நாம் இணைய உலாவிகளில் வலைப் பக்கங்களை பார்வையிடும் பொழுது, இடையிடையில் தோன்றுகிற விளம்பரங்கள் சில சமயங்களில் எரிச்சலூட்டுபவையாக அமைந்து விடுகிறது.
இது போன்ற விளம்பரங்களை தவிர்க்க, Google Chrome உலாவிக்கான AdBlock நீட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த தளத்தில் உள்ள Install பொத்தானை அழுத்தி AdBlock நீட்சியை உங்கள் Google Chrome உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.
இதற்கான பொத்தான் டூல்பாரில் வெண்டுமெனில் show a button in the toolbar என்பதை தேர்வு செய்து, அடுத்து தோன்றும் install this helper extension லிங்கை க்ளிக் செய்து, அதையும் நிறுவிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது டூல்பாரில் புதிய AdBlock ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.
இனி வலைப்பக்கங்களில் விளம்பரங்களை நீக்க வேண்டுமெனில், அந்த வலைப்பக்கத்தில் இருக்கும் பொழுது, இந்த பொத்தானை அழுத்தி Block on Ad on this page என்பதை க்ளிக் செய்து Refresh கொடுத்தால் போதுமானது.
அந்த தளத்தில் உள்ள விளம்பரங்கள் நீக்கப்பட்டுவிடும்.
.
5 comments:
usefull post
thanks for sharing
தேவையற்ற பல விளம்பர இடைஞ்சல்களை நீக்க ஒரு அவசியமான பதிவு. நன்றி நண்பரே
Useful. Thanks.
டாங்ஸூஊஊ
ada nalla eruku.super surya kannan.
Post a Comment