Wednesday, 30 September 2009

விண்டோஸ் ஏழில் பலூன் அறிவிப்புகளை நீக்க..,

விண்டோஸ் ஏழில் டாஸ்க் பாரில் உள்ள நோட்டிபிகேஷன் பகுதியில், அடிக்கடி வருகின்ற நமக்கு தேவையற்ற பலூன் அறிவிப்புகளை நீக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.



 இதற்கு நாம் Local Group Policy Editor க்கு செல்ல வேண்டும்.   Search Box -ல் gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.



இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில், இடது புற பேனில்,
User Configuration -> Administrative Templates -> Start Menu and Taskbar ஐ கிளிக் செய்யவும்.



இனி இடதுபுறமுள்ள Settings ஐ கிளிக் செய்து, ஸ்க்ரோல் செய்து "Turn off all balloon notifications" என்பதை இரட்டை கிளிக் செய்யவும். இனி வரும் திரையில் Enabled என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கிளிக் செய்யவும். 


அவ்வளவுதான்.

ஒருவேளை டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பு பகுதியில் எதுவுமே வேண்டாம் என நீங்கள் முடிவு செய்தால், இதில் உள்ள "Hide the notification area" என்பதை இரட்டை கிளிக் செய்து, அடுத்து வரும் திரையில் Enabled என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கிளிக் செய்யவும். 






.

Tuesday, 29 September 2009

யாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி?

நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது?

உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.



Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.



தொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள். 



அடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.



 அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.




அவ்வளவுதான்! நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.

யாஹூ மின்னஞ்சல் கணக்கை முழுவதுமாக அழிப்பது எப்படி என்பதைப்பற்றி கீழே தரப்பட்டுள்ள நண்பரின் வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.

Yahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது?


.

    Monday, 28 September 2009

    வேர்டு டாக்குமெண்ட் ரெகவெரி

    நாம் மைக்ரோசாப்ட் வேர்டில் ஏதாவது டாக்குமெண்டை பல பக்கங்கள் டைப் செய்து விட்டு சில சமயங்களில் சேமிக்காமலேயே வேர்டு-ஐ மூடி விடுவோம். பிறகு அந்த டாக்குமெண்ட் மறுபடி வேண்டுமே என்ன செய்வது என திண்டாடி, வேறு வழியில்லாமல், மறுபடி உக்கார்ந்து டைப் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

    இப்படி சேமிக்காமல் விட்ட கோப்புகளை மறுபடி பெறுவது எப்படி?

    வேர்டை திறந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று, Options ஐ கிளிக் செய்யுங்கள். இதில் File Locations என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இங்கு AutoRecover files என்பதற்கு நேராக blank ஆக இருந்தால், உங்கள் டாக்குமெண்டை ரெகவர் செய்ய இயலாது. அல்லாமல், Location தரப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட லோகேஷனுக்குச் (விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில்)  சென்று, டாகுமெண்டை திறந்துவிடலாம்.  



     



     AutoRecovery ஐ enable செய்து வைப்பது எப்பொழுதுமே பாதுகாப்பானதாகும். இதை எப்படி செய்வது.

    Tools மெனுவிற்குச் சென்று Options சென்று Save என்ற டேபில் உள்ள  'Save AutoRecover info every:' என்பதை தேவு செய்து, பின் அதற்கான நேரத்தையும் (உதாரணமாக 5 நிமிடங்கள்) கொடுத்து, File Locations டேபிற்குச் சென்று AutoRecover Files ஐ கிளிக் செய்து, "Modify..."  -ல் அதற்கான லோகேஷனையும் கொடுத்துவிட்டால் போதும்.







    .

    Saturday, 26 September 2009

    விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டாவில் ரிப்பேர் டிஸ்க் உருவாக்குவது..,

    நமது கணினியின் வன் தட்டில் இயங்குதளம் உள்ள பார்டிஷனை ஒரு இமேஜாக சிடி அல்லது டிவிடிகளில்  எடுத்து வைத்துக் கொண்டால், எப்பொழுதாவது உங்கள் கணினி திடிரென கிராஷ் ஆகும்பொழுது, அந்த இமேஜை ரீஸ்டோர் செய்வதன் மூலமாக நமது கணினியை இயங்குதளம் மற்றும் உங்கள் கோப்புகள், ட்ரைவர்கள் ஆகிய அனைத்தையும்,  பழைய இயங்கும் நிலைக்கே கொண்டு வர இயலும். இதற்கு Ghost, True image போன்ற மேன்ப்ருட்கள் இருந்தாலும், விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டாவில் அதனுள் இணைந்த பேக்கப் கருவிகள்  மூலமாக எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய இயலும். 

