Friday, 31 December 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!..


மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்
 - பாரதி  


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!..

.

Friday, 24 December 2010

Antivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!

எனது கணினியில் வழக்கமாக Kaspersky Internet Security, (அதுவும் முறையாக உரிமம் பெற்ற) நிறுவப்பட்டிருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து தப்ப முடிந்தது. இதன் காரணமாகவே எனது வாடிக்கையாளர்களுக்கும் இந்த Antivirus தொகுப்பையே பயன்படுத்தும்படி சொல்லி வந்தேன். 

சென்ற வாரம் திங்களன்று, எனது கணினியில் Kaspersky 2010 உரிமத்தின் காலம் நிறைவடைந்து விட்டது. 15 நாட்களுக்கு முன்னரே தொடர்ந்து அறிவிப்பு வந்துக் கொண்டிருந்தாலும், கைவசமே புதிய Kaspersky 2011 உரிமத்துடன் இருந்தாலும் ஏதோ ஒரு கவனக் குறைவினால், அதனை புதுப்பிக்காமல் தவற விட்டுவிட்டேன்.


பிறகு எனது வன்தட்டில் F ட்ரைவை திறந்து பார்க்கையில், Recycler ஃபோல்டர் உருவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


'ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!' என யோசித்தபடி, அதன் விவரங்களை சேகரித்தபோது, மேலும் அதிர்ச்சிதான். W32.Lecna.H worm வகையை சேர்ந்த இந்த வைரஸ் விண்டோசில் உள்ள Autorun வசதியை பயன்படுத்தி அனைத்து ட்ரைவ்களிலும் Recycler என்ற அழிக்க முடியாத hidden folder ஐயும், AutoRun.inf ஐயும் நிரந்தரமாக உருவாக்கி, தனது தாக்குதல்களை துவங்குகிறது.

மேலும் இது ஒவ்வொருமுறை கணினியை துவக்கும் பொழுதும் Windows Registry ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருப்பதால், பாதிக்கப்பட்ட எந்த ஒரு ட்ரைவையும் Format செய்தாலும் பயனில்லை, இதன் பாதிப்பு தொடரும் என்பது கொடுமையான விஷயம்.

இதன் தாக்குதலுக்கு உள்ளான கணினியின் இயல்பான வேகம் குறைந்திருப்பதை கண்டறிய முடியும். ஒரு சில கணினியில் Folder option வசதியும் முடுக்கப்படுவதால் Hidden Folder களை காணமுடியாத நிலையம் ஏற்படுகிறது.  மிக முக்கியமாக இணையத்தில் உலாவும்போழுது, தானாகவே கெடுதல் விளைவிக்கும் வலைப்பக்கங்களுக்கு சென்று, மால்வேர்களை தரவிறக்கிக் கொள்கிறது. இது மெதுவாக உங்கள் தனிப்பட்ட விவரங்கள் (மின்னஞ்சல்  கணக்கின் கடவு சொல் மற்றும் விவரங்கள், வங்கி தொடர்பான விவரங்கள்)   அனைத்தையும் களவாடிய பிறகு ஒரு நல்ல நாளில் உங்கள் இணைய கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் குறித்து பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

எனக்குத்தான் மோசமான முன் அனுபவம் இருப்பதால், உடனடியாக உஷாராகி, Kaspersky 2011 ஐ நிறுவத் தொடங்கினேன். ஏற்கனவே காலாவதியான Kaspersky 2010 ஐ நீக்கிவிடவா? என்று கேட்ட பொழுது, சரியென்று பொத்தானை சொடுக்கியது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிறகுதான் புரிந்தது. பேசாமல் 2011 இன்   License Key ஐ பயன்படுத்தி Kaspersky 2010 ஐ புதுப்பிக்காமல் போனது என்னுடைய முட்டாள்தனம்.

ரீ ஸ்டார்ட் ஆகி மறுபடி விண்டோஸ் துவங்கிய உடன், டாஸ்க்பாரில் தொடர்ந்து, Regsvr.exe தாக்கப்பட்ட அறிவிப்பு அலாரம் அடித்தது. (அப்ப சைக்கிள்ள வந்தது சைத்தான் தான்) NewFolder.exe என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது, டாஸ்க் மேனேஜர், registry முடக்கப்படும்,    கணினியின் வேகம் முற்றிலுமாக குறைந்து விடும்.

ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து பார்க்க, ஒவ்வொன்றினுள்ளும், அதே பெயரில் மற்றொரு ஃபோல்டர் உருவில் சைத்தான் அமர்ந்திருக்க..  Kaspersky 2011 ஐயும் நிறுவமுடியாமல் போக.. டென்ஷனாகி.. நேரடியாக UPS ஐ அனைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

இந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..

நான் கண்ட தீர்வு அடுத்த இடுகையில்...

. 

Thursday, 16 December 2010

Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி!

Microsoft word தொகுப்பில் "Latha" தமிழ் எழுத்துருவை அனைவரும் முயற்சி செய்து பார்த்திருப்போம்.. பலரும் தோற்றிருப்போம்.. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை  பொருத்தமட்டில், தமிழில் உள்ளீடு செய்வதற்கு  எ-கலப்பை, குறள், அழகி, NHM Writer போன்ற பல கருவிகள் இருந்தாலும், (NHM -இல் வேர்டு தொகுப்பில் முயன்ற பொழுது லதா எழுத்துரு ஒரு சில சமயங்களில் பெட்டி பெட்டியாகத்தான் வந்தது) ஒருங்குறி (யுனிகோட்) முறையில் வேர்டு தொகுப்பில் "லதா" எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச  Microsoft Indic Language Input Tool மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

  
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த தளத்திற்கு சென்று, Install Desktop Version ஐ க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

மேலும் உங்களது இயங்குதளத்திற்கு (விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா / ஏழு) ஏற்ப இந்த வசதியை எப்படி உருவாக்குவது என்பது இந்த தளத்திலேயே விரிவாக, விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளதால் நான் அதை இங்கு விளக்கவில்லை) 

இந்த கருவியை நிறுவி, உங்கள் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்த பிறகு, Language Tool bar இல் தமிழ் வந்திருப்பதை கவனிக்கலாம். இனி வேர்டில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு முன்பாக இதனை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.





இனி தட்டச்சு செய்யும் பொழுது, வார்த்தைகளை முடிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட பிற வார்த்தைகள் Context menu வில் தோன்றுவதை கவனிக்கலாம்.


லதா எழுத்துருவில் எளிதாக தட்டச்சு செய்ய முடிகிறது.




.

Wednesday, 15 December 2010

Gmail Tricks: பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்-(புதியவர்களுக்கு)

ஒரு பதிவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், உங்களது இடுகைக்கு வருகின்ற பின்னூட்டங்கள், மட்டுறுத்தப்பட்டிருந்தாலும் இல்லையெனிலும்,  அதற்கான அறிவிப்பு மின்னஞ்சல் (ஏற்கனவே பிளாக்கர் செட்டிங்க்ஸ் கொடுத்திருப்பதனால்) மூலமாக உங்கள் ஜிமெயிலுக்கு வரும். அதனோடு சேர்த்து உங்களுக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களும் இருக்கும்.      





ஒரு சில சமயங்களில் இந்த பின்னூட்டங்களுக்கான மின்னஞ்சல்கள் நிறைய சேர்ந்து விடும். இவற்றை மட்டும் மொத்தமாக தேர்வு செய்து எப்படி டெலிட் செய்வது என்பதை பார்க்கலாம். உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, Search Mail பட்டனுக்கு முன்பு உள்ள பெட்டியில் new comment on your post என டைப் செய்து Search Mail   பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது, பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்கள் மட்டும் பட்டியலில் கிடைக்கும். இவற்றை மொத்தமாக தேர்வு செய்து டெலிட் செய்து கொள்ளலாம். 


இதே முறையில் தேவைப்படும் மின்ன்னஞ்சல்களை எளிதாக கையாள முடியும். இதென்ன மொக்கையான இடுகை என்று கேட்பவர்கள், தலைப்பில் புதியவர்களுக்கு என்று குறிப்பிட்டிருப்பதை கவனித்து விட்டு, ஓட்டு போட்டு செல்லவும்..
.

