நாம் கணினியில் ஒரு கோப்பை அழிக்கிறோம், அதை Recycle bin லிருந்தும் நீக்கி விடுகிறோம். அந்த கோப்பு உண்மையில் உங்கள் கணினியிலிருந்து நீக்கப் பட்டு விட்டதா?
இல்லை என்பதே பதில்! File system Table லில் இருந்து அந்த கோப்பின் reference மட்டுமே நீக்கப் பட்டுள்ளது. அந்த கோப்பு குறிப்பிட்ட ட்ரைவில் எழுதப்பட்டுள்ள இடத்தில் மறுபடியும் ஏதாவது கோப்பு விவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டால் மட்டுமே அந்த கோப்பு உண்மையிலேயே நீக்கப் பட்டுள்ளதாக கருதமுடியும். ஃபோர்மெட் செய்யும் பொழுதும் இதே கதைதான்.
உங்கள் பழைய கணினியை யாருக்காவது விற்கிறீர்கள் அல்லது கொடுக்கிறீர்கள், அல்லது உங்கள் மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுக்கிறீர்கள், (இந்த இடுகை சத்தியமாக சாமியார்களுக்கு எழுதப்பட்டதல்ல) இப்படி கோப்புகள் அழித்ததாக நீங்கள் நினைத்திருக்கும் ட்ரைவிலிருந்து, ஒரு சில மென்பொருட்களைக் கொண்டு எளிதாக திரும்ப எடுத்து விட முடியும்.
அப்படியெனில் கணினியில் ஒரு ட்ரைவில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி? ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது, Eraser எனும் சுதந்திர இலவச மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
உங்கள் கணினியில் உள்ள ட்ரைவில் தகவல்களை நிரந்தரமாக அழிப்பதற்க்கான மென்பொருள் இது என்பதால், மிகவும் கவனமாக கையாளவும்.
.
15 comments:
மீ த 1 நு.தகவலுக்கு நன்றி சார்.
One of the useful posting from you.Pl. submit the story in Tamilish.com Surya, so that we able to cost our votes.Thanks for sharing.
ஓஹ இப்படி கூட செய்யலாமா?தகவலுக்கு நன்றி சார்நல்வாழ்த்துகள்நட்புடன் பெரோஸ்
பகிர்வுக்கு நன்றிகள்
நன்றி சந்ரு!
நன்றி ஃபெரோஸ்!
நன்றி மாணிக்கம்!
நன்றி ஜெய்
பகிர்தலுக்கு நன்றி சார்.
நன்றி தலைவா:)
நல்ல பதிவு.அழித்த போப்புக்களை மீண்டும் பெறுவது எப்படி? தயவு செய்து ஒரு மென்பொருளொன்றை தரவும்.
இதுக்கு சிகிளீனர் புரோகிராம் யூஸ் பண்ணலாமில்லையா.. %டெம்ப்% ரன் பண்ணி டெம்ப்ரவரி பைல்ஸ் கிளியர் பண்ணலாமா... முழுவதும் பைல்ஸ் கிளியர் ஆகிருமா..
சில சமயம் நாம வேண்டாம்னு ஒரு கோப்பை அழித்துவிடுவோம், பின்னர் குப்பைக் கூடையையும் சுத்தம் செய்து விடுவோம். அதற்கப்புறம் அந்த கோப்பு தேவைப் படுதே எனும் போது அதை காப்பாற்றி திரும்பப் பெரும் வழி இருந்தால் சொல்லுங்களேன்.
அருமையான பதிவு.என்னிடம் sure delete உள்ளது.
எனது போண் தவறுதலாக Restore all
ஆகிவிட்டது Sony Ericsson K530i phone
ஆணால் இதில் இருந்த முக்கியமான SMS கள் எனக்கு வேண்டும். மீளப் பெற ஏதும் வளியுண்டா? தயவு செய்து பதில் தரவும்.
Post a Comment