    உங்கள் கணினி நல்ல முறையில் இயங்கும் நிலையில் உள்ள பொழுது பேக்கப் எடுப்பது நல்லது.

    விண்டோஸ் ஏழில் இமேஜ் உருவாக்குவது எப்படி?
    Start இற்கு சென்று Getting Started -> Back up your files க்ளிக் செய்யவும்.



    அடுத்து  இடதுபுறமுள்ள Create a system image  என்ற  hyperlink ஐ கிளிக் செய்யவும். 



    இமேஜை எங்கு சேமிக்க  வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும், இதை நீங்கள் ஒரு  external drive அல்லது DVD அல்லது ஏதாவது நெட்வொர்க் பகுதியில் சேமித்துக் கொள்ளலாம்.


    அடுத்து வரும் Confirmation திரையில் இமேஜ் கோப்பின் அளவை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல Back சென்று வேறு ட்ரைவை தேர்வு செய்யலாம்.

     இப்பொழுது வரும் ப்ராக்ரஸ் மீட்டரில், எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை பார்க்கலாம். (external ட்ரைவில் 15GB அளவுள்ள கோப்பு 20 நிமிடங்கள் வரை எடுக்கலாம்)


    இந்த பணி முடிந்தவுடன் create a system repair disc என்ற டயலாக் பாக்ஸில் 'Yes' கிளிக் செய்து, அடுத்த திரையில் சரியான பாதுகாப்பான லொகேஷனை கொடுக்கவும்.



    இப்படி உருவாக்கப்படும் Recovery disc ஐ உபயோகித்து, (எப்பொழுதாவது கணினி கிராஷ் ஆகும் பொழுது,)  பூட் செய்து System Recovery Options வசதியின் மூலமாக கணினியை எளிதாக, பழைய இயங்கும் நிலைக்கு கொண்டுவர இயலும்.


     விஸ்டா உபயோகிப்பவர்களுக்கு:-


    விஸ்டா Ultimate, Business, மற்றும் Enterprise  பதிப்புகளில் இமேஜை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் Vista Home மற்றும் Home Premium  பதிப்புகளில் இந்த வசதி தரப்படவில்லை.

    விஸ்டாவிலும் இதே மேலே சொன்ன முறையை பின்பற்றலாம். Backup and Restore Center க்கு செல்ல Search Bar ல் backup என டைப் செய்து  பின்னர் Backup and Restore Center என்பதை கிளிக் செய்யவும்.


    பிறகு வரும் திரையில் Back up computer என்ற பொத்தானை கிளிக் செய்து Wizard ஐ தொடரவும்.





    .


    Wednesday, 23 September 2009

    தமிழில் ஜிமெயில்

    Gmail திரையில் அனைத்து வசதிகளையும் தமிழில் மாற்றுவதற்கு,



    ஜிமெயில் லாகின் திரையில் உங்கள் பயனர் பெயரையும், கடவு சொல்லையும் கொடுத்து  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

    இப்பொழுது ஜிமெயில் திரையின் வலது புறம் மேல் மூலையிலுள்ள Settings என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது கீழே வரும் Settings திரையில் General டேப் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் 'General' டேபை கிளிக் செய்து கொள்ளுங்கள்.



    இதில் Language என்பதற்கு நேராக உள்ள Gmail Display Language -ல் தமிழ் ஐ தேர்வு செய்யுங்கள்.

    மின்மடலை தமிழில் உருவாக்க, Enable Transliteration என்பதை கிளிக் செய்து, பிறகு தமிழை தேர்ந்தெடுங்கள். (இனி Compose mail சென்றால் 'அ' என்ற பொத்தானை கிளிக் செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம்). 

    பிறகு, கீழே உள்ள Save Changes என்ற பொத்தானை சொடுக்குங்கள்.








    அவ்வளவுதான்!. இனி உங்கள் ஜிமெயில் திரை தமிழில் மிளிரும்..,


    .

    Monday, 21 September 2009

    உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவது எப்படி? படிப்படியான எளிதான விளக்கம்.