Tuesday, 14 December 2010

Gmail Tricks: மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க - GMail Backup

Gmail கணக்கை வைத்திருப்பவர்களில் பலரும் விரும்புவது, தங்களது மின்னஞ்சல்களை வன் தட்டில் ஏதாவது ஒரு ஃபோல்டரில் Backup எடுத்து வைத்து கொள்வது. இப்படி பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வதன் மூலமாக, எப்பொழுதாவது நமது மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்படும் பொழுது, பழைய மின்னஞ்சல்களும், தொடர்புகளையாவது இழக்காமல் இருக்க முடியும.

இந்த பணியை நமக்கு எளிமையாக்குகிறது GMail Backup எனும் இலவச மென்பொருள் கருவி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இதனை திறந்து கொண்டு, உங்கள் ஜிமெயில் பயனர் பெயர், கடவு சொல் மற்றும் உங்கள் வன் தட்டில் பேக்கப் எடுத்து வைக்க வேண்டிய ஃபோல்டர் விவரம், எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை பேக்கப் எடுக்க வேண்டும் என்ற விவரம் ஆகியவற்றை கொடுத்து,


கீழே உள்ள Backup பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது அந்த குறிப்பிட்ட ஜிமெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதை கவனிக்கலாம்.


அனைத்தும் முடிந்த பிறகு, நீங்கள் குறிப்பிட்டிருந்த ஃபோல்டரில் அனைத்து மின்னஞ்சல்களும் பேக்கப் ஆகியிருப்பதை பார்க்கலாம்.


இனி இவற்றை இரட்டை க்ளிக் செய்து திறக்கையில், எம்.எஸ் அவுட்லுக்கில் திறக்கும்.





அட்டாச்மெண்டுகளும் பேக்கப் எடுக்கப்படுகிறது. மேலும், ஒரு வேளை இப்படி பேக்கப் எடுத்த மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில் கணக்கில் டெலிட் செய்திருந்தால், இந்த பேக்கப்பிலிருந்து இதே கருவியைக் கொண்டு ரீஸ்டோர் செய்து கொள்ளமுடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.



.

Monday, 13 December 2010

Windows 1 லிருந்து Windows 7 வரை

துவக்க திரைகளின் தொகுப்பு : - நன்றி - deviantart.com








































.

Saturday, 11 December 2010

Gmail Tricks: காலம் நேரம் பார்ப்பது நன்று

நாம் நமது தனிப்பட்ட மற்றும் அலுவல் சம்பந்தமான தொடர்புகளுக்கு, ஜிமெயில் சேவையினை பயன்படுத்தி வருகிறோம். 


 நமக்கு வருகின்ற மின்னஞ்சல்கள் வெவ்வேறு நாடுகளிலில் உள்ள தொடர்புகளிலிருந்து வருகிறது. வழக்கமாக ஜிமெயில் கணக்கில் வரும் மின்னஞ்சல்களில் நமது இருப்பிடத்தின் நேரம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. 
ஒரு சில சமயங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சலை பார்த்தவுடன் அவரை உடனடியாக தொலைபேசியிலோ அல்லது சாட்டிங்கிலோ தொடர்பு கொள்வதற்கு முன்பாக, அவர் மின்னஞ்சல் அனுப்பிய நாட்டின் நேரத்தை அறிந்து கொண்டால், இந்த சமயத்தில் அவரை தொடர்பு கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவெடுப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த வசதியை ஜிமெயிலில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள், பிறகு திறக்கும் திரையில் Labs என்ற பகுதிக்குச் சென்று, அங்கு உள்ள பட்டியலில், Sender Time Zone பகுதிக்குச் சென்று, Enable செய்து, அந்த பக்கத்தின் இறுதியில் உள்ள Save Changes பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.


இனி உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனுப்பபட்ட பகுதியின் நேரத்தை எளிதாக அறிந்து கொண்டு, தேவையற்ற நேரத்தில் தொல்லை செய்வதை தவிர்க்கலாம்.




.

Google Chrome: பயனுள்ள Hover Zoom நீட்சி!

