எனது கணினியில் வழக்கமாக Kaspersky Internet Security, (அதுவும் முறையாக உரிமம் பெற்ற) நிறுவப்பட்டிருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து தப்ப முடிந்தது. இதன் காரணமாகவே எனது வாடிக்கையாளர்களுக்கும் இந்த Antivirus தொகுப்பையே பயன்படுத்தும்படி சொல்லி வந்தேன்.
சென்ற வாரம் திங்களன்று, எனது கணினியில் Kaspersky 2010 உரிமத்தின் காலம் நிறைவடைந்து விட்டது. 15 நாட்களுக்கு முன்னரே தொடர்ந்து அறிவிப்பு வந்துக் கொண்டிருந்தாலும், கைவசமே புதிய Kaspersky 2011 உரிமத்துடன் இருந்தாலும் ஏதோ ஒரு கவனக் குறைவினால், அதனை புதுப்பிக்காமல் தவற விட்டுவிட்டேன்.
பிறகு எனது வன்தட்டில் F ட்ரைவை திறந்து பார்க்கையில், Recycler ஃபோல்டர் உருவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
'ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!' என யோசித்தபடி, அதன் விவரங்களை சேகரித்தபோது, மேலும் அதிர்ச்சிதான். W32.Lecna.H worm வகையை சேர்ந்த இந்த வைரஸ் விண்டோசில் உள்ள Autorun வசதியை பயன்படுத்தி அனைத்து ட்ரைவ்களிலும் Recycler என்ற அழிக்க முடியாத hidden folder ஐயும், AutoRun.inf ஐயும் நிரந்தரமாக உருவாக்கி, தனது தாக்குதல்களை துவங்குகிறது.
மேலும் இது ஒவ்வொருமுறை கணினியை துவக்கும் பொழுதும் Windows Registry ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருப்பதால், பாதிக்கப்பட்ட எந்த ஒரு ட்ரைவையும் Format செய்தாலும் பயனில்லை, இதன் பாதிப்பு தொடரும் என்பது கொடுமையான விஷயம்.
இதன் தாக்குதலுக்கு உள்ளான கணினியின் இயல்பான வேகம் குறைந்திருப்பதை கண்டறிய முடியும். ஒரு சில கணினியில் Folder option வசதியும் முடுக்கப்படுவதால் Hidden Folder களை காணமுடியாத நிலையம் ஏற்படுகிறது. மிக முக்கியமாக இணையத்தில் உலாவும்போழுது, தானாகவே கெடுதல் விளைவிக்கும் வலைப்பக்கங்களுக்கு சென்று, மால்வேர்களை தரவிறக்கிக் கொள்கிறது. இது மெதுவாக உங்கள் தனிப்பட்ட விவரங்கள் (மின்னஞ்சல் கணக்கின் கடவு சொல் மற்றும் விவரங்கள், வங்கி தொடர்பான விவரங்கள்) அனைத்தையும் களவாடிய பிறகு ஒரு நல்ல நாளில் உங்கள் இணைய கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் குறித்து பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
எனக்குத்தான் மோசமான முன் அனுபவம் இருப்பதால், உடனடியாக உஷாராகி, Kaspersky 2011 ஐ நிறுவத் தொடங்கினேன். ஏற்கனவே காலாவதியான Kaspersky 2010 ஐ நீக்கிவிடவா? என்று கேட்ட பொழுது, சரியென்று பொத்தானை சொடுக்கியது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிறகுதான் புரிந்தது. பேசாமல் 2011 இன் License Key ஐ பயன்படுத்தி Kaspersky 2010 ஐ புதுப்பிக்காமல் போனது என்னுடைய முட்டாள்தனம்.