    உபுண்டு இயங்குதளத்தினை நிறுவிட வன்தட்டின்  பார்ட்டிஷன்கள் பற்றிய தெளிவு இருத்தல் உங்களுக்கு ௯டுதல் பயனைத்தரும். நீங்கள் உபுண்டுவை நிறுவுவதால் ஒரு  சராசரி பயனருக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் தோராயமாக 30 நிமிடங்களில் நிறுவப்பட்டுவிடும். இதுவே வின்டோஸாக இருப்பின் இயங்கு தளத்தினை நிறுவ 45 நிமிடங்கள், டிவைஸ் டிரைவர்கள் நிறுவ 20 நிமிடங்கள், இதற்கும் மேல் பயனருக்குத் தேவையான மென்பொருட்கள் நிறுவ 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். வின்டோஸ் இயங்குதளம் நிறுவிய அனுபவம் இல்லாதவர்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் இப்பகுதி அமையும்.

    உங்கள் கணினியை உபுண்டு இன்ஸ்டால் சிடியின் துணையுடன் பூட் செய்தவுடன் கீழ்கண்ட படத்தில் காட்டியிருப்பது போன்று திரை தோன்றும். இதில் F2 பட்டன் மூலம் ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஒன்றை இயக்க மொழியாகத் தேர்வு செய்து கொன்டு ENTER பட்டனை அழுத்தவும். தங்கள் முன் தோன்றும் அடுத்த திரையில்  INSTALL UBUNTU என்பதைத் தேர்வு செய்துகொள்ளவும்." இப்பொழுது INSTALL UBUNTU என்பதைத் தேர்வு செய்துவிட்டு ஒரு சில நிமிடங்கள் ஹாயாக உங்கள் நாற்காலியில்  அமரவும்.



    அதற்குள் உபுண்டு நிறுவுவதற்க்குத் தயாராகிவிடும். அடுத்த திரையில் நீங்கள் மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். பார்வர்டு பட்டனை க்ளிக் செய்யவும்.

    அடுத்த பகுதியில் தங்கள் இடத்திற்க்கான நேரப்பகுதியைத் தேர்வு செய்வும் இதில் REGION என்பதில் ASIA எனவும் CITY என்பதில் KOLKATA எனவும் தேர்வு செய்து பார்வர்டு பட்டனை க்ளிக் செய்யவும்.





    அடுத்த பகுதியில் தங்கள் கணினிக்கான தட்டச்சு முறையைத் தேர்வு செய்யவும் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தக்கூடியது USA தட்டச்சு முறையைத் தேர்வு செய்து பார்வர்டு பட்டனை க்ளிக் செய்யவும்.

       நீங்கள்  பார்வர்டு  செய்தவுடன் Starting up the Partitioner எனும் குறுந்திரை தோன்றும்.



    வன்தட்டு பிரித்தல்:

    இப்பொழுது நாம் உபுண்டு நிறுவலில் மிகமுக்கியமானதும் கவனமாகவும் செயல்படக்கூடிய பகுதிக்குள் நுழைந்துள்ளோம். இதுவே தங்களது வன்தட்டில் மாற்றங்களை ஏற்படுத்துபவை. தாங்கள் கணினியைப் பற்றியும் இயங்குதள நிறுவலைப் பற்றியும் போதுமான தெளிவு இல்லாதவராக இருப்பின் படம் காட்டியுள்ளது போன்று   Install them side by side,choosing between them each startup எனும் முதல் ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.



     உங்கள் வன்தட்டில் அதிகம் காலியாக உள்ள இடத்தில் உபுண்டு   தனக்குத் தேவையான இடத்தைத் தானே தேர்வு செய்துவிடும் இவ்வாறு  செய்வதால் தங்கள் தவல்கள் ஏதும் பாதிப்படையாது. எனினும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

    தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருந்த இயங்குதளத்தினை அகற்றிவிட்டு உபுண்டுவை  மட்டும் பயன்படுத்த முடிவு செய்தால் Use Entire Disk எனும் ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது  யாதெனில் இவ்வாறு செய்த பிறகு தங்கள் வன்தட்டிலிருந்து எந்தவொரு தகவலும் திரும்பப் பெற இயலாது  என்பது ஞாபகம் இருக்கட்டும்..



     மூன்றாவது  தங்கள் வசதிக்கேற்ப வன்தட்டினைப் பிரித்துக்கொன்டு  வின்டோசும் லினக்சும் ஒருசேரப் பயன்படுத்துபவராக இருப்பின் Specify Partitions Manually(ADVANCED) எனும் மூன்றாவது முறையைத் தேர்வு செய்துகொள்ளவும். இம்முறையானது  மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே அறிவுருத்தப்படுகிறது.




    உங்கள் வன்தட்டு IDE எனும் வகையைச் சேர்ந்ததாக இருப்பின் உபுண்டு  அதனை hda என்றும் SATA வகையைச் சேர்ந்ததாக இருப்பின் sda என்றும் குறிப்பிடும்.அதில் உள்ள பார்ட்டிஷன்களானது hda1,hda2,hda3 அல்லது sda1,sda2,sda3 என்று குறிப்பிடப் பட்டிருக்கும்.

