apt-get எனப்படும் Command line கருவியின் எளிமையாக்கப்பட்ட Graphical வடிவமே Synaptic Package Manager ஆகும். (விண்டோசில் Add/Remove Programs போன்றது).
இந்த விண்டோ மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Package Browser இடது புறமும், Package List வலது மேல் புறத்திலும், Package Details வலது கீழ் புறமும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாம் புதிய மென்பொருள் பேக்கேஜ்களை Install செய்வது மற்றும் ஏற்கனவே பதிந்த பேக்கேஜ்களை remove, configure மற்றும் upgrade அல்லது மொத்த உபுண்டு இயங்குதளத்தையே upgrade செய்து கொள்ளலாம்.
மேலும் புதிதாக நிறுவப்போகும் பேக்கேஜிற்கும் ஏற்கனவே நிறுவியுள்ள பேக்கேஜிற்கும் உள்ள தொடர்புகளை மற்றும் முரண்பாடுகளை அறிவது போன்றவற்றை இந்த Synaptic Package Manager உள்ளடக்கியுள்ளது.
உபுண்டுவில் System > Administration > Synaptic Package Manager. என்பதை கிளிக் செய்தால் Synaptic Package Manager ஐ திறக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட பேக்கேஜின் மேலதிக விவரங்களை அறிய அந்த குறிப்பிட்ட package ல் வலது கிளிக் செய்து Properties சென்றால் தெரிந்து கொள்ளலாம்.
புதிய பேக்கேஜை நிறுவ,
இது ஒரு சிறு பகுதி மட்டுமே, நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் அலசலாம்.

- Reload என்ற பொத்தானை அழுத்தவும் அல்லது Ctrl+R அழுத்தவும்.
- தேவையான பேக்கேஜை வலது கிளிக் செய்து context menu வில் உள்ள Mark for Installation என்பதை கிளிக் செய்யவும். (நீங்கள் தேர்ந்தெடுத்த பேக்கேஜிற்கு, துணை பேக்கேஜ் ஏதும் தேவைப்பட்டால் அல்லது ஏதாவது Conflict இருந்தால் கீழ் கண்ட டயலாக் பாக்ஸ் வரும்).
- இதில் Mark என்பதை கிளிக் செய்யவும்.
- இதே போன்று தேவையான பேக்கேஜ்களை தேர்ந்தெடுத்த பிறகு Apply கிளிக் செய்யவும்.
- Apply the following changes என்ற டயலாக் பாக்ஸிலும் Apply என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் கணினியிலிருந்து நீக்க விரும்பும் பேக்கேஜை வலது கிளிக் செய்து Context menu வில் Mark for removal என்பதை கிளிக் செய்யவும்.
- இதே போன்று நீக்க விரும்பும் பெக்கேஜ்களைஎல்லாம் மார்க் செய்த பிறகு Apply கொடுக்கவும்.
- அனைத்தையும் உறுதி செய்த பிறகு, வரும் உறுதிபடுத்தும் டயலாக் பாக்ஸில் Apply என்பதை கிளிக் செய்யவும்.
- மேற்கண்ட முறையிலேயே Mark for upgrade என கொடுக்கலாம்.
இது ஒரு சிறு பகுதி மட்டுமே, நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் அலசலாம்.
No comments:
Post a Comment