விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம்.
இப்படி முதல் முறை ரீஸ்டார்ட் ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும்.
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை.
சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும். விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம்.
ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான்.
முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா?
இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.
இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள்.
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD ட்ரைவிற்கு சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள்.
இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும். பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிய எனது பிற இடுகைகளை வாசிக்கவும்.
.
14 comments:
பயனுள்ள தகவல் நன்றி!
Good one
குருவே எனக்கும் இந்த பிரச்னை வந்தது. நான் சென்னையில் இருக்கும் போது அடிக்கடி low voltage வரும் அப்போதெல்லாம் நான் சரியாக shutdown செய்யாமல் விட்டதால் இந்த பிரச்னை வந்தது. பிறகு சர்வீஸ் சென்டரில் 300 ரூபாய் வாங்கி கொண்டு " os போய்விட்டது என்று கூறி சரி செய்து கொடுத்தார்கள் . இனி அந்த கவலை இல்லை
நன்றி தலைவா.
எளிமையான விளக்கத்துடன் பயனுள்ள தகவல்.
நன்றி
மிகவும் நன்றி நண்பரே. இதை 2 மாதம் முன்பு சொல்லிக்கொடுத்திருந்தால் 350 ரூபாய் மிச்சம். பரவாயில்லை. இனிமேல் கைகொடுக்கும்.
அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையை தீர்க்க வழி கூறியிருக்கீங்க. ரொம்ப நன்றி.
திருவட்டாறு சிந்துகுமார்
அருமை அருமை. நல்ல பதிவு பயனுள்ள தகவல் நன்றி!
இதே பிரச்சனை எனக்கும் வந்தது நான் லினக்ஸ் இன்ஸ்டால் பண்ணிட்டேன்
நன்றி தலைவரே, நான் dual பூட் (விண்டோஸ், உபுண்டு ) இல் உபுண்டு load செய்து, விண்டோஸ் -ஐ கரெக்ட் செய்யும் வாய்பு உள்ளதா? எனது விண்டோஸ் சிஸ்டம் இத்தாலி மொழியில் உள்ளதால், எனக்கு choose செய்யும் வாய்பு குறைவு. மேலும் எனது HDD -இல் KBS காலத்து இசை தட்டு போலே கிரிசிடும்.
விண்டோஸ் xp cd முலம் பூட் செய்ய முயன்ற பொது, உபுண்டு GRUB load ஆகி விடுகிறது. என்ன செய்ய? இத்தாலி மொழி-இல் xp உள்ளதால் இன்ச்டல்லிங் installing option ரன் ஆக ஆரம்பிகிறது. command prompt -கு எப்படி கொண்டு வருவது? உதவவும்.
விண்டோஸ் xp cd முலம் பூட் செய்ய முயன்ற பொது, உபுண்டு GRUB load ஆகி விடுகிறது. என்ன செய்ய? இத்தாலி மொழி-இல் xp உள்ளதால் இன்ச்டல்லிங் installing option ரன் ஆக ஆரம்பிகிறது. command prompt -கு எப்படி கொண்டு வருவது? உதவவும்.
Thank you, I found the way,with your help. Now XP working well. But in ubuntu menubar, there is a new icon for HDD, saying bad sectors, Is there any way for HDD defragmentation in ubuntu?
enakum indha prachanai pala murai vanthulladhu.......naan perumbalum boot.ini file restore seiven....pala samayam sari aagi vidum...sila samayam....?!!!!!
inimel no problem....
thanks friend
Post a Comment