    ஒரு வன்தட்டில் அதிகபட்சமாக நான்கு PRIMARY பார்ட்டிஷன்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்  மற்றவை அனைத்தும் EXTENDED பார்ட்டிஷன்களாக இருத்தல் வேண்டும்.

    ஒரு வன்தட்டில் உள்ள பார்ட்டிஷன்களில் தகவல்கள் சேமிக்கப்படும் முறையே FILESYSTEM என்று அழைக்கப்படுகிறது. அவ்வகையில் வின்டோஸ் இயங்குதளமானது FAT,FAT32,NTFS என்பனவற்றையும் லினக்ஸானது EXT2,EXT3,EXT4 என்பனவற்றையும்          ஆதரிக்கின்றன. இதில் கவனிக்கவேன்டியது யாதெனில் நீங்கள் வின்டோஸ் மற்றும் லினக்ஸை ஒரே கணினியில்  பயன்படுத்துபவராக இருப்பின் வின்டோஸில் இருந்து லினக்ஸில் உள்ள தகவல்களை அணுக  இயலாது மாறாக லினக்ஸில் இருந்து வின்டோஸில் உள்ள தகவல்களை அணுக  இயலும்.

    லினக்ஸ் இயங்குதளமானது பொதுவாக மூன்று பார்ட்டிஷன்களைக் கொன்டிருக்கும்.

    SWAP PARTITION:
    ஸ்வாப் ஏரியாவானது  உங்கள் வன்தட்டில் உள்ள மிகக்குறுகிய அளவு இடத்தை RAM போன்று பயன்படுத்திக் கொள்ள உதவும். இந்த SWAP AREAவானது 1GB அளவிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

    SLASH (or) ROOT /: ரூட் பார்ட்டிஷன் என்று குறிப்பிடப்படும் இவ்விடத்தில்தான் இயங்குதளம் நிறுவப்படும்.வின்டோஸில் உள்ள C Drive போன்றது. இது 6GBக்கும் குறையாமல் இருத்தல்வேண்டும்.

    /HOME: ஹோம் பார்ட்டிஷனானது பயனாளரின் தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் உங்கள் வன்தட்டில் மீதமுள்ள இடத்தை ஹோம் பார்ட்டிஷனாக வைத்துக் கொள்ளலாம் இதில் தங்களது இயங்குதளத்தினை RE-INSTALL செய்யாத வரையிலும் தங்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். ஆச்சரியம் என்னவெனில் இயங்குதளத்தை UPGRADE செய்யப்பட்ட பிறகும் உங்கள் FireFoxல் உள்ள Bookmarks, Evolution Mail, Wallpaper போன்றஅனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.எனினும் தற்ச்செயலாக நடைபெறும் சில விளைவுகளைக் கருத்தில் கொன்டு இயங்குதளத்தினை UPGRADE செய்வதற்கு முன் தங்களது தகவல்களை பேக்கப் செய்துகொள்வது சாலச்சிறந்தது.

     நீங்கள் Specify the Partitons Manually எனும் மூன்றாவது  ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால்.அடுத்து தோன்றும் திரையில் உங்களது வன்தட்டில் உள்ள பார்டீசியன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் உங்கள்  வன்தட்டில் உள்ள பார்டீசியன்களையும் அளவுகளையும் பொறுத்து அவை வரிசைப் படுத்தப்பட்டிருக்கும்.




    உதாரணமாக மூன்று பார்டீசியன்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் இதில் தாங்கள் உபுண்டுவை நிறுவ இருக்கும் பார்ட்டீசியனில் mousepointer யை வலது கிளிக் செய்து தேர்ந்தெடுத்த பார்ட்டீசியனை delete செய்துவிடவும் நீங்கள் delete செய்த பார்ட்டீசியனானது  free space என காண்பிக்கப்படும். free space என்பதை வலது கிளிக் செய்து new partition என்பதை கிளிக் செய்யவும். create a new partition என்ற குறுந்திரை தோன்றும்.



    அதில் type for the new partition என்பதில் primary-யை தேர்வுசெய்து கொள்ளவும்.  உதாரணமாக உங்கள் வன்தட்டு 10GB அளவும் RAM 512MB என்று வைத்துக்கொள்வோம் இதில் new partition size என்பதில் 256 MB அளவை தேர்ந்தெடுத்து use as எனும் பகுதியில் swap area என்பதை தேர்வுசெய்து OK செய்யவும்.

