ஜிமெயில் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரையும், கடவு சொல்லையும் கொடுத்து கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது ஜிமெயில் திரையின் வலது புறம் மேல் மூலையிலுள்ள Settings என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது கீழே வரும் Settings திரையில் General டேப் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் 'General' டேபை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இதில் Language என்பதற்கு நேராக உள்ள Gmail Display Language -ல் தமிழ் ஐ தேர்வு செய்யுங்கள்.
மின்மடலை தமிழில் உருவாக்க, Enable Transliteration என்பதை கிளிக் செய்து, பிறகு தமிழை தேர்ந்தெடுங்கள். (இனி Compose mail சென்றால் 'அ' என்ற பொத்தானை கிளிக் செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம்).
பிறகு, கீழே உள்ள Save Changes என்ற பொத்தானை சொடுக்குங்கள்.
அவ்வளவுதான்!. இனி உங்கள் ஜிமெயில் திரை தமிழில் மிளிரும்..,
.
8 comments:
உங்களுக்கு ஏன் சூப்பர் சூர்யான்னு பட்டம் குடுக்கலை:)). அசத்தல் எப்பவும் போல.
ஆஹா! நன்றி தலைவா!
நன்றி சூர்யா தரமான படைப்பு
திரு சூர்யா அவர்களே...எதோ புலிய பாத்து பூனை சூடு போட்ட மாதிரி. உங்கள பாத்துதான் ப்ளாக் எழுத ஆசை வந்தது.என்னோட ப்ளாகுக்கு விசிட் பண்ணி ஓட்டு போட்டதுக்கு மிக்க நன்றி. உங்களோட பதிவுகள் எல்லாம் சூப்பர்.
நன்றி நித்தியானந்தம்!
//எதோ புலிய பாத்து பூனை சூடு போட்ட மாதிரி. உங்கள பாத்துதான் ப்ளாக் எழுத ஆசை வந்தது.//வாழ்த்துக்கள் வேல்ஸ்!தொடர்ந்து எழுதுங்கள். புலின்னா, கொட்டை எடுத்ததா? எடுக்காததா? (சும்மா தமாசு... )
வழக்கம் போல நல்ல பதிவு, ஓட்ட போட்டாச்சு :-))
எனக்கு ஓரு சந்தேகம் opera browser ல் bookmarkல் உள்ள web address delete செய்வது எப்படி என்று கூறவும்.... shafiullah76@gmail.com
Post a Comment