Monday, 15 August 2011

விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி

விண்டோஸ் இயங்குதளத்தை  உபயோகிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் NirCmd எனும் ஒரு சிறிய இலவச Command Line Utility ஐ குறித்து ஒரு விளக்கம். 

நமது கணினியில் அல்லது மடிக்கணினியில் உள்ள DVD ட்ரைவை திறக்க / மூட, வால்யூமை மியூட் செய்ய  மற்றும் சத்தத்தை கூட்ட, குறைக்க, மானிட்டரை அணைக்க, ஸ்கிரீன் சேவரை துவக்க, Logoff செய்ய Standby mode இற்கு செல்ல, கணினியை அணைக்க, திறந்துள்ள அனைத்து இன்டர்நெட் Explorer விண்டோக்களை ஒரே நொடியில் மூட, என 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்களுக்கான டெஸ்க்டாப்  ஷார்ட்கட்களை  உருவாக்க இந்த NirCmd கருவி பயன்படுகிறது. (தரவிறக்கவும், இதன் மேலதிக பயன்பாட்டின் பட்டியலை காணவும்  சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)      

உதாரணமாக இந்த கருவியை பயன்படுத்தி நமது கணினியில் இணைக்கப்பட்டுள்ள CD /DVD ட்ரைவை Eject செய்ய ஒரு ஷார்ட்கட்டை உருவாக்குவது எப்படி என்பதை காணலாம். முதலில் கீழே தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து NirCmd கருவியை உங்கள் வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக D:\)

இப்பொழுது  Desktop இல் வலது க்ளிக் செய்து, திறக்கும் Context மெனுவில் New மற்றும் Shortcut ஐ க்ளிக் செய்யுங்கள்.      


அடுத்து திறக்கும் விசார்ட்டில்  Type the Location of the Item என்பதற்கு நேராக, D:\nircmd.exe cdrom open F: என டைப் செய்து Next பட்டனை சொடுக்குங்கள். (D:\ என்பது NirCmd.exe கோப்பை நமது கணினியில் சேமித்து வைத்திருக்கும் லொகேஷனை குறிக்கும், F: என்பது CD/DVD ட்ரைவை குறிக்கும், உங்கள் கணினிக்கு தகுந்தவாறு இவற்றை மாற்றிக் கொள்ளவும்).


  அடுத்து திறக்கும் உரையாடல் பெட்டியில், ஷாட்கட்டிற்கான பெயராக Eject CD/DVD என தட்டச்சு செய்து Wizard ஐ முடித்து, உருவாக்கிக் கொள்ளலாம். அடுத்து இதனை வலது க்ளிக் செய்து Prperties சென்று,  இந்த ஷார்ட்கட்டிற்கு தகுந்த ஐகானை நமது விருப்பத்திற்கு ஏற்ற படி உருவாக்கிக் கொள்வதோடு, சுருக்கு விசையையும் உருவாக்கி கொள்ளலாம். 


இதே வழிமுறையில் CD/DVD ட்ரைவை Close செய்ய,  Cdrom open f: என்பதற்கு பதிலாக CdRom Close f: என மற்றொரு ஷார்ட் கட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். 


இந்த NirCmd கருவியில் உள்ள 50 க்கும்  பிற கட்டளைகளை காணவும், தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.

.  

9 comments:

காந்தி பனங்கூர் said...

பயனுள்ள பதிவு.
நன்றி

Anonymous said...

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி, தங்களின் தளத்தில் உள்ள அனைத்து சுட்டிகளும் புதிய டாப்/விண்டோவில் திறக்குமாறு வைத்துள்ளீர்கள், இவ்வாறு இருப்பது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே இன்பவுண்ட் லிங்க்ஸ் மட்டும் அதே டாபில் திறக்குமாறு செய்யுங்கள், இதுபற்றிய மேலதிக விவரங்களுக்கு http://vigneshms.blogspot.com/2011/08/blog-post_09.html
இந்த பதிவை பார்க்கவும்.நன்றி

Unknown said...

நல்ல உபஜோகமான குறிப்பு

Kumaresan Rajendran said...

உங்களின் வருகை பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

என்னுடைய வலைப்பூவில் விண்டோஸ் 7 Service Pack 1யை ISO கோப்பாக தரவிறக்கம் செய்ய


http://tamilcomputerinfo.blogspot.com/2010/09/cd.html

Unknown said...

dear sir போல்டர் உள்ளே என்ன பயில் இருக்கிரது என அறிந்து கொள்ள நீங்கள் ஏட்கனவே பதிவிட்டுள்ளீர்கள் அது XP மட்டுமா நான் windows 7 யுஸ் பன்ரேன் எப்படி போல்டர் உள் இருக்கும் பயில்கலை தெறிந்து கொள்வது தயவு செய்து தெறியப்படித்தவும்.

Unknown said...

dear sir போல்டர் உள்ளே என்ன பயில் இருக்கிரது என அறிந்து கொள்ள நீங்கள் ஏட்கனவே பதிவிட்டுள்ளீர்கள் அது XP மட்டுமா நான் windows 7 யுஸ் பன்ரேன் எப்படி போல்டர் உள் இருக்கும் பயில்கலை தெறிந்து கொள்வது தயவு செய்து தெறியப்படித்தவும்.

kumaran
k.s.a

aotspr said...

பயன்னுள்ள தகவல்!.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ஸ்ரீதர் said...

பயனுள்ள பதிவுகள்/எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வருகை தாருங்கள் நண்பரே!பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

ADMIN said...

நீங்கள் எழுதும் ஒவ்வொரு தகவலும் பயன்படக்கூடிய வகையில் இருக்கிறது. நன்றி சூர்யா கண்ணன் சார்..!!

******

உங்கள் வலைப்பூவை ஆரம்பத்திலிருந்தே படித்து வரும் வாசகன் நான்..!!

முந்தைய வலைப்பதிவு திருடப்படாத்தற்கு முன்பு இருந்தே உங்கள் எழுத்துக்களை படித்து பயன்பெற்ற வாசகன் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்

******

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)