    இப்பொழுது உங்கள் வன்தட்டில் swap area-வானது பிரித்தாகிவிட்டது. இப்பொழுது  உங்கள் திரையில் காட்டப்பட்டிருக்கும் freee space-ல் new partition தேர்வுசெய்து type for the new partition என்பதில் primary-யை தேர்வுசெய்து use as என்பதில் Ext3 journaling file system என்பதை தேர்வுசெய்து mount point என்பதில் /(slash)-ஐ தேர்வுசெய்து OK செய்யவும்.

    இவ்வாறு செய்வதால்  நீங்கள் தேர்வுசெய்த பார்ட்டிஷனில் உபுண்டுவானது தான் நிறுவ தேவையான இடத்தை Root(/)partition ஆக எடுத்துக் கொண்டு உங்கள் வன்தட்டில் மீதமுள்ள காலியிடத்தை பயனரது பயன்பாட்டிற்கான HOME partition ஆக பிரித்துக்கொண்டுவிடும். இப்பொழுது Forward பட்டனை சொடுக்கியதன் மூலம் உபுண்டு நிறுவலில்  நீங்கள்  ஐந்தாம் கட்டத்தை அடைந்துள்ளீர்கள்.

    அடுத்து தோன்றும் திரையில் உங்கள் கணினிக்கான பயனர் பெயர் மற்றும் பயனருக்கான கடவுச்சொல்லை நீங்கள் உள்ளீடு செய்து Forward செய்யவும்

    இப்பொழுது நீங்கள் விண்டோஸுடன் உபுண்டுவை Dual Boot முறையில் நிறுவினால் கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் திரை தோன்றும். அதில்  தாங்கள் Windows-ல் வைத்திருந்த Settings-களான Wallpapers,Bookmarks போண்றவற்றை நீங்கள் உபுண்டுவுக்குள் கொண்டுவர முடியும். உபுண்டுவை தனித்து நிறுவும்போது இத்திரை தோன்றாது.





    இப்பொழுது உபுண்டுவை நிறுவுவதற்கான ஒப்புதலை  நீங்கள் கொடுக்கவேண்டும். Install பட்டனை கிளிக் செய்யவும்.

    அவ்வளவுதான்..,

    உபுன்டு நிறுவ உங்கள் கணினியில் இருக்க வேண்டியவை:

    512MB அல்லது அதற்கும் மேல் RAM நினைவகம்.
    INTEL அல்லது AMD காம்பட்டிபில் ப்ராசசர்.
    6GB அல்லது அதற்கும் மேல் வன்தட்டு  நினைவகம்.
    16X DVD ROM.



    இந்த கட்டுரை குறித்தான தகவல்களை தந்து உதவிய NRCFOSS (National Research Centre For Open Source Softwares) நண்பர்களுக்கு நன்றி!

    இங்கே கிளிக் செய்து உங்கள் சுய விவரங்களை பதிவு செய்தால் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்குள் உபுண்டு சிடி இலவச தபால் செலவுடன் உங்களை வந்தடையும்.




    .

    Saturday, 19 September 2009

    நெருப்பு நரி உலவியில் Multiple Rows of Tabs நீட்சி

    நெருப்பு நரி உலவியில் நிறைய டேப்களை உபயோகித்து உலவும் பொழுது, டேப்கள் ஒரே வரிசையில் இருப்பதால், திரையில் கொள்ளாத டேப்களை கையாளுவது சிறிது சிரமமாக இருக்கும்.


    இதற்கு ஒரு சிறந்த வழி, ஒரே வரிசையில் அல்லாது பல வரிசைகளில் டேப்களை அமைப்பதாகும்.

    இதற்கு,  Tab Mix Plus 0.3.8.1 என்ற நீட்சியை பதிந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று Tab Mix Plus extension இன் Properties -ல் Display tab/icon ஐ கிளிக் செய்து Tab Bar tab  தேர்வு  செய்யப்பட்டிருப்பதை  உறுதி  செய்து  கொள்ளுங்கள்.



    மேலும் இந்த நீட்சியில் டேப்களை டுப்ளிகேட் செய்வது, மற்றும் டேபின் பெயரை மாற்றுவது என பல வசதிகள் உள்ளன.








    .

    Friday, 18 September 2009

    விண்டோஸ் விஸ்டாவில் Task Manager

    விஸ்டாவில் disable ஆன Task Manager ஐ எப்படி enable செய்வது என்பதைப் பற்றி பார்ப்போம். முதலில் இதை enable செய்வதற்கு உங்கள் கணினியில் Administrator ஆக உள் நுழைய வேண்டும்.



