வழக்கமாக நாம் வலைபக்கங்களிலிருந்து, அல்லது வேறு ஏதாவது டாக்குமெண்டிலிருந்து, தேவையான டெக்ஸ்டை காப்பி செய்து மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் பேஸ்ட் செய்வது வழக்கம். இவ்வாறு பேஸ்ட் செய்யும் பொழுது, அந்த டாக்குமெண்டில் அல்லது வலைப்பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட் மட்டுமின்றி அதனுடைய ஃபார்மேட்டிங் மற்றும் ஹைபர் லிங்குகள் அனைத்தும் பேஸ்ட் ஆகி நம்மை டென்ஷாக்கிவிடுவது வாடிக்கை.
நமது மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், பேஸ்ட் செய்தவுடன் அதன் கீழே உள்ள சிறு பேஸ்ட் ஐகானை நம்மில் பலரும் கவனிக்க தவறிவிட்டு, மறுபடியும் டெக்ஸ்டை ஃபார்மேட் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஐகான் நமக்கு என்ன சொல்லுகிறது? இந்த ஐகான் எதற்காக?
இந்த ஐகானில் அடங்கியிருக்கிறது சூட்சுமம். அந்த ஐகானில் க்ளிக் செய்து பாருங்கள்.
க்ளிக் செய்தவுடன் திறக்கும் சிறிய Context menu வில் Keep Text Only என்ற வசதியை க்ளிக் செய்தவுடன். நாம் பேஸ்ட் செய்திருந்த டெக்ஸ்டில் இருந்த ஃபார்மேட்டிங் அனைத்தும் (Hyperlink உட்பட) நீக்கப்பட்டு, வெறும் டெக்ஸ்ட் மட்டும் கிடைத்துவிடும்.
இது எப்படி இருக்கு?...சரி! இப்பொழுது அடுத்த பிரச்சனையை பார்ப்போம். இவ்வாறு நாம் வலைப்பக்கங்களிலிருந்து (விக்கிபீடியா போன்ற தளங்களிலிருந்து) அதிகப்படியான விவரங்களை காப்பி செய்து வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்யும் பொழுது, சில சமயங்களில் மொத்த கணினியே ஹேங் ஆனது போல செயலிழந்து விடுவதை கவனித்திருக்கிறோம்.
இது போன்ற நிகழ்வுகள், அந்த டெக்ஸ்டுடன் அதன் வடிவமைப்பு, ஃபார்மேட்டிங் என அனைத்துமே பேஸ்ட் ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமே முக்கிய காரணமாகும். இதனை மேலே சொன்ன வழிமுறையில் தீர்வு காண இயலாது. ஏனெனில், மேலே சொன்ன வழிமுறை பேஸ்ட் ஆனதற்கு பிறகு நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையாகும்.
நாம் எதிலிருந்து காப்பி செய்து, வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்தாலும், அதில் வெறும் ப்ளைன் டெக்ஸ்ட் மட்டுமே பேஸ்ட் ஆகும்படி வேர்டு தொகுப்பில் நாம் மாற்றத்தை உருவாக்க இயலும்.
உங்கள் வேர்டு தொகுப்பில், Office button ஐ அழுத்தி Word Options பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்து திறக்கும் திரையில் இடது புற பேனில் உள்ள Advanced பொத்தானை அழுத்துங்கள். இப்பொழுது வலதுபுற பேனில் Cut, Copy and Paste பகுதிக்கு சென்று, Pasting from other programs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Keep text only என்பதை தேர்வு செய்து Apply செய்தால் போதுமானது.
இது எப்படி இருக்கு?..
.
17 comments:
சுப்பர்பா இருக்கு:)
Good News Thanks
வனக்கம்
எனக்கு ஒரு பிரச்சனை. என் பிளாக்கில் தமிழ் மணம் கருவி பட்டையை இணைத்துள்ளேன். அது வலைப்பக்கத்தில் மேற்புறம் வருகிறது
அதை கீழ் பக்கம் கொண்டுவர முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
useful info.
//திரவிய நடராஜன் said...
வனக்கம்
எனக்கு ஒரு பிரச்சனை. என் பிளாக்கில் தமிழ் மணம் கருவி பட்டையை இணைத்துள்ளேன். அது வலைப்பக்கத்தில் மேற்புறம் வருகிறது
அதை கீழ் பக்கம் கொண்டுவர முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?//
ஐயா!, உங்கள் பிளாக்கர் டெம்ப்ளேட்டின் எடிட் HTML பகுதிக்கு சென்று
என்ற வரிக்கு கீழாக, தமிழ்மணத்தின் HTML code ஐ இடுங்கள். அல்லது உங்கள் இன்டலி கோட்டிற்கு முன்னராகவும் கொடுத்தால் போதும்..
இதை செய்வதற்கு முன்பாக டெம்ப்ளேட்டை ஒரு பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
நன்றி ஐயா!
செம சூப்பர்!!! ரொம்ப நன்றி!
ஒவ்வொரு தடவையும் அசத்தலான பதிவோட கலக்குறீங்க.. சூப்பர் நண்பா
நன்றி அண்ணா நல்ல தகவல்.
என்னுடய பிளாக்கில் indli ஓட்டு பட்டயை இணைக்க என்ன செய்யவேண்டும் அண்ணா!!!
பதிவு அருமை. உபயோகமான தகவல்களை தருவதற்கு நன்றி.
நல்ல பயன்னுள்ள தகவல்... நன்றி...
பயனுள்ள தகவலுக்கு நன்றி..
Useful
அருமையான தகவல். வேர்டில் உள்ள அந்த ஐகானின் பயன்பாடு எனக்கு அதிகம் தேவைப்படும். அறியத் தந்தமைக்கு நன்றி. எக்ஸ்பி ப்ரவுசிங் செய்ய்யும்போதே தானே ஷட் டவுன் ஆகித் திரும்பவும் தானே திறக்கிறதே? ஏன்?? சென்ற முறை செக் செய்தபோது வெப்காம் எரர், மோடம் எரர் என்று வந்தது! என்ன செய்யவேண்டும்??
to continue
// இது பதினேழாவது 'முதல் பத்து' தரவரிசை பதிவு.
'நம்ம வீட்டுப்பிள்ளை' சூர்யா கண்ணன், சென்ற மாதம் 1 லட்சம், இந்த மாதம் 90,000 என்று அலெக்ஸா ரேங்கில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
அலெக்ஸா ரேங்கில் குறைந்த எண்ணே அதிக மதிப்பு.
அலெக்ஸா ரேங்க்ஸ் 01.10.2010 காலை இருந்தவாறு:
1. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.com
Alexa Rank 88,879 //
மிக்க மகிழ்ச்சியான,பெருமையான செய்தி.
வாழ்த்துக்கள் சூர்யா.
அருமை சார்
பயனுள்ள ஒன்று பகிர்ந்தமைக்கு நன்றி
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறத். மிக்க நன்றி.
Post a Comment