Microsoft word தொகுப்பில் "Latha" தமிழ் எழுத்துருவை அனைவரும் முயற்சி செய்து பார்த்திருப்போம்.. பலரும் தோற்றிருப்போம்.. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பொருத்தமட்டில், தமிழில் உள்ளீடு செய்வதற்கு எ-கலப்பை, குறள், அழகி, NHM Writer போன்ற பல கருவிகள் இருந்தாலும், (NHM -இல் வேர்டு தொகுப்பில் முயன்ற பொழுது லதா எழுத்துரு ஒரு சில சமயங்களில் பெட்டி பெட்டியாகத்தான் வந்தது) ஒருங்குறி (யுனிகோட்) முறையில் வேர்டு தொகுப்பில் "லதா" எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச Microsoft Indic Language Input Tool மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த தளத்திற்கு சென்று, Install Desktop Version ஐ க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
மேலும் உங்களது இயங்குதளத்திற்கு (விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா / ஏழு) ஏற்ப இந்த வசதியை எப்படி உருவாக்குவது என்பது இந்த தளத்திலேயே விரிவாக, விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளதால் நான் அதை இங்கு விளக்கவில்லை)
இந்த கருவியை நிறுவி, உங்கள் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்த பிறகு, Language Tool bar இல் தமிழ் வந்திருப்பதை கவனிக்கலாம். இனி வேர்டில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு முன்பாக இதனை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
இனி தட்டச்சு செய்யும் பொழுது, வார்த்தைகளை முடிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட பிற வார்த்தைகள் Context menu வில் தோன்றுவதை கவனிக்கலாம்.
.
15 comments:
சூப்பர் தகவல் நண்பரே..!
பகிர்வுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி சிறப்பாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்...
தொடரட்டும் உங்கள் பணி
பிரமாதம் தலைவரே! நன்றி!!
பயனுள்ள பதிவு. நன்றிகள் பல
அருமையான தகவல்
முழங்கட்டும் தமிழ் சங்கு
Thanks for the information
இது ஒரு மீள்பதிவா ?
நீங்கள் இதைபற்றி எப்போதோ பதிந்து விட்டதாக நினைக்கிறேன்.
//Dinesh said...
இது ஒரு மீள்பதிவா ?
நீங்கள் இதைபற்றி எப்போதோ பதிந்து விட்டதாக நினைக்கிறேன்.//
இல்லை நண்பரே!.. அது கூகுள் தமிழ் உள்ளீடு!.. குறித்தானது..
I am Using this for Long.. Its Really Nice. Additional Info : Shortcut key to Toggle from English to Tamil is Left Shift + Alt
பயனுள்ள தகவல் தோழரே ! இன்று தான் இத்தளத்துக்கு முதன்முறை வருகிறேன். மிகவும் அருமை ...
மிகவும் பயனுள்ள கருவி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
nantri
vkdigitals.blospot.com
வணக்கம்,
முதலில் உங்கள் சேவைக்கு நன்றி.
மேலும் நான் வெளினாடில் வேலை செயும் என் நண்பனுடன் என் கணினீல் இருந்து அவர் கைபேசிக்கு இலவசமாக பேசவேண்டும் முடியுமா?. அதற்கு என்ன வழி.
நன்றி, நல்ல தகவல்
Your Want More Pages Views On Your Blogger Post. Pay - Rs.75 Get 2000 Page views Instantly. Whatsapp : 8300692548
Post a Comment