    விஸ்டா ஹோம் பேஸிக் மற்றும் ஹோம் பிரிமியம் இயங்கு தளங்களில்,

    நாம் விண்டோஸ் ரிஜிஸ்டரியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. எப்பொழுதுமே ரிஜிஸ்டரியில் ஏதாவது மாற்றங்கள் செய்வதற்கு முன்பாக அந்த குறிப்பிட்ட கீயை அல்லது சப் கீயை பேக்கப் எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. பேக்கப்பை ஏதாவது ஒரு ஃபோல்டரிலோ அல்லது பென் ட்ரைவிலோ எடுத்து வைத்துக் கொண்டு, தவறுதலாக ஏதாவது மாற்றங்களை செய்து விட்டால் அந்த சமயத்தில் பேக்கப் காப்பியை இம்போர்ட் செய்து கொள்ளலாம். (எப்படி பேக்கப் எடுப்பது என்பதை கீழே விளக்கியிருக்கிறேன்)

    ஸ்டார்ட் பட்டன் படத்தில் கிளிக் செய்து, Search Box -ல் regedit என டைப் செய்து என்டர் கொடுத்தால் ரெஜிஸ்டரி எடிட்டர் திறக்கும்.
    (Administration Permission அல்லது கடவு சொல்லை கேட்டால் கொடுக்கவும்)

    ரெஜிஸ்டரி எடிட்டரில்,
    HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies என்ற பகுதிக்குச் சென்று System ஐ இரட்டை கிளிக் செய்து, TaskMgr என்பதை இரட்டை கிளிக் செய்து, அதனுடைய Value data வை 0 என மாற்றி OK கொடுக்கவும். பிறகு கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விடவும்.

    விஸ்டாவின் பிற பதிப்புகளில்,
    Search Box -ல் gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுத்து, இதில் User Configuration என்பதற்கு கீழாக உள்ள Administrative Templates ஐ இரட்டை கிளிக் செய்து, System இரட்டை கிளிக் செய்து, Ctrl+Alt+Del Options ஐ கிளிக் செய்து, இதில் Remove Task Manager ஐ இரட்டை கிளிக் செய்து, Disabled என்பதை கிளிக் செய்து OK கொடுக்கவும்.


    ரெஜிஸ்டரியில் குறிப்பிட்ட கீயை அல்லது சப் கீயை பேக்கப் எடுப்பது எப்படி?

    ரெஜிஸ்டரி எடிட்டரை திறந்து கொண்டு, எந்த கீயை அல்லது சப் கீயை பேக்கப் எடுக்க வேண்டுமோ அந்த கீயை கிளிக் செய்து File menu விற்கு சென்று Export வசதியை உபயோகித்து தேவையான இடத்தில், தேவையான பெயரில் சேமித்துக் கொள்ளலாம்.

    குறிப்பு: எப்பொழுதுமே Administrator ஆக நீங்கள் கணினியில் புதிதாக எந்த மாறுதலும் செய்வதற்கு முன்பாக System Restore ஐ உபயோகித்து ஒரு Restore Point உருவாக்கிக் கொள்வது நல்லது.




    .

    Wednesday, 16 September 2009

    இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர் சில உதவிகள்..,

    1. SendTo

    Context மெனுவில் SendTo ல் Internet Explorer சேர்த்து விட்டால், .gif, jpg, htm, html, .txt, ico போன்ற கோப்புகளை வலது கிளிக் செய்து SendTo வில் உள்ள Internet Explorer ஐ கிளிக் செய்வதன் மூலமாக, எளிதாக IE - ல் திறந்து விடலாம்.

    இதற்கு,

    Start -> Run இற்கு சென்று sendto என டைப் செய்து, இனி திறக்கும் விண்டோ வில் File - New - Shortcut (XP only) command line ல் "C:\Program Files\Internet Explorer\IEXPLORE.EXE" என டைப் செய்து 'Next' கிளிக் செய்து உருவாக்கிக் கொள்ளலாம்.

    விஸ்டா உபயோகிப்பவர்கள் Start -> Run சென்று shell:sendto என டைப் செய்து OK கொடுக்கலாம்.

    2. உலவு திரையை பெரிதாக்க..,

    ஏதாவது ஒரு Toolbar வலது கிளிக் செய்து "Unlock the Toolbars" தேர்வு செய்யவும்.

    Address Bar இடது கிளிக் செய்து, மேலே Help மெனுவிற்கு அருகில் உள்ள வெற்றிடத்தில் Drag & Drop செய்யவும்.

