உபுண்டு லினக்ஸில் நாம் பல விண்டோஸ் பயன்பாடுகளை உபயோகிக்க முடிவதில்லை என்ற குறை நிறைய பேருக்கு உண்டு. உதாரணமாக அலுவலகங்களில் நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் பயன்பாடுகள், வேர்டு பிராசசர், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன் போன்றவைகள் உபுண்டு போன்ற இலவச லினக்ஸ் இயங்குதளங்களில் உள்ளன, ஆனால் டேலி போன்ற பயன்பாடுகள் லினக்ஸில் நிறுவ முடியாது என்பது பலபேருடைய கருத்தாக உள்ளது.
ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தக் கூடிய பல பயன்பாடுகளை உபுண்டு லினக்சில் நிறுவி பயன்படுத்த முடியும் என்பது இனிப்பான செய்தி. இதற்கு வைன் (Wine) என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இதனை உபயோகித்து Tally 9 ஐ உபுண்டு லினக்சில் நிறுவி பயன்படுத்தும் முறையை பார்க்கலாம். "Wine" தரவிறக்க மற்றும் நிறுவும் முறைகள் பற்றிய விளக்க வலைப்பக்கத்தின் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் கொடுத்துள்ள வழிமுறைப்படி உபுண்டுவில் வைனை நிறுவிக் கொள்ளுங்கள். பிறகு Applications மெனுவில் Wine இல் Browse C:\ Drive என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு திறக்கும் Drive C:\ File Browser இல் Program Files கோப்புறைக்குள், Tally 9 கோப்புறையை காப்பி செய்து கொள்ளுங்கள்.
பிறகு, அந்த Tally 9 கோப்புறைக்குள் உள்ள Tally9.exe கோப்பை திறந்தால் போதுமானது. உங்கள் அபிமான டேலி இப்பொழுது உபுண்டுவில் வேலை செய்யும்.
உபுண்டுவில் டேலி 9
UBUNTU வின் பொருள் - Humanity to Others.
10 comments:
நம்புங்கள் நண்பரே!
இன்று இதை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தேன்
வீட்டில் உபுண்டு போடலாம் என்றிருக்கிறேன், டேலி உபயோகிப்பதுண்டு அதான் யோசிச்சிகிட்டு இருந்தேன் ...
இதனை உபயோகித்து வேறு எந்த "EXE" கலை ரன்னலாம் உபுண்டுவில் ?
வாங்க ஜமால்!
நான் டேலி மட்டுமே சோதித்து பார்த்தேன்.. மற்றவைகளும் வேலை செய்யும் என கருதுகிறேன்..
நன்றி, புது டெம்ப்ளேட் கலர் நல்லா இருக்கு.
நல்ல செய்தி திரு.சூர்யா சார்.....பகிர்ந்தமைக்கு நன்றி!!!!
முழுசா மாறலைங்க. ஆனாலும் பதிஞ்சிருக்கேன். தொடர்கிறேன், தொடருங்கள்..:))
ஒரு காலத்தின் இந்த wine நிறுவுவதற்குள் நாக்கு வெளியில் தள்ளிவிடும் இப்போது எல்லாமே சுலபமாகிவிட்டது.
டேலி தமிழில்- பதிவு ஏதாவது இருக்கா?
அருமையான பதிவு!!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!!
தொடருங்கள்,,,,
என் தனி முயட்சியால் தான் கம்ப்யூட்டர் கற்று பாவித்து வருகின்றேன். என்னைப்போன்ற கத்துக் குட்டிகளுக்கு தங்கள் பக்கம் ஒரு வரப்பிரசாதம். உங்கள் பனி தவறாது தொடர வேண்டும். என் அன்பு வேண்டுகோள். CAD முழு பாடத்தையும் தமிழில் உடன் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதை தயவு செய்து அறியத் தரவும். நான் Saudi Arabia வில் இருக்கின்றேன்.
Post a Comment