கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் அட்மின் கடவு சொல்லை மறந்து போவது, அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.
இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் இழந்துவிடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்டோஸ் 7 Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணினியை துவக்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் Options திரையில், Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில், கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:\windows\system32\sethc.exe c:\
இப்பொழுது Sticky Keys கோப்பானது C:\ இல் காப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe
Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும்பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.
இப்பொழுது கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள். Login திரை தோன்றும் பொழுது, Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)
Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர் பெயர் (surya) மற்றும் கடவு சொல்லை (newpassword) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)
net user surya newpassword
அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.
c:\sethc.exe c:\windows\system32\sethc.exe.
Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.
.
11 comments:
நல்ல பதிவு நண்பரே,
a useful post. thanks for the info.
to continue
அருமைமிகு நன்பருக்கு நண்றிகள் பல
…எனக்கு இன்னுமொரு உதவி செய்யவேனுமாய் கேட்டுகொள்கிறென் .நான் என் கணிணியில் இரட்டை ஒஎஸ் போட்டிருக்கிறேன் ஒன்றில் எக்ஸ்பியும் மற்றதில் விண்டோ 7 இருந்தது. அதில் விண்டோ 7 கரப்ட் ஆகிவிட்டதால் அதை பார்மெட் செய்து விட்டேன் .இப்பொழுது விண்டோ 7 புதிய ஒரிஜினல் வாங்கி அதை எப்படி லொடு செய்வது ? என்று தெரியாமல் முழிக்கிறேன் என் C டிரைவில் உள்ள எக்ஸ்பியை இழக்கவிரும்பவில்லை. D டிரைவில் விண்டோ 7 லொடு செய்வதற்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் வணக்கத்துடன் நண்றி ஸ்.G.ஸ்வாமிநாதன்
Dear sir
can you tell how to remove ms power point password in 2003 or 2007
please sir..........
I forgot my presentation slide password.so that time i can't edit that anyway so please help me sir.....
sent any answer for mail id-(msmujidh123@gmail.com)
Thanks for the tricks Mr.Surya Kannan.
Babu
Tirupur
நம்முடய கம்ப்யூட்டரை யாராவது நமக்கு தெரியாமல் ஓபன் செய்திருந்தாள் எப்படி தெரிந்து கொள்வது.
Hello Sir,
Windows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம் ஈசியான முறையில் தீர்வு காணுங்கள் Very Argent Sir.
Windows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்வதற்கு ஈசியான முறையில் தீர்வு காணுங்கள் Very Argent Sir.
Post a Comment