மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பயன்பாட்டை உபயோகித்து வருபவர்கள், தங்களது Word, Excel அல்லது Powerpoint கோப்புகளில் புகைப்படங்களை இணைக்கும் பொழுது, அந்த புகைப்படங்களை தேவையான அளவு crop செய்து கொள்வது, சிறப்பு எபக்ட்கள் ஆகியவற்றை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
வழக்கம் போல Insert இற்கு சென்று தேவையான படத்தை உங்கள் டாக்குமெண்டில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி இணைக்கப்பட்ட ஒரு சாதாரண Bird ஐ Love Bird (!)ஆக்குவது எப்படி?
ரிப்பன் மெனுவிலிருந்து Crop வசதியை எடுத்துக்கொண்டு படத்தை தேவையான அளவு crop செய்து கொள்ளுங்கள்.
இனி அதே Picture Tools மெனுவிலிருந்து Picture shape வசதியை க்ளிக் செய்து தேவையான வடிவத்தை (Heart) தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த படம் அதே வடிவில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
மேலும் இந்த மெனுவில் உள்ள Picture Border, Picture effects போன்ற வசதிகளை பயன்படுத்தி படத்தை மேலும் மெருகூற்றலாம்.
இனி நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்டில் Shadow, Bevel போன்ற வசதிகளை பயன்படுத்தி படங்களை அழகாக வடிவாக்க முடியும்.
.
6 comments:
ஐ! வானம்பாடி:)). நன்றி சூர்யா. டிப்சுக்கு:))
சூர்யா, ஒரு நல்ல இலவச வீடியோ கட்டர் சாப்ட்வேர் பற்றி பதிவு போடவும்.
நன்றி....
லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ்....
பயனுள்ள தகவல்.... நன்றி...
அன்புள்ள சுர்யகண்ணன் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களையும் ,நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறேன். காரணம் இன்று தான் நான் நீண்ட நேரம் உங்கள் தளத்தை படித்தேன். இதுவரை நேரம் இல்லாததால் படிக்கமுடியவில்லை. உங்களுடைய ஒவ்வொரு இடுகையும் மிகவும் பயனுள்ளதாக எனக்கு அமைந்தது. படிக்க படிக்க பல புதிய தகவல்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தது. பல இடுகைகளில் இருந்து நான் எனது டைரியில் இருந்து குறிப்பு எடுத்து கொண்டேன். இன்று முதல் என் மனமார்ந்த குருக்களில் நீங்களும் ஒருவர். இனி நேரம் இல்லை என்றாலும் உங்களுக்கு என தனி நேரம் ஒதுக்க போகிறேன். உங்கள் பழைய தளம் திருடப்பட்டு அதை மீண்டும் நீங்கள் மீட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அப்போது நான் உங்களிடம் தளத்தை எப்படி backup எடுப்பது என கேட்டேன் . இன்று உங்கள் தலத்தில் அதற்கு ஒரு தனி இடுகை இருந்தது . அதை நான் குறிப்பு எடுத்துக்கொண்டேன்.
மேலும் backup செய்ய தேவையான மென்பொருளையும் தரவிறக்கம் செய்துகொண்டேன். நான் உங்களை குருவாக நினைப்பதால் மீண்டும் ஓன்று கேட்கிறேன் . எனது ms word documunt இல் தமிழில் டைப் செய்ய முடியவில்லை. பெரும்பாலும் நான் எனது மெயிலில் தான் தமிழில் டைப் செய்கிறேன். எனது கணினியில் உள்ள ms word il தமிழ் இல் டைப் செய்வது எப்படி என்று தயவு செய்து கூறுங்கள்.
மேலும் வேலன் அவர்கள் தளமானது pdf கோப்பாக தரவிறக்கம் செய்யமுடிகிறது. அது போல உங்கள் தளத்தையும் pdf கோப்பாக தரவிறக்கம் செய்ய வழி செய்ய வேண்டும் .
பணிவுடன் கார்த்திகேயன்
தலைவா..
மிகவும் அருமை.. வளர்க உங்கள் பணி...
மிகவும் அருமை..
Post a Comment