நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது?
உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
தொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான்! நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.
யாஹூ மின்னஞ்சல் கணக்கை முழுவதுமாக அழிப்பது எப்படி என்பதைப்பற்றி கீழே தரப்பட்டுள்ள நண்பரின் வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.
Yahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது?
10 comments:
வழக்கம் போல் அருமையான தகவல் :-))
நன்றி சிங்கக்குட்டி!
யாஹூ வை ஒழிக்கறதுன்னு முடிவோட இருக்காங்க போல!கண்டிப்பாக யாஹூ வில் இருந்து மாறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நான் எல்லாம் யாஹூ ரசிகன் :-)..நான் எப்ப மாறப்போறேன்னு தெரியல.. ;-)
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக இருக்கு ப்ரதர்!!
ஜிமெயில் லில் unread msg எவளுவு என்று வருது ஆனால் இதற்கு முன்னர் மெயில் திறந்ததும் குறிப்பிட்ட நபரிடமோ அல்லது ஒரு கம்பெனி யில் இருந்தோ 10 மெயில் படிக்காமல் இருந்தால் அது தனிப்பட்ட முறையில் மெலே தெரிந்தது தற்போது தெரியவில்லை அதற்க்கு என்ன செய வேண்டும் .(ex:asset 10 ,FeedBlitz 6)
நன்றி மலர்.நீங்கள் கேட்ட வசதிகள் அனைத்தும் ஜிமெயில் - ல் Labs டேபில் உள்ளது. ஜிமெயில் -ல் Settings சென்று Labs லிங்கை கிளிக் செய்து, கீழ்கண்டவற்றை சரிபார்க்கவும். Hide unread countsInbox preview
நன்றி! சகோதரி மேனகா!
நன்றி கிரி!//யாஹூ வை ஒழிக்கறதுன்னு முடிவோட இருக்காங்க போல!//சேச்சே! அப்படியெல்லாம் இல்லை. நண்பர் ஒருவர் கேட்டிருந்தார், அவருக்கான பதில்தான் இந்த பதிவு!
Hello friend, Is there any option available to take backup of my whole gmail mails and details? please help me. Really your site is great.
மிக சுலபம் நண்பரே!உங்களுடைய Microsoft Outlook / Express/ Windows Mail -ல் ஜிமெயில் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அவ்வளவுதான். http://suryakannan.blogspot.com/2009/09/blog-post_15.html
Post a Comment