1. ஒரு Word Document இன் முதல் பக்கத்தில் ஒரு டேபிளை உருவாக்கி விட்டீர்கள், அந்த டேபிளுக்கு மேலே ஏதாவது டெக்ஸ்டை சேர்க்க வேண்டுமானால் [Ctrl] + [Home] கீயை அழுத்தி கோப்பின் முகப்பிற்கு வந்து விடுங்கள். பிறகு, [Ctrl] + [Shift] + [Enter] கீகளை ஒருசேர அழுத்தி புதிய வேற்று வரியை உருவாக்கி, அங்கு தேவையான வரிகளை சேர்க்கலாம்.
2. டேபிளில் Column அல்லது Row வின் அளவை மெளசை உபயோகித்து மாற்றும்பொழுது, ஒவ்வொரு Column/Row என்ன அளவில் இருக்கிறது, எந்த அளவிற்கு மாற்றப் போகிறோம்? என்பதை அறிந்து கொள்ள Resize செய்யும்பொழுது Alt கீயை அழுத்திக்கொண்டால் Column/Row வின் அளவை தெரிந்து கொண்டு எளிதாக Resize செய்து கொள்ளலாம்.
3. ஒரு டேபிளில் முதல் Row வில் ஒவ்வொரு Column த்திலும் Heading ஐ கொடுத்துள்ளீர்கள். இந்த heading ஒவ்வொரு பக்கத்திலும் தொடர்ந்து தானாகவே வரவைக்க, முதலில் டேபிளின் header உள்ள முதல் Row வை தேர்வு செய்து, பிறகு மேலே உள்ள Table menu வில் க்ளிக் செய்து Heading Rows Repeat என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. இனி ஒவ்வொரு பக்கத்திலும் தொடரும் டேபிளில் தானாகவே heading வந்து விடும். (இது Print Layout view வில் மட்டுமே திரையில் தெரியும், மற்றபடி பிரிண்ட் செய்யும்பொழுது வந்துவிடும்)
4. மெளசை உபயோகிக்காமல் டேபிளை உருவாக்க,
+----+----+----+ என டைப் செய்தால் ஒரு Row மற்றும் மூன்று Column களுடன் டேபிள் உருவாக்கப்படும். இதில் minus (-) குறி அந்த Column த்தில் உள்ள கேரக்டர் Spacing ஐ குறிக்கிறது.
Word டேபிளில் கணக்குகளை போட முடியுமா? மற்றொரு பதிவில் பார்ப்போம்.
மேலே படத்தில் உள்ளது போல வேர்டில் தேவையான ஓரு பகுதியை மட்டும் தேர்வு செய்ய, Alt கீயை அழுத்திக்கொண்டு தேர்வு செய்தால் போதும்.
.
22 comments:
omg. thank you so much surya.:)). தலைவா! இந்த இடுகையெல்லாம் சிறிய மாற்றங்களுடன் தினத்தந்தியில் திங்கட்கிழமை வருகிறதே. நீங்களா எழுதுகிறீர்கள்?
நல்ல உபயோகமான டிப்ஸ் சார்
மிக்க நன்றி.
(ஓட்டும் போட்டாச்சு)
//வானம்பாடிகள் said...
omg. thank you so much surya.:)). தலைவா! இந்த இடுகையெல்லாம் சிறிய மாற்றங்களுடன் தினத்தந்தியில் திங்கட்கிழமை வருகிறதே. நீங்களா எழுதுகிறீர்கள்?
//
நன்றி தலைவா!
தமிழ் கம்ப்யூட்டர் இதழில் மட்டுமே நான் எழுதி வருகிறேன்.
தினத்தந்தியில் எனது இடுகைகள் சில மாற்றங்களுடன் வருகிறது என சாய்தாசன் அவர்களும் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.. சுட்டுருவான்களோ .. எதற்கும் தொடர்பு கொண்டு பார்க்கிறேன்.
