கூகிள் க்ரோம் உலாவியில், நாம் இணையத்தில் ஆங்கில கட்டுரைகளை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை எனில் அதற்காக மற்றொரு டேபில், இதற்க்கான பொருளை தேடவேண்டிய அவசியம் இனி இல்லை.
கூகிள் க்ரோமிற்க்கான Google Dictionary நீட்சி இந்த பணியை மிகவும் எளிதாக்குகிறது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, உங்கள் க்ரோம் உலாவியில் address bar க்கு அருகில் Dictionary icon புதிதாக வந்திருப்பதை காணலாம்.
இனி தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, பொருள் தெரியாத வார்த்தையை தேர்வு செய்து இந்த ஐகானை கிளிக்கினால், விளக்கம் அதே திரையில் கிடைக்கும்.
அல்லது தேவையான வார்த்தையின் மீது இரட்டை க்ளிக் செய்தால் அந்த வார்த்தையையொட்டி, அதன் விளக்கம் கிடைக்கும்.
இந்த நீட்சியின் வசதிகளை மாற்றியமைக்க, அட்ரஸ் பார் அருகிலுள்ள ஐகானை க்ளிக் செய்து, அங்கு Extension options சென்றால் போதுமானது.
5 comments:
Very useful one. No need to open another separate dictionary.
Thanks Surya.
அருமையான பதிவு......
வாழ்த்துக்கள்.....
THANKS SURYA
very good one. ty surya
நன்றி நண்பா
Post a Comment