.
நாம் கணினியில் முக்கிய பணியில் இருக்கும்பொழுது, பல விண்டோக்களில் பல வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகள், வலைப்பக்கங்கள் போன்றவற்றை திறந்து வைத்திருப்போம்.
திடீரென்று ஒரு அவசர அழைப்பு! உடனடியாக வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம். கணினியில் திறந்து வைத்துள்ள அனைத்து விண்டோக்களையும் உடனடியாக க்ளோஸ் செய்து விட்டு கிளம்ப வேண்டும். என்ன செய்யலாம்?
இதோ உங்களுக்காக Close All இலவச கருவி.. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை கணினியில் நிறுவவேண்டும் என்ற அவசியம் இல்லை. தரவிறக்கம் செய்த பின்னர் அந்த கோப்புறைக்குள் உள்ள CloseAll.exe என்ற கோப்பை மட்டும் வலது க்ளிக் செய்து Context மெனுவில் Send To -> Desktop (create shortcut) க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
இனி தேவைப்பட்டால் Rename செய்து கொண்டு, டாஸ்க் பாரில் ட்ராக் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்! இதை க்ளிக் செய்வதன் மூலமாக அனைத்து விண்டோக்களையும் ஒரே சொடுக்கில் க்ளோஸ் செய்து விடலாம். (சேமிக்காத கோப்புகளை மட்டும் சேமிப்பதற்கான வசனப் பெட்டி தோன்றும்)
.இனி எல்லாத்தையும் ஒரே சொடுக்கில் க்ளோஸ் பண்ணுங்க.. (அதுக்கு முன்னால ஓட்டு போடுங்க.. )
.
9 comments:
மிகப்பெறும் உதவி இது
மிக்க நன்றி.
ஆமாங்க நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி..:))
பயனுள்ள பதிவு...
thanks for the idea
அருமை, பயனுள்ள தகவல். நன்றி சூர்யா கண்ணன்.
ஆஹா. நன்றி! நன்றி!
உண்மையிலேயே நல்ல உபயோகமான தகவல் நன்றி
பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளி !
nantri ayya
Post a Comment