நன்றி இளமுருகன்!
sir please tell me how to measeure 3d dimension
வேலு உங்கள் கேள்வி விளங்கவில்லை...
I like your site Suryaa!!
அனைவருக்குமே மிகுந்த உதவியாக இருக்கும் இந்த பதிவு.
எனக்கு ஒரு உதவி தேவை-
வீடியோ சிடீ-யை டிவிடி வீடியோவாக எப்படி மாற்றுவது (3 வீடியோ சிடிக்கள் ஒரே டிவிடியாக மாற்றவேண்டும்). விரிவான உதவி தேவை.
// வரதராஜலு .பூ said...
அனைவருக்குமே மிகுந்த உதவியாக இருக்கும் இந்த பதிவு.
எனக்கு ஒரு உதவி தேவை-
வீடியோ சிடீ-யை டிவிடி வீடியோவாக எப்படி மாற்றுவது (3 வீடியோ சிடிக்கள் ஒரே டிவிடியாக மாற்றவேண்டும்). விரிவான உதவி தேவை.//
நன்றி!
உங்கள் சந்தேகத்திற்கு தீர்வாக கீழே தரப்பட்டுள்ள எனது மற்றொரு பதிவை பாருங்கள்..
http://suryakannan.blogspot.com/2010/01/dvd.html
//கக்கு - மாணிக்கம் said...
I like your site Suryaa!!//
நன்றி! கக்கு - மாணிக்கம்
தவறாக ஏதோ ஒனறை காபி பேஸ்ட் செய்ததால் முந்ததைய கமெண்டை டெலிட் செய்துவிட்டேன்.
//உங்கள் சந்தேகத்திற்கு தீர்வாக கீழே தரப்பட்டுள்ள எனது மற்றொரு பதிவை பாருங்கள்..
http://suryakannan.blogspot.com/2010/01/dvd.html
//
உடனடி உதவிக்கு மிக்க நன்றி சூர்யா கண்ணன். டவுன்லோட் செய்துகொண்டிருக்கிறேன்.
thanks for sharing Surya
நன்றிங்க தேனம்மை!
புதிதாய் மௌஸ் இல்லாமல் டேபிள் அமைக்க கற்று கொடுத்தமைக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி நண்பா.. எக்ஸ்செல் முழுதும் கற்று கொடுத்தால் நன்றாக இருக்கும்.. உதவி செய்வீர்களா?
தமிழ் கம்யூட்டரில் எழுதுவது தாங்களா
மிக சந்தோஷம் - முதல் இஷ்யூவில் இருந்தே படித்து வருகிறேன், இப்பவும் சந்தாதாரர் தான் ...
தமிழ் கம்ப்யூட்டர்ல எழுதுவது நீங்கள்தானா? தெரிந்து கொண்டேன். உபயோகமான தளம்
நல்ல பயனுள்ள பதிவு - ஏலிய முறையில் விளக்கப் பட்ட செயல்
நல்வாழ்த்துகள் சூர்யா
எனக்கொரு உதவி. செல்லில் மெமரி கார்டில் பாடல் பதிவு செய்தால் 1 GB Card என்று வைத்துக் கொண்டால், அதில் 650 To 700 MB தான் பதிவாகிறது. 700 MB CD யில் மட்டும் 690 MB வரை கூட பதிவு செய்ய முடிகிறது. ஏதும் செய்ய முடியாதா?
நல்ல பயனுள்ள பதிவு !!
தமிழ் கம்ப்யூட்டர் இதழிலும் எழுதுறீங்களா?? வாழ்த்துக்கள் சகோ!!
வாழ்த்துக்கள், சுலபமா சொல்லி கொடுத்திருக்கீங்க
நல்ல பயனுள்ள பதிவு.
//சுட்டுருவான்களோ .. எதற்கும் தொடர்பு கொண்டு பார்க்கிறேன்//
இருக்கலாம்
Post a Comment