    ஏதாவது ஒரு Toolbar வலது கிளிக் செய்து Small Icons என்பதை Customize menu. வில் தேர்வு செய்யவும்.

    பிறகு வலது கிளிக் செய்து "Lock the Toolbars" மீண்டும் தேர்வு செய்யவும்.

    3. IE விண்டோவை முழு திரையில் திறக்க..,

    சில சமயங்களில் IE யில் உலவிக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது ஒரு Link வலது கிளிக் செய்து 'Open in New Window' என்பதை தேர்வு செய்தால், முழு திரையில் திறக்காமல் இருக்கும். இதனால் ஒவ்வொரு முறையும் நாம் அந்த விண்டோவை Maximize செய்ய வேண்டி இருக்கும்.

    இதற்கு,

    ஒரே ஒரு IE Window வைத் தவிர மற்ற அனைத்து விண்டோக்களையும் மூடி விட்டு, வலைப் பக்கத்தில் ஏதாவது ஒரு Link வலது கிளிக் செய்து 'Open in New Window' என்பதை தேர்வு செய்யவும்.

    இப்பொழுது முதல் மூல விண்டோவை, வலது மேல் மூலையிலுள்ள X குறியை கிளிக் செய்து மூடிவிடவும்.

    இனி இருக்கும் முழு திரையில் இல்லாத (Maximize ஆகாத) விண்டோவை ஓரங்களில் கிளிக் செய்து இழுத்து தேவையான அளவு முழு திரைக்கு கொண்டுவரவும். (குறிப்பு: Maximize பட்டனை கிளிக் செய்து Maximize செய்ய கூடாது.)

    கண்ட்ரோல் கீயை அழுத்தியபடி வலது மேல் மூலையிலுள்ள Close Button (X) கிளிக் செய்து மூடிவிடவும்.

    இனி மறுமுறை திறக்கும் பொழுது சரியாகிவிடும்.

    சில சமயங்களில் "Remember last window size" என்ற தகவல் Registry யில் கரப்ட் ஆகியிருந்தாலும் இது போல நிகழும்.

    இதற்கு,


    ResetWindowPlacement.reg இந்த ரிஜிஸ்டரி பைலை வலது கிளிக் செய்து "Save Target As" கொடுத்து சேமித்துக் கொண்டு, அந்த கோப்பை வலது கிளிக் செய்து Merge கிளிக் செய்து ரிஜிஸ்டரி இல் சேமித்து, கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யவும்.




    .

    Tuesday, 15 September 2009

    விஸ்டா விண்டோஸ் மெயிலில் - ஜிமெயில் அக்கௌன்ட் ஐ உபயோகிப்பது எப்படி?

    முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் POP/IMAP வசதிகளை துவக்க வேண்டும். உங்கள் ஜிமெயில் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். வலது புறம் மேலே உள்ள Settings என்ற தொடர்பை கிளிக் செய்யுங்கள்.



    Settings திரையில் Forwarding and POP/IMAP என்பதை கிளிக் செய்யுங்கள்.



    POP Download என்பதற்கு நேராக உள்ள Enable POP என்பதையும் IMAP Access என்பதற்கு நேராக உள்ள Enable IMAP என்பதையும் கிளிக் செய்து பிறகு Save Changes பட்டனை கிளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.


    இதோடு ஜிமெயிலில் நம்முடைய வேலை முடிந்தது, இனி விஸ்டாவில் விண்டோஸ் மெயிலை திறந்து கொள்ளுங்கள்.
    (Start -> All Programs -> Windows Mail)

    விண்டோஸ் மெயிலில் Tools -> Accounts சென்று Internet Accounts விண்டோவை திறந்து கொண்டு இதில் Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.


    Select Account Type என்பதில் Email Account ஐ தேர்வு செய்து Next கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் திரையில் Display Name ஐ கொடுங்கள்.


    அடுத்து உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை இட்டு Next பட்டனை கிளிக் செய்யுங்கள். இந்த திரையில் Incoming e-mail server type -ல் IMAP ஐ தேர்வு செய்து, அதன் கீழ் imap.gmail.com எனவும், Outgoing e-mail server (SMTP) Name: -ல் smtp.gmail.com எனவும் டைப் செய்து, Outgoing server requires authentication என்பது தேர்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னர் Next கொடுக்கவும்.



    அடுத்த திரையில் உங்கள் ஜிமெயில் பயனர் பெயரும், கடவு சொல்லும் கொடுத்து Next கொடுக்கவும். அடுத்து Do not download my e-mail and folders at this time என்பதை தேர்வு செய்யாமல் Finish கிளிக் செய்யவும்.