ரீ ஸ்டார்ட் ஆகி மறுபடி விண்டோஸ் துவங்கிய உடன், டாஸ்க்பாரில் தொடர்ந்து, Regsvr.exe தாக்கப்பட்ட அறிவிப்பு அலாரம் அடித்தது. (அப்ப சைக்கிள்ள வந்தது சைத்தான் தான்) NewFolder.exe என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது, டாஸ்க் மேனேஜர், registry முடக்கப்படும், கணினியின் வேகம் முற்றிலுமாக குறைந்து விடும்.
ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து பார்க்க, ஒவ்வொன்றினுள்ளும், அதே பெயரில் மற்றொரு ஃபோல்டர் உருவில் சைத்தான் அமர்ந்திருக்க.. Kaspersky 2011 ஐயும் நிறுவமுடியாமல் போக.. டென்ஷனாகி.. நேரடியாக UPS ஐ அனைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.
இந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..
நான் கண்ட தீர்வு அடுத்த இடுகையில்...
.

அஹா நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா ??
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இங்க வந்தா இண்டர்வல் கார்டு போடுவீங்க:((
ReplyDeleteAVG and Avira Free Editions are better than paid version of AV's. To remove recycler virus, check Recycle Bin Properties and make the percent of each drive to 0.
ReplyDeleteI believe all the paid Av's are doing such Crappy things when the time of expiry. I use Avira Free edition for the past 2 years with out any major problems.
ReplyDeletehttp://www.safer-networking.org/en/home/index.html
ReplyDeleteஇனிமேலாவது Spybot Use பண்ணுங்க பாஸ்.
அப்புறம் என்னாச்சு...
ReplyDeleteநானும் Kaspersky Internet Security, பயன்படுத்தி கொண்டிருந்தேன் காலாவதி ஆகியது. பேசாமல் Micro soft security essential தான் இப்போது உள்ளது. அவ்வப்போது up date ஆகிக்கொள்கிறது. ஒரு வம்பும் இல்லை. நிபுணர் நீங்கள்தான் சொல்லவேண்டும் அய்யா.
ReplyDelete--
seekarama adutha pathivai podunga sir.:)
ReplyDeletesir enaku oru doubt.
i get a avg anti virus by hacking.In 2days before my system was detected by avg and they send a message i.e u are using duplicate key and buy a original product.so i instal a new version avg 2011.this is also hacked key.Ain't i get any problem future problem from avg?
//இந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..//
ReplyDeleteசபாஷ்!
//நான் கண்ட தீர்வு அடுத்த இடுகையில்...//
சூர்யாண்ணே, இதையெல்லாமா தொடரும் போட்டு விடுவீங்க...?
ஆவலா இருக்கோம்ணே.
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இங்க வந்தா இண்டர்வல் கார்டு போடுவீங்க:((//
ReplyDeleteRepeat... haha..
anne ithukkuma interval card??? :-)
ReplyDeletebut nethula irunthu intha pathivoda part-2 pakkurathukkaka 5 thadavai vanthutten...
sekiram anne..
எதிர்பர்ப்பை உருவாக்கியிருக்கீங்க... 'எப்போ வருமோ..' என்று அடுத்த பதிவுக்கு காத்திட்டிருக்கோம்..! இருந்தாலும்...உங்களுக்கு...நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்..சீக்கிரம் பாஸ்...
ReplyDeleteசெம சுவாரசியம்.
ReplyDeleteஅடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
சீக்கிரம் சொல்லுங்க பாஸ்.
ReplyDeleteஉண்மையிலேயே உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை. நானும் மேற்கண்ட சிக்கலில் மாட்டியுள்ளேன். தீர்வுக்காக காத்திருக்கிறேன். நன்றி...
ReplyDeleteயானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ?.எப்படியோ புதிதாய் ஒரு நுட்பத்தை கண்டுபிடிக்க காரணம் அது என்றால் சறுக்குவதும் நல்லது தான்.நானும் Kaspersky தான் பயன்படுத்துகிறேன்.தேதி முடியும் முன் வரும் எச்சரிக்கை செய்தியை அடிக்கடி பார்த்து கடுப்பாகி காலாவதி தேதிக்கு மூன்று நாட்க்களுக்கு முன்பே Kaspersky 2011ஐ இன்சால் பன்னிவிட்டேன்.
