Wednesday, 3 August 2011

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 
பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 
ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 





டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 



.

24 comments:

Anonymous said...

வணக்கம் தல என்ன சார் ரொம்ப நாளா உங்க இடுகைகளை காணுமேன்னு பாத்தேன், வந்துட்டீங்களா ரொம்ப சந்தோஷம், பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி..

Anonymous said...

இனிமேல் தொடர்ந்து பதிவிடுவீங்களா?

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி விக்னேஷ்!..

vasu balaji said...

welcome back surya. thanks for the tips.

சேலம் தேவா said...

அசத்தலான ரீஎன்ட்ரி..!!அடிக்கடி வாங்க பாஸ்..!!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தேவா.. அவசியம் வருகிறேன்..

R.MATHIALAGAN said...

இன்று காலை தற்செயலாய் உங்களை பற்றி நினைக்கிறேன்.மாலை உங்க்ள் பதிவு ஆச்சர்யம்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி நண்பரே!..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பாஸ் யது நந் க்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து தங்கள் பதிவினை எதிர் பார்க்கிறோம்...

Mathuran said...

அருமையான பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி

hayathmohai said...

வணக்கம் தல என்ன சார் ரொம்ப நாளா உங்க இடுகைகளை காணுமேன்னு பாத்தேன், வந்துட்டீங்களா ரொம்ப சந்தோஷம், பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி..

தமிழ் பொண்ணு said...

மிக முக்கியமான பதிவு.பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

movithan said...

நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவைப் பார்த்தது மிகவும் சந்தோசம்.பல நாள் பழகிய நண்பனை நீண்ட நாளைக்குப் பின் கண்ட உணர்வு.
தொடர்ந்து எழுதுங்கள்.

balasubramanian said...

A timely solution and a sound solution at that. i was wondering why i was not receiving your emails. Happy to receive it now.
I am sure this resume comand will continue with out a pause.

timely, sound solution, < solution for folder shortcut>

LIYAKKATH said...



நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்>

லியாக்கத்

S.Lankeswaran said...

நன்றி சூர்யா. நானும் இந்த வைரசால் பாதிப்புள்ளானேன். இதே முறையில் தான் நானும் மீட்டெடுத்தேன்.

எல் கே said...

தல இதை பாருங்க

http://apolloparthiban.blogspot.com/2011/08/blog-post_8913.html

வே.நடனசபாபதி said...

அருமையான, உபயோகமான பதிவு. வாழ்த்துகள்!

திவாண்ணா said...

இது எனக்கு புதுசு. எந்த வைரஸ் இப்படி செய்யுது?

venkatsdove said...

use full tips...to daytoday activities

ravi said...

thanks kannan

ANBUTHIL said...

welcome back kannan

சத்ரியன் said...

வணக்கம்ணே,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு...பதிவு. ரொம்ப பயனுள்ளது.

பூ.இராஜேந்திரன் said...

நண்பர்களே எனக்கு எக்செல் செல்ஸ் merge எப்படி பண்றதுன்னு தெரியல, ஆகையால் தெரிந்த நண்பர்கள் அல்லது சூரிய அண்ணன் தயவு செய்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்,
அதவது வரிசையாக இருக்கும் ௭ செல்லை ஒரு ஒரு செல்லில் இருக்கும் வார்த்தைகளுக்கும் கமா போட்டு merge பண்ணும் போது ஒவ்வொரு வார்த்தை ஒன்னுக்கு கீழ் ஒன்றாக வர வேண்டும் தயவு செய்து யாராவது உதவுங்கள், நன்றி
எடுத்துகாட்டு:

ராமன்,
325, வடக்கு தெரு,
பெண்ணாகடம்,
கன்னியாக்குமரி மாவட்டம்,
684578

pe.rajendran@yahoo.com
Missed call or msg or any call me

My Mobile No: 9941008520

By
Rajendran.Pe

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)