Wednesday, 28 July 2010

பென் டிரைவ் பாதுகாப்பு - Autorun.inf

இப்பொழுது அனைவரின் கைகளிலும் பென் டிரைவ் புழங்குவது, நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு சிறு அடையாளமே.ஒரு  குறிப்பிட்ட  கணினியிலிருந்து, தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக சேமித்துக் கொள்ள CD/DVD ஆகியவற்றை விட ஒரு சிறந்த எளிய சாதனமாக இருப்பது இந்த Flash/Pen டிரைவ்கள்தான்.


ஆனால், இந்த பென் டிரைவ்களின் மூலமாகவே பெரும்பாலான NewFolder.exe virus, kinza.exe virus, W32.Rontokbro.B@mm virus,  Regsvr.exe போன்ற வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் வெகு விரைவாக உங்கள் கணினியை தாக்குகின்றன. இது போன்ற மோசமான பாதிப்புகளை உருவாக்கக் கூடிய இந்த வைரஸ்கள் விரைவாக, நமது கண்காணிப்பை மீறி நமது கணினியில் பரவுவதற்கு அதில் உள்ள Autorun.inf என்ற ஃபைல் தான் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி என்னதான் சக்தி இருக்கிறது இந்த Autorun.inf கோப்பில் என்று பார்த்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windows 95 பதிப்பு வெளி வந்த பொழுது, இது புழக்கத்திற்கு வந்தது. அதாவது, விண்டோஸ் 95 இயங்குதளத்தில்  CD யை திறப்பதற்கு முன்பாகவே அல்லது அந்த சிடியை My Computer -ல் இரட்டை க்ளிக் செய்யும் பொழுது,    இந்த Autorun அந்த CD யின் ரூட் டைரக்டரியில் உள்ள Autorun.inf  கோப்பை படித்து அதில் தரப்பட்டுள்ள கட்டளைகளை செயல்படுத்தும் பங்காற்றுகிறது. உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஒரு Autorun.inf கோப்பில் உள்ள கட்டளைகள்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
label= My Thumb Drive(98XXXXXXXX)
   

ஒரு பாதிக்கப்பட்ட பென் ட்ரைவை நல்லதொரு Antivirus மற்றும் Anti malware  உள்ள கணினியில் திறந்து, Tools -> Folder Options சென்று Show hidden files and folders க்ளிக் செய்து விட்டு, அதில் உள்ள கோப்புகளின் விவரங்களை பார்க்கும் பொழுது,


Hidden வடிவில் அந்த பென் டிரைவில் உள்ள வைரஸ்களை (நமக்கு சம்பந்தமில்லாத / நாம் உருவாக்காத கோப்புகள்) காண முடியும். (இப்படி காண்பிப்பது போல, வைரஸ் தாக்கப்பட்ட கணினியில் காண்பிக்காது. அவற்றில் Folder Options வசதி நீக்கப் பட்டிருக்கும்.) இவற்றை நமது கணினியில் ஏற்றுகின்ற வேலையை இந்த Autorun.inf கோப்புகள் செய்கின்றன. 

இப்படி சந்தேகமுள்ள பென் ட்ரைவ்களை நமது கணினியில் இணைத்த பிறகு, நேரடியாக My Computer -இல் சென்று திறக்காதீர்கள். Start -> Run இற்கு சென்று அந்த பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை கொடுங்கள் (H:) இனி திறக்கும் Explorer -இல் மேலே குறிப்பிட்டிருப்பது போல, Show hidden files and folders என்ற வசதியை enable செய்து கொள்ளுங்கள். இனி அந்த பென் டிரைவில், உங்களுக்கு சம்பந்தமில்லாத, .EXE கோப்புகள் ஸ்கிரிப்ட் கோப்புகளை shift+del கொடுத்து நீக்கி விடுவது நல்லது.      

இது போன்ற தாக்குதல்களிலிருந்து நமது கணினியை காக்க No Autorun என்ற இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இந்த மென்பொருள் கருவியை நமது கணினியில் பதிந்து கொள்வதன் மூலமாக இது போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பலாம்.


.

22 comments:

vasu balaji said...

aha!இந்த வங்கொடுமையிலிருந்து மீளவும் வழியிருக்கா. ரொம்ப நன்றி

சூர்யா ௧ண்ணன் said...

வாங்க தலைவா~!

Unknown said...

வட கிடைச்சதும் அசத்திட்டீங்க.

நன்றி. பயனுள்ள தகவல்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி சரவணன்! வடை தொலஞ்சு பத்து நாளுக்கு பிறகுதானே திரும்ப கிடச்சது.. ஊசி போயிடுச்சுன்னா? அதான் சுட சுட ..

சூர்யா ௧ண்ணன் said...

வாங்க நண்பா!

க.பாலாசி said...

அடடா... மிகவும் பயனுள்ள தகவலுங்க... பலநேரம் இந்த பென் ட்ரைவால படுற பாடு இருக்கே.. சொல்லி மாளாது... நல்லவேள இப்டி ஒரு வழியிருக்கிறத சொல்லியிருக்கீங்க... நன்றி....

அன்புடன் நான் said...

மிக்க நன்றிங்க.....

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க பாலாசி!

சூர்யா ௧ண்ணன் said...

வாங்க சி. கருணாகரசு!

ஈரோடு கதிர் said...

மிக்க நன்றி சூர்யா

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க கதிர்!

இராகவன் நைஜிரியா said...

நன்றி சூர்யா கண்ணன். மிக மிக பயனுள்ள தகவல்.

இது தெரியாமல் ரொம்ப கஷ்டப் பட்டுகிட்டு இருந்தேன்.

ஜெய்லானி said...

இந்த ஆட்டோ ஐஎன் எஃப் எப்பவும் தலைவலி பிடிச்ச ஃபைல்தான் .இதனாலேயே எப்பவும் ஹிட்டன் ஃபைலை ஷோவிலேயே நான் வைத்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி..

க ரா said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி

Raja said...

எனக்கு ஒரு சந்தேகம், இந்த சாப்ட்வேர் தர இறக்கம் பண்ண தேவை இல்லையா? தர இறக்கம் command வரலே

arisundar said...

VERY GOOD KEEP IT UP

WITH THANKS
ARISUNDAR

arisundar said...

very good keep it up

S.முத்துவேல் said...

super sir
i need
softwere
thank you

DR said...

இந்த மாதிரி ஒரு பிரச்சினையில் நானும் ஒரு தடவை மாட்டி இருக்குறேன். ஆனா அது எப்புடி சரி ஆச்சுண்ணு எனக்கே தெரியலை...

அந்த நேரத்துல இந்த மாதிரி ஒரு வழி காட்டுதல் கிடைத்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்...

தகவலுக்கு மிக்க நன்றி...

அ.முத்து பிரகாஷ் said...

எனக்கு தேவையான புதிய தேடிக்கொண்டிருந்த தகவல் ..நன்றி சூர்யா !

மோகன்ஜி said...

pen drive என் போன்ற பயில்விப்பவர்களுக்கு ஆறாவது விரல் போன்றது.மிக உபயோகமான பதிவு. நன்றி சூர்யா..
http://vanavilmanithan.blogspot.com

ivingobi said...

Dera sir... ennoda PC il Autorun.inf form aagi irukku athanai remove seiya ovvoru muraiyum format thaan seiya vaenduma ...illai veru vazhi irukka...... ?

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)