ReplyDeleteஅண்ணா அதிக எதிர்பார்புடன் நல்ல பதிவு!!!
ReplyDeleteலினக்ஸ் (உபுண்டு) live cd use பண்ணி
Recycler, NewFolder.exe போன்ற பல வைரஸ்களை எளிதில் நீக்கிவிடலாமே!!!
என்னை பொறுத்தவரை லினக்ஸ் தான் விண்டோஸ்-க்கு சிறந்த ஆண்ட்டி வைரஸ்.ஏனெனில் நான் ஒருமுறை லினக்ஸ் live cd பயன்படுத்தி தான் autorun.inf போன்ற வைரஸ் களை நீக்கியுள்ளேன்.
நன்றி!!!
http://gnometamil.blogspot.com/
waiting..for the remedy..!
ReplyDeleteஎல்லோருக்கும் தேவையான அனுபவப்பதிவு
ReplyDeletehttp://thagavalthulikal.blogspot.com/
நானும் Original Kaspersky உபயோகிறேன் ஆனால், வாரம் ஒரு தடவை புதுப்பிக்க வேண்டி message வருகிறது ஏன் இப்படி? அப்போது Activation Key யை திரும்பவும் enter செய்யவேண்டியிருக்கிறது. என்ன செய்யவேண்டும்?????
ReplyDeleteஅஹமது கபீர்
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
ReplyDeletehttp://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
SK
ReplyDeleteI have installed 2010 Kaspersky in my personal Laptop and already purchased 2011 version. Please let me know if I need to do anything other than installing the new version before the expiry of 2010 version.
would really appreciate if you can email me at nsriram73@gmail.com
regards
Boston Sriram
நான் e-scan போட்டிருக்கேன், உங்கள் பிரச்னை எப்படித் தீர்ந்தது என அறிய ஆவலாய் இருக்கிறேன். எனக்கும் இதேபோல் அநுபவம் ஏற்பட்டது, தொழில்நுட்பம் நன்கறிந்த நண்பர் ஒருவரால் தீர்க்கப்பட்டது.
ReplyDeleteto follow
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரு கதையை போல் எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்.
i have the same problem please give the solution thank you
ReplyDelete//AVG and Avira Free Editions are better than paid version of AV's.// Very True. Also add Nod32 Antivirus in that List.
ReplyDelete//நான் e-scan போட்டிருக்கேன், உங்கள் பிரச்னை எப்படித் தீர்ந்தது என அறிய ஆவலாய் இருக்கிறேன். எனக்கும் இதேபோல் அநுபவம் ஏற்பட்டது// Escan is a Third Class Antivirus. We are Distributed escan all over Africa on 2009. I used to get 10 Complaint Calls per Day. the only good thing in escan is we can install it in all Highly Affected Computers.
ஒரு வைரஸை கண்டவுடன் குவாரன்டைன் பன்னாமல் ஏன் இன்னும் 'முடக்கப்பட்டே' இருக்கு? இதுவும் ஒரு யாவார உத்தியோ, கண்டிப்பா வாங்கியாகனும்னு?
ReplyDeleteஇன்றுதான் முதல் முறையாக வருகிறேன். அருமையான வலைப்பூ.
ReplyDeleteஎன்னுடைய கம்ப்யூட்டர் இல் "$RECYCLE.BIN","System Volume Information","ZZZZZZZ.ZZZ" ஆகியவை நீங்கள் கூறியது போல உள்ளன. என்ன செய்வது??
அப்படியே நம்ம பக்கமும் வரவும்.
ReplyDeletehttp://balepandiya.blogspot.com/
இதைப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது, இதில் சிக்காதவர்கள் யாரும் இல்லை என்று, அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
ReplyDelete