நாம் வழக்கமாக Google, Yahoo, Facebook, Twitter, Flickr போன்ற தளங்களில் உலாவும் பொழுது, அதில் உள்ள படங்கள் Thumbnail ஆக இருப்பதால், ஒவ்வொரு முறையும் அதை க்ளிக் செய்து, பெரிதாக்கி பார்க்கவேண்டியுள்ளது.


இதற்கு தீர்வாக அமைவது, கூகுள் க்ரோம் உலாவிக்கான Hover Zoom நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

இந்த நீட்சியை தரவிறக்கி க்ரோம் உலாவியில் நிறுவிய பிறகு, இதற்கான ஐகான் அட்ரஸ் பாரின் அருகில் தோன்றியிருப்பதை கவினிக்கலாம்.

இனி நீங்கள் திறக்கும் வலைப்பக்கங்களில் இந்த நீட்சி செயல்பட முடியும் என்றால் இது அட்ரஸ் பாரின் வலது புறத்தில் தோன்றும். வலைப்பக்கங்களை திறக்கும் பொழுது, படங்களின் மீது மவுசின் கர்சரை கொண்டு செல்கையில் படங்கள் தானாகவே அதன் உண்மையான அளவிற்கு zoom செய்யப்படும்.


இந்த நீட்சி Facebook, Google, Twitter போன்ற தளங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.





.

Thursday, 9 December 2010

Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!..

அலுவலகத்தில் உருப்படியாக ஆணி பிடுங்காமல், அலுவல் சம்பந்தப்படாத வலைப்பக்கங்களில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்களா?.. திடிரென உங்கள் மேலதிகாரி வரும் பொழுது என்ன செய்வீர்கள்? உலாவியை முழுமையாக மூடிவிடலாம் என்றால், பல டேப்களில் தேடிப்பிடித்த வலைப்பக்கங்கள் இருக்கும். இவையனைத்தையும் மறுபடியும் பிறிதொரு சமயத்தில் வேண்டும் என வைத்துக் கொண்டால், இந்த சூழ்நிலையில் டக்கென்று எஸ்கேப் ஆவது எப்படி? 


இதோ கூகுள் க்ரோம் உலாவிக்கான PanicButton நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

Install பொத்தானை அழுத்தி இதை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, டூல்பாரில் Panic Button ஐகான் வந்திருப்பதை கவனிக்கலாம்.


இதற்கு மேல், நீங்கள் இணையத்தில் உங்கள் மேலதிகாரி விரும்பாத வலைப்பக்கங்களை பல டேப்களில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென அவர் வரும் பொழுது, இந்த பொத்தானை அழுத்தினால், நீங்கள் திறந்து வைத்துள்ள வலைப்பக்க டேப்களின் விவரங்கள் வெளியில் தெரியாத ஒரு புக் மார்க்காக உருவாக்கப்பட்டு (ஓரிரு வினாடிகளில்) முழுவதுமாக மறைக்கப்படும். 

எத்தனை டேப்கள் இப்படி மறைக்கப்பட்டுள்ளன என்பதை, இந்த PanicButton ஐகானில் தோன்றும் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

மறுபடியும் இவற்றை திறக்க, இதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது. எஸ்கேப்பு..

ஒருவேளை அதேநாளில், மறுபடியும் அந்த வலைப்பக்கங்களை உங்களால் பார்க்க முடியாது எனும் பட்சத்தில் இந்த பக்கங்களை நீக்க, டூல்பாரில் உள்ள டூல்ஸ் பட்டனை அழுத்தி Bookmark Manager க்ளிக் செய்து, 



திறக்கும் திரையில் இடது புற பேனில், Other bookmarks இற்கு அடுத்துள்ள Temporary Panic ஃபோல்டரை வலது க்ளிக் செய்து, Delete செய்தால் போதுமானது.



(இது போன்று, உலாவிகள் மட்டுமின்றி பிற பயன்பாடுகளிலிருந்தும் எஸ்கேப் ஆவது எப்படி என்ற எனது மற்றொரு இடுகையை பாருங்கள்..Don't Panic! : இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா?)



.