விளையாட்டிற்கு இரண்டும், உபயோகமாக ஒன்றும்.
நம்மில் பெரும்பாலோனோர் தேடுபொறியாக கூகிள் தேடு இயந்திரத்தையே பயன் படுத்தி வருகிறோம். இந்த கூகிள் முகப்பு பக்கம் அன்றைய தினத்தின் சிறப்பம்சத்தை கருத்தில் கொண்டு சிறந்த லோகோவுடன் தோற்றமளிக்கும். இந்த முகப்பு பக்கத்தை நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது எப்படி?
இதற்கென்றே சில தளங்கள் உள்ளன. அதில் ஒன்று www.buzzisearch.com . இந்த தளத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்யுங்கள்.
பிறகு அதன் கீழே உள்ள அனிமேட்டட்எழுத்து வகைகளில் உங்களுக்கு தேவையான வகையை தேர்வு செய்யுங்கள். அடுத்து திறக்கும் திரையில் உங்கள் விருப்பபடி Google பக்கம் திறக்கும். இதை உங்கள் உலாவியின் முகப்பு பக்கமாகவோ அல்லது புக் மார்க் செய்து விட்டாலோ இனி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கூகிள் பக்கத்தில் பணிபுரியலாம்.
அடுத்ததாக கூகிள் பக்கத்திற்கு Background படத்தை இணைக்க ஒரு வலைத்தளம் www.mcsearcher.com இந்த தளத்தில் சென்று கூகிள் பக்கத்திற்கு தேவையான பெயரையும், background படத்தையும் இணைத்து விட்டு Create here பொத்தானை சொடுக்குங்கள்.
இனி திறக்கும் உங்கள் விருப்பமான பக்கம் புதிய படத்துடன்.
Gmail நம்மில் பலரும் உபயோகிக்கும் ஒரு மின்னஞ்சல் வசதி. இதில் மின்னஞ்சல் பயன்பாட்டை தவிர, மற்றொரு உபயோகமான பயன்பாடு ஒளிந்து கொண்டிருக்கிறது.
PDF வடிவிலான ஒரு டெக்ஸ்ட் கோப்பை நீங்கள் எடிட் செய்ய வேண்டும், அதற்கான மென்பொருள் அச்சமயம் உங்களிடம் இல்லை என வைத்துக் கொள்வோம். என்ன செய்யலாம்?
அந்த கோப்பை உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கே மின்னஞ்சல் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த மின்னஞ்சலை திறந்து கொண்டு attachment பகுதியில் அந்த கோப்பிற்கு நேராக உள்ள View பொத்தானை சொடுக்குங்கள். இனி திறக்கும் Google Docs பக்கத்தில் உங்கள் கோப்பு திரையில் தோன்றும்.
அதற்கு மேலாக உள்ள Plain HTML என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த PDF கோப்பு HTML கோப்பாக திரையில் தோன்றும். இனி நீங்கள் செய்ய வேண்டியது, இதில் உள்ள டெக்ஸ்டை காப்பி செய்து வேர்டு போன்ற பயன்பாடுகளில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். Editable Text இப்ப ரெடி.

8 comments:
கையக் குடுங்க தலைவா. லாஸ்ட்டா சொன்னதுக்கு நான் படுற பாடு இருக்கே.ரொம்ப நன்றி.
Useful informations!!! Thanks for sharing...
தகவல்களுக்கு நன்றி.
அவரவர் விருப்பத்திட்கேட்ப screen ஐயும் மாற்றிக் கொள்ள அருமையான ஐடியா, நன்றி சார்.
இனிய இடுகைக்கு நன்றி தலைவா....
super!
vanakkam anna nalla vasayam nanri aana onnu atha naan try panninen ok achi ennoda mazila firefox sinnathaa aagivittathu athanala aacha illa ennoda mistake irukkuma thirumba kondu varathukku naan enna seyya vendum plese sollunga
third-super info..
thanks
Post a Comment