    மறுபடியும் வரும் Internet Accounts திரையில் imap.gmail.com என்ற கணக்கை தேர்வு செய்து Properties செல்லவும். Advanced Tab -ல் கிளிக் செய்து,
    Outgoing mail (SMTP): மற்றும் Incoming mail (IMAP) ஆகியவற்றில் This server requires a secure connection (SSL) தேர்வு செய்து, Outgoing Server (SMTP) -ல் 465 மற்றும் Incoming Server (IMAP) 993 என கொடுத்து, This servers requires a secure connection (SSL) என்பதை தேர்வு செய்து OK கொடுக்கவும்.



    .



    Friday, 11 September 2009

    கோப்புகளின் லிஸ்டை பிரிண்ட் செய்ய ஒரு இலவச மென்பொருள்

    கணினியில் ஒரு குறிப்பிட்ட ஃ போல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (உதாரணமாக எம்பி 3 பாடல்கள்) பிரிண்ட் செய்ய அல்லது ஒரு டெக்ஸ்ட் ஃபைலாக மாற்ற Directory Print Version 1.0.0.0 என்ற ஒரு இலவச மென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

    இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யவேண்டிய அவசியமில்லை. DirPrint.exe என்ற இந்த கோப்பை திறந்தாலே போதுமானது.


    இதை இரட்டை கிளிக் செய்தால் திறக்கும் எக்ஸ்ப்ளோரர் போன்ற திரையில் இடது புற பேனில் உங்களுக்கு தேவையான ஃபோல்டரை தேர்வு செய்தால் வலது புற பேனில் அந்த குறிப்பிட்ட ஃபோல்டரில் உள்ள அனைத்து கோப்புகளின் பெயர்களும் பட்டியலிடப்படும். இனி உங்களுக்கு பிரிண்ட் தேவைப்பட்டால் பிரிண்ட் செய்து கொள்ளலாம், அல்லது ஒரு டெக்ஸ்ட் பைலாக வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.

    குறிப்பு:-
    எந்த மென்பொருளும் உபயோகிக்காமல் கோப்புகளின் லிஸ்டை பிரிண்ட் செய்வது எப்படி என்பதை பற்றி ஏற்கனவே நான் இட்ட பதிவை பார்க்கவும்.,

    ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?




    Monday, 7 September 2009

    விண்டோஸ் 7 ல் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது எப்படி?


    சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் பல சமயங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும். புதிதாக ஏதாவது மென்பொருள் பதிந்த பின்னரோ அல்லது புதிதாக ஏதாவது வன்பொருள் நிறுவிய பின்னரோ கணினியின் இயங்குதளம் பாதிக்கப்பட்டு சரிவர இயங்காமல் போய்விடுகிறது.

    இது போன்ற சமயங்களில் நாம் ஏற்கனவே ஏதாவது ஒரு தேதியில் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்கியிருந்தால், அந்த குறிப்பிட்ட தேதிக்கு கணினியை ரீஸ்டோர் செய்ய முடிவதால், நமது முக்கியமான டேட்டாக்களை இழக்காமலிருக்க முடியும். இந்த வசதி Windows Me பதிப்பிலிருந்து மைக்ரோ சாப்டினால் தரப்பட்டுள்ளது. (Windows 98 -ல் டாஸ் ப்ராம்ப்ட்டில் Scanreg / Restore என்ற கட்டளை கொடுத்து பயன் படுத்தலாம்.)

    எப்பொழுதுமே புதிதாக எதாவது மென்பொருள் அல்லது வன்பொருள் நிறுவுவதற்கு முன்னதாக ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது பாதுகாப்பானதாகும்.


    இந்த வசதி விண்டோஸ் எக்ஸ்பியில் All Programs -> Accessories -> System Tools -> System Restore சென்றால் கிடைக்கும்.

    விண்டோஸ் ஏழில் இந்த வசதி சற்று வித்தியாசமாக தரப்பட்டுள்ளது.

    My Computer ல் வலது கிளிக் செய்து Properties செல்லவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் இடதுபுற பேனில் System Protection என்பதை கிளிக் செய்யவும்.

    இனி திறக்கும் System Properties திரையில் System Protection என்ற டேபில் 'Create' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

    அடுத்து உங்களுக்கு இந்த ரீஸ்டோர் பாயிண்ட் எப்பொழுது எந்த நிகழ்விற்கு முன் உருவாக்கினோம் என்பதை நினைவூட்டும் வகையில் ஒரு விபரத்தை டைப் செய்து Create கிளிக் செய்யுங்கள்.

    அவ்வளவுதான்!