விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளங்களை பயன்படுத்திவரும் பயனாளர்கள். ஒரு சில சமயங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் பலவகையானவை. உதாரணமாக CD/DVD drive கள் My Computer -இல் காணாமல் போய்விடுவது, டெஸ்க்டாப்பிலிருந்து Recycle bin ஐ காணாமல் போவது. Task Manager மற்றும் Registry Editor திறக்காமல் போவது. Explorer.exe திறக்காமல் போவது. Thumbnail வேலை செய்யாமல் போவது. Internet Options காணாமல் போவது. Font install செய்யமுடியாமல் போவது. Aero peek வேலை செய்யாமல் போவது.
இது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய இலவச மென்பொருள் கருவி FixWin உங்களுக்காக..,(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
இதனை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு முதல் திரையில் தோன்றும் வசதிகளில் System File Checker Utility ஐ முதலில் ரன் செய்யுங்கள்.
அடுத்ததாக create a System Restore Point ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. நாம் மேற்கொள்ளப் போகும் செயலில் ஏதேனும் தவறு நேர்ந்தால், இந்த System Restore Point ஐக் கொண்டு பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டுவர இயலும்.
அடுத்து ஒவ்வொரு வசதியாக தேர்வு செய்து Fix பொத்தானை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் Fix செய்தபிறகு கண்டிப்பாக உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்ய மறவாதீர்கள்.
.
6 comments:
நான் xp professional-2002 service pack 2
HCL வைத்துள்ளேன்.வாங்கும் போது மவுஸ் ”பின் டைப்”.போய்விட்டது.
அதற்கு பிறகு டெல் மவுஸ் யூஎஸ்பி டைப். ஆனால் கிழ் உருளை. இதுவும் பல வருடம் உழைத்து போய்விட்டது. நேற்று வாங்கிய மவுஸ் brand I Ball.USB TYPE.WITH CENSOR. ஆனால் பிரச்சனை.
சிஸ்டம் ஆன் செய்து எல்லாம் பூட் ஆனா பின் ஆகஷனே இல்லை.மவுஸ்ஸின் யூஎஸ்பி பிளக்கை உருவி மீண்டும் மாட்டினால் வேலை செய்கிற்து. ஒவ்வொரு தடவையும் சிஸ்டம் ஆன் செய்து மவுஸ்ஸின் யூஎஸ்பி பிளக்கை உருவி மீண்டும் மாட்டினால்தான் மவுஸ் வேலை செய்கிறது. என்ன காரணம்?
கடைக்காரரிடம் கேட்டால் பின் டைப் மவுஸ் மாற்றிக்கொள்ளுங்கள் எங்கிறார்.இதற்கு முன் யூஎஸ்பி டைப் வேலை செய்ததே என்றால் பதில் இல்லை.
ஒன்றும் புரியவில்லை.எனக்கு யூஸ்பிதான் செளகரியம்.தாங்கள் தயவு கூர்ந்து இதற்கு விளக்கம் அளிக்க முடியுமா?
நன்றி
திரு. ரவி ஷங்கர் .. இது வழக்கமாக பல XP கணினிகளில் உள்ள பிரச்சனைதான்.. Service pack 3 ஐ தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.. சரியாகிவிடும்..
பயனுள்ள தகவல் சூர்யா சார். பகிர்வுக்கு நன்றி..!!
நன்றி அண்ணா!!!
http://gnometamil.blogspot.com/
நன்றி சார்.
சார் லிங்க் சரியாக வேலை செய்ய வில்லை .சோதித்து பார்க்கவும் .அல்லது இந்த லிங்கில் வாசகர்கள் முயற்சி செய்யவும் .
http://www.thewindowsclub.com/repair-fix-windows-7-vista-problems-with-fixwin-utility
Post a Comment