவரங்களை உள்ளிணைக்க சொல்லும் கீழ்கண்ட அறிவிப்பு வரும்.
இந்த அறிவிப்பை பெட்டியை மூடிவிட்டு, இடது புற பேனில் உள்ள Add a New Blog லின்க்கை க்ளிக் செய்து உங்கள் பிளாக்கின் URL மற்றும் பயனர் பெயர், கடவு சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்யுங்கள்.
இப்பொழுது இடது புற பேனில் உங்கள் பிளாக்கில் உள்ள சிட்டைகள், மற்றும் தலைப்புக்கள் விவரமாக தொகுக்கப்பட்டிருப்பதை பாருங்கள்.
வலதுபுற பேனில் பல வசதிகளை உள்ளடக்கிய ப்ளாக் எடிட்டர்.
படங்களை இணைப்பது ப்ளாக்கரில் அதிக சமயம் எடுப்பது போலல்லாமல், நொடியில் இணைக்கப்படுகிறது.
இதே போன்று யூ ட்யுப் தளத்திலிருந்து நமக்கு தேவையான காணொளியின் URL அல்லது Embed Code இணைப்பதும் மிகவும் சுலபமாக இருக்கிறது.
இந்த இடுகை இந்த நீட்சியில்தான் உருவாக்கப்பட்டது.
ScribeFire நீட்சி தரவிறக்க - Google Chrome
ScribeFire நீட்சி தரவிறக்க - Firefox
ScribeFire நீட்சி தரவிறக்க - Google Chrome
ScribeFire நீட்சி தரவிறக்க - Firefox
.
14 comments:
செம! நன்றி தலைவா.
வாங்க தலைவா!
வாங்க தல எப்போ வந்தாலும் அசத்தல் தகவலோடதான் வர்றீங்க, மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...
Useful Post sir. thanks for sharing
ரொம்பவே பயனுள்ள தகவல்.. நன்றி சார்
பயனுள்ள இடுகை.. பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோ.
very useful tips. thank you.
to coninue
அருமையான தகவல். சிலருடைய ப்ளாக்குகளில் தங்கள் விருப்பம் போல் படங்களை இணைத்திருப்பதைக் கண்டேன். அது எப்படி என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன். மிகவும் நன்றி சுர்யா
பயனுள்ள தகவல் !
Thanks Soorya.
நெருப்பு நரில பட்டனக் காணோம். க்ரோமில படம் சொருவ இமேஜ் யூஆர் எல் தான் வருது. ஃபைண்ட் ஃபைல் பட்டனக் காணோம். அவ்வ்வ்.
Choose File பட்டன் இருக்கே தலைவா!..
varalai thalaiva.
Post a Comment