நெருப்புநரி உலாவியில் இணையத்தில் உலாவுபவர்களுக்கு Tab Browsing மிகவும் பிடித்தமான ஒன்று. உதாரணமாக ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் இருக்கும்பொழுது, அந்த பக்கத்தில் உள்ள லிங்கை மவுசின் ஸ்க்ரோல் பட்டனை கொண்டு சொடுக்கும் பொழுது அந்த லிங்கிற்கான வலைப்பக்கம் புதிய Tab ல் திறக்கும்.
பலரும் சில சமயங்களில் திரையில் கொள்ளாத அளவிற்கு Tab களை திறந்து பணி புரிந்து கொண்டிருப்பதும் உண்டு. இந்த Tab களை எளிதாக கையாளுவதற்கு ஒரு பயனுள்ள நீட்சி Tab Mix Plus! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த Tab களை கையாளுவது என்ன பெரிய விஷயம் என கருதுபவர்களுக்கு ஒரு சில தகவல்களை பார்க்கலாம்.
1. ஒரு குறிப்பிட்ட விபரத்தை தேடு பொறியில் தேடும் பொழுது, லிங்குகளை பல டேப்களில் திறந்து வைத்து விட்டு, பிறகு ஒவ்வொன்றாக பார்த்து வருவோம். இவ்வாறு பார்வையிடும் பொழுது, நமக்கு தேவையான விவரங்கள் அடங்கிய பக்கத்தை கண்டறிந்த பிறகு, அந்த குறிப்பிட்ட Tab இற்கு வலது புறமாக (அல்லது இடது புறமாக) திறந்து வைத்துள்ள Tab கள் அனைத்தையும் மூடிவிடவேண்டும்.
2. ஒரு குறிப்பிட்ட Tab ஐ புதிய விண்டோவில் திறக்க வேண்டும்.
3. ஒரே URL ஐ கொண்ட Duplicate tab களை உருவாக்க வேண்டும்.
4. குறிப்பிட்ட Tab இற்கான URL ஐ காப்பி செய்ய வேண்டும்.
5. Duplicate tab களை மூடிவிடவேண்டும்.
6. Tab ஐ Lock செய்ய வேண்டும்.
7. குறிப்பிட்ட Tab அல்லது குறிப்பிட்ட Tab இற்கு இடது/வலது புறமுள்ள Tab களை Reload செய்ய வேண்டும்.
8. தவறுதலாக மூடிவிட்ட Tab ஐ Undo செய்ய வேண்டும்.
என்பது போன்ற பல வசதிகளை கையாளுவதற்கு கண்டிப்பாக நமக்கு இந்த நீட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக நாம் நெருப்புநரி உலாவியில், Tab இன் மீது வலது க்ளிக் செய்யும் பொழுது, கீழே உள்ளது போன்ற Context menu தோன்றும்.
இந்த Tab Mix Plus நீட்சியை நிறுவிய பிறகு, Tab இல் வலது க்ளிக் செய்யும் பொழுது, வரும் Context menu கீழே உள்ளது போன்று தோற்றமளிக்கும்.
மேலும், இதனுடைய Options பகுதிக்கு சென்று, Menu பொத்தானை அழுத்தி, Tab Context Menu க்ளிக் செய்து, வலது க்ளிக் Context menu வில் புதிதாக கீழே உள்ள வசதிகளில் தேவையான வற்றை இணைத்து கொள்ள முடியும்.
இந்த வசதியை பயன்படுத்தி டேப்களில் எளிதாகவும் விரைவாகவும் பணியாற்ற இயலும்.
.
5 comments:
நன்றி
வழக்கம்போல் அருமையான பயனுள்ள தகவல்.
ரொம்ப பயனுள்ளது. நன்றி தலைவா
வழக்கம்போலவே மிகவும் பயனுள்ள தகவல் சார்,
பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
இதை நானும் இப்போ பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன், நன்றி.
Post a Comment