Saturday, 19 February 2011

Google Chrome: PDF Reader இல்லாத கணினிகளுக்கான மாற்று

நாம் ஒரு சில சமயங்களில், நண்பர்களுடைய கணினி அல்லது அலுவலக கணினியை அவசரத்திற்கு பயன்படுத்தும் பொழுது, அவற்றில் PDF Reader நிறுவப்படாமல் இருக்கலாம். (கூகிள் குரோம் உலாவி நிறுவப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்)  உங்களிடம் உள்ள PDF கோப்பை உடனடியாக திறந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எனில் இந்த வகை கோப்புகளை திறப்பதற்கான மாற்று வழியை கூகிள் குரோம் உலாவி நமக்கு அளிக்கிறது. 



தேவையான PDF கோப்பை வலது க்ளிக் செய்து திறக்கும்  context menu வில்  Open with ஐ க்ளிக் செய்யுங்கள். ஒருவேளை Open with வசதி வரவில்லையெனில் shift மற்றும் மெளசின் வலது பொத்தானை க்ளிக் செய்யலாம். 


  இந்த Open with பகுதியில் Google Chrome பட்டியலிடப்படவில்லை எனில், Choose program ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Open with  உரையாடல் பெட்டியில் , Browse பொத்தானை அழுத்தி, Google Chrome உலாவி உங்கள் கணினியில் எங்கு நிறுவப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் அந்த பகுதியை browse செய்து கொடுக்கலாம்.      


ஆனால் Google Chrome உலாவி Program Files கோப்புறைக்குள் நிருவப்படுவதில்லை. எனவே இது நிறுவப்பட்ட பகுதியை தேர்வு செய்ய, Google Chrome உலாவியின் shortcut ஐ வலது க்ளிக் செய்து, properties க்ளிக் செய்து, திறக்கும் உரையாடல் பெட்டியில், அதில் Target பகுதிக்கு நேராக உள்ள லொகேஷனை காப்பி செய்து, பேஸ்ட் செய்தால் போதுமானது. 

  
இனி உங்களுக்கு தேவையான PDF கோப்பு உங்கள் அபிமான குரோம் உலாவியில் திறக்கும். 

 

.

8 comments:

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

நன்றி தலைவா

மாணவன் said...

மிகவும் பயனுள்ள பதிவு

பகிர்வுக்கு நன்றிங்க சார் :)

movithan said...

அருமையான தகவல்.என் தலைவா,இத்தனை நீண்ட இடைவெளி?

GEETHA ACHAL said...

உங்களுடம் ஒரு doubt கேட்க வேண்டும்...

நான் இதுவரை 200க்கும் மேலாக blogsயினை follow செய்கிறேன்...அதற்கு மேல் follow செய்ய முடியவில்லை...ப்ளாகில் அனுமதிக்க மாட்டுது..

ஒருவர் எவ்வளவு ப்ளாக் follow செய்யலாம்...

நன்றி

Geetha6 said...

USEFUL SURYA

Anonymous said...

பகிர்தலுக்கு நன்றி!

சூர்யா ௧ண்ணன் said...

தங்களை போன்றோரின் ஆதரவின் பயனாக.. ஒரு பிரபல பதிப்பகத்திலிருந்து ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. அந்த புத்தகம் எழுதும் முனைப்பில் இருப்பதால்தான் இந்த இடைவெளி... முடித்தவுடன் மீண்டும் பழைய வேகத்தில் வருகிறேன்..

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)