Wednesday, 10 November 2010

உபயோகமான Desktop Icons - ON/OFF

ஒரு சிலரது கணினின் டெஸ்க்டாப்பில் கோப்புகள், ஷார்ட்கட்கள், ஃபோல்டர்கள் என நிரம்பி வழிவதை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கே என்ன என்ன ஐகான்கள் தங்கள் டெஸ்க்டாப்பில் உள்ளன என்பது நினைவில் வைத்திருப்பது கடினம்தான். 


இவ்வாறு தங்கள் டெஸ்க்டாப்பை வைத்திருப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான, அழகான ஒரு வால் பேப்பரை திரையில் அமைக்கும் பொழுது, இந்த ஐகான்களை OFF செய்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால், வழக்கமாக நாம் செய்வது, டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்து, Arrange Icons by --> Show Desktop Icons க்ளிக் செய்வதன் மூலமாக, ON/OFF செய்ய முடியும்.


ஆனால், இந்த பணியை எளிதாக்க, Hide Desktop Icons எனும் மிகச் சிறிய இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு இதற்கு ஒரு ஷார்ட்கட் ஐ உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்து விடாதீர்கள்.(ஏனென்றால் டெஸ்க்டாப் ஐகான்களை OFF செய்த பிறகு, மறுபடியும் ON செய்வதில் சிரமம் ஏற்படலாம்) மாறாக Start Menu / Quick Launch பாரில் இணைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு முறை க்ளிக் செய்ய, Desktop Icon கள் OFF ஆகும், மறுமுறை க்ளிக் செய்ய ON ஆகும். 






.

13 comments:

Praveenkumar said...

சூப்பர் நண்பரே..! அனைவருக்கும் பயனளிக்கும் தகவல்.

vasu balaji said...

என்னை இப்படி கிண்டலடிப்பதை எதிர்த்து டீக்குடிப்பேன். ஹி ஹி. நன்றி.

அன்பரசன் said...

Useful sir..
i will try..

எஸ்.கே said...

பயனுள்ளதாக உள்ளது!

சூர்யா ௧ண்ணன் said...

Mahesh என்ற பெயரில் பின்னூட்டம் இட்ட நண்பருக்கு..
(உண்மையை சொல்வதற்கு நீங்கள் ஒரிஜினல் Profile லிலேயே வந்திருக்கலாம்..)

அவரது குற்றச்சாட்டு .. எனது இடுகைகளில் பல, ஒரு ஆங்கில வலைப்பக்கத்தில் இருந்து Translate செய்யப்பட்டது!

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு வலைப்பக்கம் மட்டுமல்ல.. பல ஆங்கில வலைப்பக்கங்களில் இருந்தும் குறிப்புகளை நான் எடுத்துள்ளேன்..(உங்கள் பாஷையில் Translate)

நான் இடுகையில் குறிப்பிடும் எந்த ஒரு வசதியையும், மென்பொருளையும் நானோ அல்லது ஆங்கில பதிவர்களோ உருவாக்கவில்லை.. அதன் உருவாக்கத்தில் எனது பங்கு துளியளவும் இல்லை.(உதாரணமாக மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பில் உள்ள ஒரு வசதியை குறித்தான இடுகையை நான் எழுதுகிறேன்.. அந்த வசதி என்னால் உருவாக்கப்பட்டதா? அந்த வசதி குறித்த விஷயத்தை Help சென்றாலே தெரிந்து கொள்ளலாமே!)

ஒவ்வொரு இடுகையின் போதும் அதில் குறிப்பிடும் விஷயத்தை எனது கணினியில் நன்றாக பரிசோதித்த பின்னரே.. இடுகிறேன்..

உதாரணமாக combofix என்ற மென்பொருள் கருவி ஐ பற்றி ஆங்கிலத்தில் எழுதினாலும், அதை நான் தமிழில் எழுதினாலும், அதன் பயன்பாடு ஒன்றுதான்..

எனது பணி நான் கற்றுக்கொள்வதை பலருக்கும் கற்றுக் கொடுப்பதுதான்..


இதனால் மகேஷ் என்ற புனைப்பெயரில் பின்னூட்டிய நண்பருக்கும், மற்றும் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது யாதெனில்..

“நான் ஒரு படைப்பாளி அல்ல!..” ஜஸ்ட் படித்து தெரிந்து கொள்வதை நான் பரிசோதித்து பயனுள்ளதாக இருந்தால் அவற்றை பகிர்கிறேன்.. அவ்வளவுதான்!.

எனது பணி நான் கற்பதை .. பிறருக்கு கற்றுக்கொடுப்பது!. (இதற்காக எனக்கு அன்பளிப்பு எதுவும் வழங்கப்படுவதில்லை)

அன்புடன்
சூர்யா கண்ணன்

Unknown said...

Its my original profile only. Am not telling you are copying. I already saw the same post 1 day before so only i send like that. I like ur post too. Dont mistake me.

Unknown said...

Actually I am a software developer. Daily I am Reading many blogs through Google reader. So only i posted like that. Many useful tools i got from your post.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. மகேஷ்! என்னை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்த உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!..

Unknown said...

I have a doubt How you are saying i am using fake profile?

சூர்யா ௧ண்ணன் said...

உங்கள் Profile ஐ நீங்கள் ஷேர் செய்ய வில்லை.. உங்கள் Profile பக்கத்தில் உங்களை யாரென்று என்னால் அறிந்துகொள்ள முடியாது..

Unknown said...

Can u help me. How to do that ?

சூர்யா ௧ண்ணன் said...

உங்கள் Profile பக்கத்தில் My Profile link இற்கு சென்று, Edit Profile link க்ளிக் செய்து, தேவையான விவரங்களை கொடுங்கள்.. Display my full name so I can be found in search ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

மகேஷ்! இப்பொழுது Profile சரியாக உள்ளது.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)