ஒவ்வொரு முறையும் நமது விருப்பமான பதிவர்களின் இடுகைகளை, ஏதேனும் ஒரு உலாவியில் Google Reader மூலமாக தொடர்ந்து படித்து வருகிறோம். (இது சம்பந்தப்பட்ட எனது மற்றொரு இடுகையை பாருங்கள் Google Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி! ) இந்த Google Reader ஐ உலாவியின் துணையின்றி நேரடியாக உங்கள் Desktop இல் படிக்கவும், புதிதாக வரும் இடுகைகளுக்கான அறிவிப்பையும் நீங்கள் கணினியில் வேறு பணியில் இருக்கும் பொழுது பெற, மிக அருமையான இலவச மென்பொருள் Desktop Google Reader ஆகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த மென்பொருள் கருவி உங்கள் கணினியில் நிறுவுவதற்கு முன்பாக .NET framework 3.5 SP1 நிறுப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். முதல் முறை துவங்கும் பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவு சொல்லை கொடுத்து Login பொத்தானை அழுத்துங்கள்.
இனி உங்கள் அபிமான இடுகைகளை உலாவியின் துணையின்றி, உங்கள் டெஸ்க்டாப்பில் படித்து மகிழலாம்.
மேலும் இதன் இடது புற பேனில் உள்ள டூல்ஸ் ஐகானை அழுத்தி, தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி வலது புற பேனில், இடுகையை திறந்த பிறகு, அதை மற்றவர்களுடன் Facebook, Twitter போன்ற சமூக இணையத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இந்த கருவியை மினிமைஸ் செய்து சிஸ்டம் ட்ரேயில் வைத்துக் கொள்ளும்பொழுது, அவ்வப்பொழுது வரும் அப்டேட்களை உங்கள் டெஸ்க்டாப்பில் பாப் அப் திரையில் அறிவிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பின்னூட்டம் வசதி மட்டும் இல்லையென்று கருதுகிறேன்..
.
9 comments:
மிகவும் பயனுள்ள மென்பொருள அண்ணா.. பகிர்வுக்கு நன்றி..
அருமை சார்,
மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
நாம் ஒரு பதிவை கூகிள் ரீடரில் எப்படி பப்ளிஷ் பன்னுவது? கொஞ்சம் விளக்கமுடியுமா?
சூப்பர்
நன்றி தலைவா
அருமை! மிக்க நன்றி!
@kanmani
neenga ethuku readerla publish panreenga. blogla publish panna unga bloga yarum follow panrangalo avaga readerla varum
மிகவும் பயனுள்ள மென்பொருள நன்றி சார்.
என்னுடைய ரீடரில் சுமார் 200+ பதிவுகள் உள்ளன இது அத்தனை பதிவுகளையும் காட்ட மாட்டேங்குது...ஏதாவது settings
change pannauma
Post a Comment