Saturday, 11 December 2010

Gmail Tricks: காலம் நேரம் பார்ப்பது நன்று

நாம் நமது தனிப்பட்ட மற்றும் அலுவல் சம்பந்தமான தொடர்புகளுக்கு, ஜிமெயில் சேவையினை பயன்படுத்தி வருகிறோம். 


 நமக்கு வருகின்ற மின்னஞ்சல்கள் வெவ்வேறு நாடுகளிலில் உள்ள தொடர்புகளிலிருந்து வருகிறது. வழக்கமாக ஜிமெயில் கணக்கில் வரும் மின்னஞ்சல்களில் நமது இருப்பிடத்தின் நேரம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. 
ஒரு சில சமயங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சலை பார்த்தவுடன் அவரை உடனடியாக தொலைபேசியிலோ அல்லது சாட்டிங்கிலோ தொடர்பு கொள்வதற்கு முன்பாக, அவர் மின்னஞ்சல் அனுப்பிய நாட்டின் நேரத்தை அறிந்து கொண்டால், இந்த சமயத்தில் அவரை தொடர்பு கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவெடுப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த வசதியை ஜிமெயிலில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள், பிறகு திறக்கும் திரையில் Labs என்ற பகுதிக்குச் சென்று, அங்கு உள்ள பட்டியலில், Sender Time Zone பகுதிக்குச் சென்று, Enable செய்து, அந்த பக்கத்தின் இறுதியில் உள்ள Save Changes பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.


இனி உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனுப்பபட்ட பகுதியின் நேரத்தை எளிதாக அறிந்து கொண்டு, தேவையற்ற நேரத்தில் தொல்லை செய்வதை தவிர்க்கலாம்.




.

3 comments:

  1. தகவல் பகிர்வினிற்கு நன்றி சூர்யா கண்ணன் - உடனே மாற்றி விட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ஆஹா புதுமையான தகவல் தலைவா . இன்றே நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமையான தகவல் ,பகிர்ந்தமைக்கு நன்றி !
    online மூலம் பணம் சம்பாரிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு விவரம் கீழே
    http://www.paisalive.com/register.asp?364177-8300743

    ReplyDelete